செய்திகள்

மஹா விஸ்வகர்மா விருது!

பிரம்மஸ்ரீ டாக்டர் K. கனகராஜ் M.B.B.S., DNB., சக்தி மருத்துவமனை, பென்னாகரம், தர்மபுரி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மாங்குடி மீனாட்சிபுரம் கிராமம், பிரம்மஸ்ரீ மா. காமாட்சி ஆச்சாரி – லட்சுமி, அம்மாள் தம்பதியினருக்கு 1960ல் தவப்புதல்வராகப் பிறந்தவர். டாக்டர் தனது சிறுவயது முதற்கொண்டே பொது மக்களுக்கு மருத்துவ தொண்டாற்ற விரும்பி M.B.B.S., & DNB., பட்டம் பெற்று 1983 முதல் பென்னாகரம், நகரத்தில் சக்தி மருத்துவமனையை நிறுவி அதன் மூலம் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.

இதுகாறும் சுமார் 18000 அறுவை சிகிச்சைகள் செய்ககோடு பல்வகை மருத்துவ சிறப்பு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் பென்னாகரத்தில் சிவசக்தி ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற செவிலியர் பயிலகத்தை சிறப்பாக நடத்தியும்,ஆண்டுதோறும்..

Read More

விஸ்வாஸ் வித்யா2022

பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 2 அக்டோபர் 2022 அன்று 19 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி  மகாலிங்கபுரத்தில்  உள்ள விஸ்வகர்மா கல்யாணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் திருநெல்வேலி பரசமய க்கோளரி நாதர் ஆதீனத்தின்  32ஆம் பீடாதிபதி  விஸ்வகர்மா ஜகத்குரு ஶ்ரீலஶ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் முதன்மை விருந்தினராக  கலந்து கொண்டு “மஹா விஸ்வகர்மா” விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகைகளும் அளித்து ஆசியுரை வழங்கினார்கள். முன்னதாக  விஸ்வாஸ்  மகளிர்  மங்கல விளக்கேற்றி வைக்க நிசாரி இசைப்பள்ளி ஆசிரியர் ஶ்ரீ சுரேன் அவர்களின்…


விஸ்வாஸ் இருபதாம் ஆண்டு விழா!

பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு (விஸ்வாஸ்) பொள்ளாச்சி இருபதாம் ஆண்டு துவக்கம்!

பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பின் (விஸ்வாஸ்) இருபதாம் ஆண்டு பெரும் விழாவாக கொண்டாட இருக்கிறது. சமூகத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் நமது சமூகம் முன்னேறினால் மட்டுமே விஸ்வகர்மா சமுகம் முன்னேறும் என்ற அடிப்படியில் கடந்த 2003 ஆம் ஆண்டு படித்த பணியில் உள்ள சுய தொழில் கொண்டவிஸ்வகர்மா சமூக நண்பர்களைக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பெற்றது. மாணவர்களை ஊக்குவிக்க கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டமான விஸ்வாஸ் வித்யா கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அதேபோன்று இலவச திருமண தகவல் மைய திட்டமான விஸ்வாஸ் விவாஹா மற்றும் சமூகத்தில் பெரிய சாதனைகள் படைத்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மஹா விஸ்வகர்மா விருது….


பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூல் வெளியீடு

ஶ்ரீஶ்ரீஶ்ரீ விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களின் பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூலை 10.4.2022 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கனகபுரா வாழும் கலை மையத்தின் தலைமை பீடத்தில் வாழும் கலை மைய நிறுவனர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

ஸ்வாமிஜி அவர்கள் இந்த பூவுலகை துறக்கும் முன்னர் அவர் எழுதிய இந்த நூலை அவரது சீடர்கள் சிரமேற்கொண்டு இந்த பணியினை சிறப்பாக முடித்துள்ளது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் டாக்டர் திரு கனகராஜன் ஐயா அவர்களும் கோவை விஸ்வபிரம்ம மையத்தின் நிறுவனரும் ஸ்வாமி அவர்களின் சீடருமான ஶ்ரீ தயாதாசன் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த வெளியீடு ஸ்வாமிகளுக்கு மட்டுமல்ல விஸ்வகர்மா சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்


விஸ்வகர்மா கல்யாண மண்டப நவீன மயமாக்கப்பட்ட உணவுக்கூடம் திறப்பு விழா!

விஸ்வாஸ் வித்யா 2019 நிகழ்ச்சியின் இணை நிகழ்வாக பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் முற்றிலும் புதிதாக ரூ 25 லட்சம் சிலவில் நவீனப்படுத்தப்பட்ட உணவுக்கூடம், சமையல் அறை & உணவுக்கூட வளாக மேற்கூரை ஆகியவற்றை கர்னாடக நந்தி ஆஸ்ரமம் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களும், பெண்ணாகரம் டாக்டர் கனகராஜ் அவர்களும் தங்களது திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.

பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தின் பெருமை மிக்க இந்த கல்யாண மண்டபம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றை திறம்பட நிர்வகித்து வரும் பொள்ளாச்சி விஸ்வப்ரம்ம சமூக


விஸ்வாஸ் வித்யா மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா 2019

விஸ்வாஸ் வித்யா – 2019

நம் விஸ்வகர்மா சமூக மாணவச்செல்வங்கள் பயனுறும் வகையில் 17 ஆவது ஆண்டு விஸ்வாஸ் வித்யா மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா கடந்த 22 செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் சிறப்பாகநடந்தேறியது.

விஸ்வாஸ் தலைவர் திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு கர்நாடகா நந்தி மலை ஶ்ரீ ஞானானந்த ஆஸ்ரமத்தின் ஸ்வாமிஜி பூஜ்யஶ்ரீ ஸ்வாமிசிவாத்மானந்ந சரஸ்வதி அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு அரக்கோணம் திரு.ஈ.மாணிக்கவேலு அவர்களுக்கு மஹா விஸ்வகர்மா விருதினை வழங்கி ஆசியுரை அளித்து சிறப்பித்தார்கள் .