கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இசை தூண்கள்!

படத்தில்  நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். இது போன்ற பல  இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி  பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய  கோவில்களில் காணலாம்.
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து  ஏழு தனித்தனி  சிறிய  தூண்களாக  வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை  தட்டினால்  ” சப்த ஸ்வரங்களான  ” ச, ரி ,க, ம, ப, த , நி ”  என்ற  தனித்தனி  ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை  சுற்றி  இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதை  சுற்றியுள்ள  சிறிய  தூண்களில்   ” மிருதங்கம்,  கடம்,  சலங்கை , வீணை,  மணி ” போன்ற  இசைக் கருவிகளின்,   இசையை  தருகின்றது
அப்படி  என்றால்  ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில்  இசைக்கும். இதை தட்டுவதால் நம்  விரல்களுக்கு எந்த  வலியும்  ஏற்படுவதில்லை,    உண்மையான  இசை  ஞானம்   உள்ளவர்கள்    இதை  தட்டினால்  இசைக்கருவியில்   இருந்து  வரும்  இசையை  விட  மிக  துல்லியமாக  இது  இசைக்கின்றது.  சரி  இது  எதற்காக  பயன்பட்டது ?  அந்தக்காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் இதை கோயில்  விழாக்களின்   போது,  ஒரு இசைக்  கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது   நமக்கு  இன்னும்  சிறப்பை  சேர்க்கின்றது .
இந்த இசைத் தூண்களை  “மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில்  இருந்து  வரும்  சப்தமும்,  ஒவ்வெரு  விதமான ” அலைக் கற்றையை  ” உருவாக்குகின்றது. எந்ததொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி  விஞ்ஞானி  ( கல்பாக்கம் ) திரு. “அனிஷ்  குமார் ” என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள “இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின்  வடிவமைப்பு  மற்றும்  இந்த  தூண்களில்  இருந்து  எழும்  ஒலியை பதிவு செய்து அளவிடுவது.  “In situ metallography “(used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின்  நுண்ணிய வடிவமைப்பு  மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆராய்ந்ததில்  இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப் பொருள் ” என தெரிய வந்தது. ” spectral analysis “என்ற  ஆராய்ச்சிப்படி  இந்த தூண்களில் வரும் இசையானது ” தன்மைக்கேற்ப  இசைந்து கொடுக்கும் அலைக் கற்றயினால் ” சப்தம் உருவாவதாக தெரிவித்தார்கள்.  சப்தம்  உருவாவதே  ஒரு  அதிசயாமான   விஷயம்  என்பது  ஒரு புறம் இருக்க, இது  எப்படி அன்றைய  பெருந்தச்சர்கள்  காற்றை அறிந்து அளந்து  ஒரு விரலால் தட்டினாலே இசை  எழ வைத்தார்கள் என மிரண்டு  போனார்கள். இன்று வரை  ரகசியமே!
நினைவில் கொள்ளுங்கள், நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்.  இசை என்பது காற்றை  உள் வாங்கி  ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே  நுழைந்து  இசையை உருவாக்குவதற்கென  ஒரு சிறு துவாரதைக் கூட உருவாக்கவில்லை.
இதைப் பற்றின ஆராய்ச்சிக்கு  இந்த ” இசைத் தூண்கள் ”  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  மேல்   வெறும்  ஆச்சர்யத்தை மட்டுமே  பதிலாய்  தந்து  கொண்டிருக்கின்றது.  அடுத்த  ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே  இருந்தாலும்  மனிதர்களாக  பிறப்போமா  என  தெரியவில்லை?  அதுவும்  குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இது போன்ற  இடங்களுக்கு சென்று நம்  முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம்பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை   என்றாலும்  அவர்கள்  தந்த மொழியையும்,  கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்.
படத்தில்  நெல்லையப்பர் கோவிலின் இசை தூண் போன்ற பல கோவிலில்  உள்ளது. ஆனால் இதை போன்ற இசை தூண்கள் #மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி  பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய  கோவில்களில் காணலாம்.
இசைத் தூண்கள் உள்ள  கோவில்கள் #அழகர்_கோவில் #ஆழ்வார்_திருநகர் #களக்காடு_குற்றாலம் #சுசீந்திரம்_செண்பக_நல்லூர் (துளை இசை) #தட்புத்திரி _தாடிக்_கொம்பு (வேத ஒளி) #சுந்தரராஜப்_பெருமாள்_கோவில்  கருவரைக்கு செல்லும் வழியில்  உள்ள மண்டபம் #திருப்பதி #திருவனந்தபுரம் #திருநெல்வேலி #தென்காசி பெங்களூர்   ராமராசன் பேட்டை #மதுரை_வெப்பாச்சி #ஹம்பி (இசைத்தூண்கள்-துளை    இசைத்   தூண்கள்
நன்றி:குரு ஜெயசந்திரன்