விஸ்வப்ரம்மம்

விஸ்வகர்மா என்ற இந்த இனம் கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர், பத்தர், ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் – கொல்லர், பாத்திரவேலை – கண்னார், மரவேலை – தச்சர், சிற்பவேலை – சிற்பி, தங்கநகை தொழில் – பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம்.

விஸ்வப்பிரம்மம் என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். [1] எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் விராட் விஸ்வப்பிரம்மம் என்றும் அறியப்படுகிறார்.

ஐந்து முகங்களையும், பத்து கைகளையும், நாகாபரணம் மற்றும் புலியுடை தரித்து விஸ்வபிரம்மம் காட்சியளிக்கிறார். அவர் வலது கைகளில் சூலம், சக்கரம், அம்பு, நாகாபரணம், மாலை ஆகியவையும், இடது கைகளில் நாக உடுக்கை, சங்கு, வில், வீணை ஆகியவற்றுடன் செந்தாமரையில் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய ஐந்து விஸ்வகர்மா ரிசிகளும் அவரிடம் படைப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

விசுவகர்மன் என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.

கதாயுதம் – கதன் எனும் அசுரனை திருமால் கொன்றார். அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதம் என்பதை விசுவகர்மா செய்து தந்தார் என அக்கினி புராணம் கூறுகிறது.[1]

சிவபெருமானுக்காக திரிசூலம், திருமாலுக்காக சக்ராயுதம், முருகனுக்காக வேல், குபேரனுக்காக சிவிகை ஆகிய ஆயுதங்களை விசுவகர்மா உருவாக்கி தந்தாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.[2]

பிருந்தாவனத்தில் வீடுகளையும், இந்திரனுக்காக அமராவதி நகரை புதுப்பித்ததாகவும் பிரம்ம புராணம் கூறுகிறது.[3]

இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் சாயா தேவி என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.[4]

இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.

சிவன் பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், திருமாலின் கிருஷ்ண அவதாரத்தின் பொழுது துவாரகை மற்றும் எமபுரத்தினை அமைத்து தந்தார் எனவும் இந்து நூல்கள் குறிப்படுகின்றன. அத்துடன் சேது பாலத்தினை அமைக்க இராமருக்கு துணையாக நளன் என்ற வானரத்தினை இவர் படைத்தாகவும் கூறப்படுகிறது.

தகவல்: கீதா மதுராந்தகன்

Be the first to comment on "விஸ்வப்ரம்மம்"

Leave a comment

Your email address will not be published.


*