காந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை!

காந்திக்கு வெள்ளி ராட்டை

07.02.1934ல் மகாத்மா காந்தி பொள்ளாச்சி நகருக்கு வருகை புரிந்தார். வரலாற்றில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. “தமிழ் நாட்டில் காந்தி” என்ற புத்தகத்தில் பொள்ளாச்சி வருகை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி

““போத்தனுரிலிருந்து சரியான நேரத்திற்கு புறப்பட்ட ரயில் வண்டி கிணற்றுக்கடவு நல்லட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் மக்கள் காந்தியடிகளுக்கு அளித்த வரவேற்புரையையும் பணமுடிப்பையும் பெற்றுக் கொண்டு பொள்ளாச்சி வந்து சேர முக்கால் மணி நேரம் தாமதமாகி விட்டது இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். பெரிய சந்தையில் நடந்த அந்த பொதுக்கூட்டத்தில் நகராட்சி சார்பாகவும் தாலூகா போர்டு சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பணமுடிப்புக்களும் வரவேற்புரைகளும் அளிக்கப்பெற்றன. பொள்ளாச்சி விஸ்வகர்மா மக்களின் சார்பில் விஸ்வகர்மா சங்கத்தினர் வெள்ளியால் செய்யப்பட்ட ராட்டையை காந்திக்கு அளித்தனர்”
  • “தமிழ் நாட்டில் காந்தி”- விகடன் பிரசுரம் வெளியீடு