பொள்ளாச்சியில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாட்டம்!

ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி பொள்ளாச்சி விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 23.09.2018 ஞாயிறு மாலை 4 மணி அளவில் பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக கல்யாண மண்டபத்தில் உள்ள விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் சந்நதியில் காமாட்சி அம்மன் மற்றும் விஸ்வகர்மா, காயத்திரி சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவிற்கு பொள்ளாச்சி  விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் திரு டி எஸ ஜி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொள்ளாச்சி விஸ்வப்ரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை தலைவர் திரு கே எஸ் என் கனகராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி விஸ்வாஸ் விஸ்வகர்மா நல அமைப்பு சார்பில் பொள்ளாச்சி விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. விழாவில் பொள்ளாச்சி விஸ்வகர்மா சார்பு அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.

 விழா ஏற்பாடுகளை பொள்ளாச்சி விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் நிர்வாகிகள்  செய்தனர் .விழாவில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

 

Be the first to comment on "பொள்ளாச்சியில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாட்டம்!"

Leave a comment

Your email address will not be published.


*