ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகருக்கு தங்கம்!

துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில் விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். காயத்தில் இருந்து மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும். துருக்கியில் உள்ள மெர்சின் நகரில், எப்ஐஜி ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பைப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டு 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தகுதிச்சுற்றில் 13.400 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார் கர்மாகர்.

கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கர்மாகர் 4-வது இடத்தைக் கைப்பற்றினார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 24வயதான தீபா கர்மாகர், உலகக் கோப்பைப் போட்டியில் பெறும் முதல் தங்கப்பதக்கம் இது. தீபா கர்மாகருடன் அவரின் பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி உடன் சென்றார்.

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு பின் தீபா முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 ஆண்டுகள் வரை ஓய்வு, பயிற்சிக்குபின் ,ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த காமென்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அதில் தீபா தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றினார். இந்நிலையில், உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.அடுத்து நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் தீபா கர்மாகரும் இடம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்கு தீபாகர்மாக்கருக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஒலிம்பிக் உட்பட எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் விஸ்வகர்மா தங்க மங்கை தங்கம் பெற பொள்ளாச்சி விஸ்வாஸ் வாழ்த்துகிறது!

Post Comment View Comments

1 Comment on "ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகருக்கு தங்கம்!"

  1. Congratulation Deepa Karmakru, we produ

Leave a comment

Your email address will not be published.


*