விஸ்வாஸ் வித்யா 2018 & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா!

நம் விஸ்வகர்மா சமூக ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவித் தொகைகள் மற்றும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளித்தும் நம் சமுதாயத்தில் தன் துறையில் சாதனை புரிந்து சமூக மேம்பாட்டில் ஈடுபாடு கொண்ட சாதனையாளர்களுக்கு  மஹா விஸ்வகர்மா எனும் உயரிய விருது ஆண்டுதோறும் பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு (விஸ்வாஸ்) வழங்கி வருகிறது.

 

16 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா மற்றும் மஹாவிஸ்வகர்மா விருது வழங்கும் விழா கடந்த 28.10.2018 அன்று பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டு கூடுதல் நிகழ்வாக வளர்ந்து வரும் இளம் விஸ்வகர்மா சாதனையாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர்.

 

விஸ்வாஸ் மகளிர் திருக்கரங்களால் குத்து விளக்கேற்றப்பட்டு துவக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு. தி.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழா தலைமையேற்று உரையாற்றிய விஸ்வாஸ் தலைவர் திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் அமைப்பின் நோக்கம், ஆக்கம், வளர்ச்சி குறித்தும் எதிர்கால திட்டங்கள்  குறித்தும் எடுத்துரைத்தார்.

 

 

நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர் இஸ்ரோ விஞ்ஞானி பிரம்மஶ்ரீ கோ.முத்துராமன் அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதினை பிரம்மஶ்ரீ அப்பர் லட்சுமணனுக்கு வழங்கினார். முதன்மை விருந்தினர் இஸ்ரோ விஞ்ஞானி  கோ முத்துராமன் அவர்கள் தம் உரையில் நமது சமுதாய மக்களின் குறிப்பாக இளைஞர்களின் இன்றைய நிலைப்பாடு பற்றியும் நமது சாஸ்திரங்கள் மற்றும் வேத கணிதத்தின் அவசியம் குறித்தும் சிறப்பரையாற்றினார். விழாவில் நமது சமூக எழுத்தாளர்கள் எழுதிய இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

 

திருப்பூர் திரு.முருகானந்தன் அவர்கள் எழுதிய “உன்னோடு கொஞ்சம்  பேசலாமா ?” என்ற நூலும், திண்டுக்கல் திரு.தாமரைக்கண்ணன் எழுதிய “மயன் படைத்த இசைக்கருவிகள்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.

 

மஹா விஸ்வகர்மா விருதினை பெற்று நமக்கு பெருமை சேர்த்த சென்னை வேதிக் பவுண்டேசன் நிறுவனர் பிரம்மஶ்ரீ அப்பர் இலட்சுமணன் அவர்கள் நம் சமூக ஐந்தொழிலாளர்கள் குறிப்பாக தச்சு தொழிலாளர்களின் இன்றைய நிலை மற்றும் அதன் தீர்வுகள் குறித்து பேசியதோடு மாணவர்களுக்கு மிக அவசியமான மன ஒருமைப்பாடு , தனி மனித ஒழுக்கம் , கலாச்சார விழிப்புணர்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் தனது ஏற்புரையில் வழங்கி சிறப்பித்தார்.

 

மாணவர்கட்கு சுடல்டெக் நிர்வாக இயக்குனர் திரு எஸ்.பாலமுருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ஶ்ரீ காமாட்சிஅம்மன் கோயில் அறக்கட்டளைத் தலைவர் திரு. கே.எஸ்.என். கனகராஜ் அவர்கள் பொள்ளாச்சி நம் சமுதாய வளர்ச்சி நிகழ்வுகள் மற்றும் சமுதாய மேம்பாடு குறித்தும் உரையாற்றினார் மாணவர்கள் மேம்பட திருப்பூர் திரு முருகானந்தன் சில வழி முறைகளை சுட்டிக்காட்டி பேசினார்.

 

இளம் சாதனையாளர்கள் வரிசையில் புகைப்பட ஆர்வலர் திரு மது ஜெகதீஷ், ஆர்டிஸ்ட் திரு பாபு, கோவில் தேர் சக்கரம் செய்யும் தொழிலாளி திரு கோபால் எழுத்தாளர்கள் திரு முருகானந்தம் திரு தாமைரைக் கண்ணன் ,இந்தூர் ஐ ஐ எம்மிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் சஞ்சை கிஷோர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்

 

விழாவில் 27 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு லட்சம் ருபாய் அளவிற்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் 30 மாணவ மாணவியர்கட்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. விஸ்வாஸ் இணைச்செயலர் திரு.மதுராந்தகன் அவர்கள் அனைவருக்கும் நன்றி மலர்களை உரித்தாக்க தேசிய கீதத்துடன் விஸ்வாஸ் வித்யா 2018 இனிதே நிறைவுற்றது.  

 

விழாவினை விஸ்வாஸ் செயலாளர் திரு சி எஸ் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், பாலசுப்ரமணியன், சுப்பாரத்தினம், ஒருங்கிணைப்பாளர் பி பாலன், செயலாளர் திருநாவுக்கரசு இணை செயலாளர் மது, பொருளாளர் கோ.மோகனசுந்தரம் செயற்குழு உறுப்பினர்கள் தி விவேகானந்தன், பி ஶ்ரீதரன், கோ.ராதா கிருஷ்ணன், சிவசுப்ரமணியன், பிரகாஷ் சசி(எ) வெங்கடாச்சலம் மற்றும் மண்டப மேலாளர் திரு பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். சகோதர அமைப்பை சார்ந்த  திரு குமார் திரு ராமதாஸ் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை கவனித்து விழா சிறப்பாக நடைபெற உதவினர்.

 

விழாவில் விஸ்வாஸ் மகளிர் அணியினர் மற்றும் பொள்ளாச்சி விஸ்வகர்மா சார்பு அமைப்பினர் கலந்து கொண்டனர். நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்கட்கு தங்கள் திருக்கரங்களால் உதவித்தொகைகளை வழங்கி மகிழ்ந்தனர். உள்ளூர் மற்றும் கோவை திருப்பூர் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல வெளியூர் அன்பர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விஸ்வாஸ் வித்யா 2018 

 

பதிவு: சி எஸ் திருநாவுக்கரசு

 

Be the first to comment on "விஸ்வாஸ் வித்யா 2018 & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா!"

Leave a comment

Your email address will not be published.


*