அளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்!

Shri.Markkandu Devarajah(L,L,B)   Mayuragoldsmith hand made jewellery manufecturer in Switzerland,

விஸ்வப்பிரம்ம குலத்தவரே முதன் முதலில் அளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்.அவர்களது கையில் இருந்தே பல அளவுமுரைகளும் ஏன் சிட்பசாஸ்திர அளவு முறையே இன்றும் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது.அதேபோல்  இன்றும் சில தற்காலிக தமிழர்கள் மத்தியில் தங்க செயின் வாங்கும் பொழுது எட்டுப்பிடி. ஆறுபிடி, பத்துப்பிடி. என கொடிக்கும்.அளவு சொல்வது பழந்தமிழர் அளவு முறை என்பது சங்ககாலம் தொட்டு நடை முறையில் உள்ளது. விரல் (கணிதம்) என்பது பண்டைய நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி…) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன் படுத்திய அலகுகளுள் விரற்கடை ,சாண் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.

இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம். 1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம் மூன்று அங்குலம் ஒரு பிடி தாலிக் கொடியை பிடிக் கணக்கில் அளப்பது முதலில் தாலி கட்டும் பொழுது தாலியை எட்டுப்பிடி செய்வது வழக்கம், அதாவது விஸ்வப்பிரம்மஸ்த சாச்திரமுரையில் முறையில் 8.என்பதன் கருத்து.அட்டமாசித்திகள் என்பது. ரிஷிகள் முனிவர்கள் யானிகள்.தங்களது தவத்தில் தியானத்தின் நிலையில் மந்திரசக்தியின் கட்டுப்பாட்டால் எந்த ஒரு இடையூறுமின்றி நிறைவேறும், அஷ்டமா எனும் பொழுது நமைச் சுற்றி என்பது எட்டுப்பிடியில் தாலிக் கொடி செய்யும் பொழுது அதில் அஸ்டமாசித்திகளும் உள்ளடக்கப்படுகிறது அந்தத் தாலிக்கொடியில் தாலியை அணியும் பெண்ணுக்கு.

அந்தத்தாலி கழுத்தில் இருக்கும் வரை அஸ்டமாசித்திகளும் எந்த இடையூறுமின்றி கட்டியவனும் கட்டியவளும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது விதி.அடங்கும் தூரத்தில் கணவனும் மனைவியும் வாழ்வதுதான் எட்டுப் பிடித் தாலிக்கொடி. எட்டுப்பிடியில் தாலிக்கொடி இருந்தால் அதைப்போடும் பெண்ணின்.நெஞ்சின் நடுப்பகுதியுடன் சங்கமிக்கும் அங்குதான் இருதயத்தின் நடுப்பகுதி.இருக்கிறது அணிந்திருக்கும் தாலியில் உள்ள பொன்னில் ஐந்து உலோகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.அவற்றின் ஊடாக செல்லும் கதிர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் தன்மை வாய்ந்தது.அதிலுள்ள உலோகங்கள் அனைத்தும் உடலில் இரத்தத்தில் ஒவ்வொரு வேலையைக் கையாளும்,தமயுள்ளது அதி விவிஞ்ஞான ஆராய்ச்சின் முடிவு.

அந்த அளவை விட கூடுவதோ குறைவதோ வேறு வேறு பலன்கள் உள்ளது இதில் இருதயத்தின் அதிகூடிய துடிப்பைக் கூட அடக்கும் தன்மை பொன்னில் செய்யும் தாலிக்கு உண்டு. அந்த ஐம்பொன்களாவன
1,தங்கம்
2,பித்தளை
3,வள்ளி
4,செம்பு
5,இரும்பு
இந்த உலோகங்களுடன் இரும்பு சேராது இதனால் இதற்கு தனி மரியாதை உண்டு.இது சனீஸ்வரனுக்கு உரியது.ராகு கேது.சனி இரும்புக்கும் செம்புக்கும் கட்டுப்பட்டவை இவை சரியான சாஸ்திர முறைப்படி தாலியில் இருப்பின் ஒன்பது கிரகங்களையும் இந்த உலோகங்கள் கட்டுப்படுத்தும்.

முற்காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் செம்பினால் காலில் தண்டை அணிவிப்பதைப் பார்த்திருப்பீர்கள் அந்தக்குழந்தையின் உடம்பில் செம்பின் கதிவீச்சு உடலின் ரத்தத்தில் சேர்ந்து அந்தக்குழந்தையின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் இரத்தம் சீராக இருப்பின் இதயத்துடிப்பு சீராக இருக்கும்.எந்த நிலையிலும் குழந்தை பயப்படாமல் இருக்கும். விஞ்ஞான ரீதியில் செம்பு கொப்பர் சல்பேட் என ஆவர்த்தன அட்டவணையில் அழைக்கப்படுகிறது.பல மருத்துவப் பொருட்கள் அதில் உட்பத்திசெயயப்படுகிறது. ஆயுர்வேத வைத்தியத்தில் செம்பை செந்தூரம் என்று அழைப்பார்கள்.இதில் இருந்து செய்யப்படும் பாசானக்கட்டால் விஷத்தைமுறிக்கும் தன்மை கொண்டது

இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் விஸ்வப்பிரம்ம குலத்தவரின் தொழிலின் மகிமையை.இந்தத் தொழில் பரம்பரை வெளிவந்தது அதை முறைப்படி செய்யின் அதுவே விஸ்வப்பிரம்ம குலத்தவரின்சாஸ்திர மருந்து எனும் கோட்பாட்டை வெளிப்படுத்தும். சிலருக்குப் பிள்ளைகள் பிறந்து நாட்சென்று கதைப்பது சிலபில்லைகளுக்கு கைகால்கள் வழங்காமை இவற்றிகெல்லாம் காரணம் தாலியை பொன்னில் செய்யாமல் தங்கத்தில் செய்வது, அதி இப்பொழுது நாகரீகமாகி விட்டது

சில இடங்களில் யாருக்காவது காகாவலிப்பு வந்தால் ஒரு இரும்பைக் கையில் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள் அப்படிக் கொடுத்ததுடன் அந்த வலிப்பு நின்றுவிடும் ஏனெனில் இரும்பில் இருக்கும் காந்தசக்தி கதிர்கள் உடனே இரத்தத்தை சீர்படுத்தும் அதன்போது சுவாசப் பையில் வரட்சி தன்மையும் செற்படும். சுவாசத்தை ஒருநிலைப்படுத்தி இரத்தோட்டத்தை சீர்செய்யும் இதுவும் ஏற்றுக்கொண்ட விஞ்ஞானக் கருத்தே, இன்னும் எட்டுப்பிடித் தாலிக்கொடியின் விளக்கம் நிறையவே உண்டு. ஆலயத்தில் அஸ்டாங்க. நமஸ்காரம் செய்து இறைவனை வழிபாட்டின் உடல் பொருள் ஆவி அனைத்தும் அற்பணித்து வேண்டுதல். அஸ்டலட்சுமி, அஸ்டமாசித்தி, அஸ்டசரஸ்வதி. அட்டமத்துச்சனி. இப்படி இந்த எட்டுக்கு உள்ள பூரண விளக்கம்.

1 Comment on "அளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*