விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் பொள்ளாச்சி சார்பாக 15.10.2023 அன்று பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் விஸ்வாஸ் வித்யா 2023 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிரபல பின்னனிப்பாடகரும், இசையமைப்பாளருமான பிரம்மஸ்ரீ டி.எல்.மஹாராஜன் அவர்கள் முதண்மை விருந்தினராகக் கலந்து 2023 ஆம் ஆண்டிற்கான மஹாவிஸ்வகர்மா விருதினையும், மாணவச்செல்வங்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த விழாவில் விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு தி.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். விஸ்வாஸ் அமைப்பின் இருபதாண்டு கால செயல்பாடுகளையும், நோக்கங்களையும் தலைவர் பிரம்மஸ்ரீ திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தார். பெங்களூரு விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் பிரம்மஸ்ரீ கே.பி.நஞ்சுன்டி விஸ்வகர்மா அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதினை பெற்றுக்கொண்டு, நமது விஸ்வகர்ம சமுதாய மக்கள் கல்வி அறிவு சமூக முன்னேற்றத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் குலத்திற்கான அரசு சலுகைகள், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கவனமாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு சமூகத்தை முன்னேற்ற வேண்டும், என சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
>>>>>>>>»
கருத்துக்குவியல்கள்