அண்மைச் செய்திகள்

  • விஸ்வாஸ் இருபதாம் ஆண்டு விழா!

    விஸ்வாஸ் இருபதாம் ஆண்டு விழா!

    பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு (விஸ்வாஸ்) பொள்ளாச்சி இருபதாம் ஆண்டு துவக்கம்! பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பின் (விஸ்வாஸ்) இருபதாம் ஆண்டு பெரும் விழாவாக கொண்டாட இருக்கிறது. சமூகத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் நமது சமூகம் முன்னேறினால் மட்டுமே விஸ்வகர்மா சமுகம் முன்னேறும் என்ற அடிப்படியில் கடந்த 2003 ஆம் ஆண்டு படித்த பணியில் உள்ள சுய தொழில் கொண்டவிஸ்வகர்மா சமூக நண்பர்களைக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பெற்றது. மாணவர்களை ஊக்குவிக்க கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டமான விஸ்வாஸ் வித்யா கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதேபோன்று இலவச திருமண தகவல் மைய திட்டமான விஸ்வாஸ் விவாஹா மற்றும் சமூகத்தில் பெரிய சாதனைகள் படைத்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மஹா விஸ்வகர்மா விருது…......►
  • பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூல் வெளியீடு

    பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூல் வெளியீடு

    ஶ்ரீஶ்ரீஶ்ரீ விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களின் பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூலை 10.4.2022 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கனகபுரா வாழும் கலை மையத்தின் தலைமை பீடத்தில் வாழும் கலை மைய நிறுவனர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. ஸ்வாமிஜி அவர்கள் இந்த பூவுலகை துறக்கும் முன்னர் அவர் எழுதிய இந்த நூலை அவரது சீடர்கள் சிரமேற்கொண்டு இந்த பணியினை சிறப்பாக முடித்துள்ளது பாராட்ட வேண்டிய ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் டாக்டர் திரு கனகராஜன் ஐயா அவர்களும் கோவை விஸ்வபிரம்ம மையத்தின் நிறுவனரும் ஸ்வாமி அவர்களின் சீடருமான ஶ்ரீ தயாதாசன் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த வெளியீடு ஸ்வாமிகளுக்கு மட்டுமல்ல விஸ்வகர்மா சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்.....►