அண்மைச்செய்திகள்

  • விஸ்வாஸ் வித்யா 2025 மஹாவிஸ்வகர்மா விருது சௌ மா கல்வி நிறுவனங்களின் தலைவர் சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது

    பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 5 அக்டோபர் 2025 அன்று 22 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி மகாலிங்கபுரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் சென்னை இந்தியன் ஆர்த்தோகேர் சர்ஜிக்கல்ஸ் நிறுவனர் தலைவர் மற்றும் சிறந்த ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ ரெங்கநாதன் நடராஜன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு "மஹா விஸ்வகர்மா" விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,கல்வி உதவித்தொகைகளும் அளித்து சிறப்புரை வழங்கினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் மங்கல விளக்கேற்றி வைக்க விஸ்வாஸ் ம.தொடர்பு அலுவலர் திரு. அன்பழகன் பாடிய இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நல்கிட சிறப்பு விருந்தினர்களுக்கு விஸ்வாஸ் உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டது. விஸ்வாஸ் அமைப்பின் 22 ஆண்டுகால வளர்ச்சியையும், எதிர்வரும் செயல்பாடுகளை குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் முன்மாதிரி தலைவர் திரு. ஆறு. தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் அழகுற எடுத்துரைத்தார்.........>>>>>>>>»