விஸ்வாஸ் வித்யா 2016

பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் சார்பாக மாணவர்களுக்கான 14 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா 2016 கல்வி உதவிதொகை ,சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 15,2016 அன்று பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது.

விழாவிற்கு விஸ்வாஸ் தலைவர் திரு தர்மபூபதி ஆறுமுகம் தலைமை வகித்தார்.திரு பாலன் வரவேற்புரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக மதுரை எல் ஐ சி மேனாள்  மேலாளர் திரு வெ.தியாகராசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேனாள் பி எஸ் என் எல் நிதி மேலான்மை முதுமேலாளர் திரு நெல்லை கண்ணியப்பன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விஸ்வகர்மா கல்யாண மண்டப அறக்கட்டளை தலைவர் திரு கனகராஜ் அவர்கள் பரிசு பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்  சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கட்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பொறியியற் பட்டப் படிப்பு, டிப்ளமா படிப்பு, கலைக்கல்லூரி பட்டப் படிப்பு மாணவ மாணவ மாணவியர்கட்கு  விஸ்வகர்மா பெரியோர்கள் வழங்கிய உதவித் தொகைகள் மாணவ மாணவியர்கட்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை திரு விவேகானந்தன், திரு திருநாவுக்கரசு ஆகியோர் தொகுத்தளித்தனர் இணைச்செயலாளர் திரு மதுராந்தகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

விழா ஏற்பாடுகளை விஸ்வாஸ் மத்திய குழு  நிர்வாகிகள் துணைத்தலைவர்கள்  திரு ஜெயப்பிரகாஷ் திரு பாலசுப்ரமண்யம், திரு சுப்பாரத்தினம், செயலாளர்கள் திரு திருநாவுக்கரசு இணைசெயலாளர் திரு மதுராந்தகன் பொருளாளர் திரு மோகனசுந்தரம் ஒருங்கிணைப்பாளர்  திரு பி பாலன் திட்டக் குழு உறுப்பினர்கள் திரு விவேகானந்தன், திரு சிவசுப்ரமண்யன் திரு பிரகாஷ் செயற்குழு உறுப்பினர்கள், திரு ராதாகிருஷ்ணன் திரு சசி வெங்கடாச்சலம், திரு ஸ்ரீதரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர் நிகழ்ச்சிகளைக் காண: விஸ்வாஸ் வித்யா 2016

 

1 Comment on "விஸ்வாஸ் வித்யா 2016"

  1. SK MUTHURAJ | May 1, 2017 at 12:11 pm | Reply

    NOBLE ACTION TO THE MOST NEEDY COMMUNITY AT THE MOST APPROPRIATE TIME. DESERVES APPRECIATION BY ALL.

Leave a comment

Your email address will not be published.


*