விஸ்வாஸ் இருபதாம் ஆண்டு விழா!

 

 

பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு (விஸ்வாஸ்) பொள்ளாச்சி இருபதாம் ஆண்டு துவக்கம்!

பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பின் (விஸ்வாஸ்) இருபதாம் ஆண்டு பெரும் விழாவாக கொண்டாட இருக்கிறது. சமூகத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் நமது சமூகம் முன்னேறினால் மட்டுமே விஸ்வகர்மா சமுகம் முன்னேறும் என்ற அடிப்படியில் கடந்த 2003 ஆம் ஆண்டு படித்த பணியில் உள்ள சுய தொழில் கொண்டவிஸ்வகர்மா சமூக நண்பர்களைக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பெற்றது. மாணவர்களை ஊக்குவிக்க கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டமான விஸ்வாஸ் வித்யா கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

படித்த பணியிலிருக்கும், பல்வேறு துறைகளில் பரிணமித்து சுயமாக தொழில் நடத்தி வரும் விஸ்வகர்மாக்களை ஒருங்கிணைத்து நமது சமூக மக்களுக்கு முடிந்த அளவிற்க்கு சேவை ஆற்றுவதை தனது லட்சியமாக கொண்டுள்ளது விஸ்வாஸ். (An association of educated, employed, & entrepreneurs of Vishwakarma community) படித்த பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் விஸ்வகர்மாக்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த அமைப்பு பயன்படும்.

அதேபோன்று இலவச திருமண தகவல் மைய திட்டமான விஸ்வாஸ் விவாஹா மற்றும் சமூகத்தில் பெரிய சாதனைகள் படைத்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மஹா விஸ்வகர்மா விருது ஆகிய திட்டங்களை விஸ்வாஸ் நிறைவேற்றி வருகிறது.

இதன் 20 ஆம் ஆண்டு விழாவினை செப்டம்பர் அக்டோபர்மாதங்களில் சிறப்பாக நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது!

Be the first to comment on "விஸ்வாஸ் இருபதாம் ஆண்டு விழா!"

Leave a comment

Your email address will not be published.


*