போகரின் காலம்!

போகரின் காலம்:

இவருடைய காலம் பற்றி‌  பல்வேறு கருத்துக்கள்‌ நிலவுகின்றன
1, எசுநாதருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
2. 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
3, கிபி, முதல்‌ நூற்றாண்டின் பிற்பகுதி
4, கிபி,15 ஆம்‌ நூற்றாண்டு
5.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
இப்படி பலவாறு கூறப்பட்டாலும் சரியான ஆதாரம் இல்லை.ஆனால் அவருடைய காலம் 15 ஆம் நூற்றாண்டுஎன்பதற்கான ஆவணங்கள் ஒத்துப் போகின்றன. போகரின் காலத்தை அறிந்த கொள்ள வேண்டுமானால் முதன்மை சான்றுகளை அவர்தம் நூல்களில் இருந்தேதேடுதல் சிறப்பு.
போகர்‌ ஏழாயிரத்தில்‌, 15-16 ஆம்‌ நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வழக்குகள்‌ மிகுதியாக உள்ளன. இட்டிலி (3:374, 2:93 2:387) எருமுட்டை (3:286) சடுதி (3:199) மகாச்சாரம்‌ (6:570) சொச்சம்‌,பராக்கு (2:454 பண்டு(பழம்‌), சீசா (3:128) போன்ற சொல்‌ வழக்குகள்‌ குறிப்பிடத்‌க்கன. மதாச்சாரம்‌, சொச்சம்‌ போன்ற சொல்‌வழக்குகள்‌ அறப்பளிசர சதகத்திலும் காணப்படுவதால்‌, இவர்‌ காலம்‌ சி.பி, 1701க்கு முற்பட்டதென்பது தெளிவு
சத்த காண்டத்தல்‌ கானப்படும்‌ துட்டு,கிளாஸ் போன்ற  சொற்கள்‌ 16ஆம்‌ நூற்றாண்டில் தான்‌ தமிழில் புகுந்தன.ஆங்கில் போன்ற ஆங்கில சொற்கள் ஆங்கிலேய வருகைக்கு பிறகே புகுந்திருக்க வேண்டும்
15-ஆம்‌ தூற்றாண்டை‌ சேர்ந்த பற்பம்‌ மரியாதை போன்ற சொற்கள் இவரால்‌ கையாளப்படுகிறது., எனவே இவரது காலம் 15-ஆம்‌ நூற்றாண்டுக்கு‌ பிற்பட்டதென்பது தெளிவு
போகர்‌ சன்னதியில்‌ போகர்‌ வழிபட்டதாக குறிக்கப்பட்டு வழிபாட்டில்‌ வைக்கப்பட்டுள்ள உமாமகேஸ்வரி, துர்க்கை, முருகன்‌, சிவன்‌,செப்புத்‌ திருமேனிகள் 16 ஆம்நூற்றாண்ட சேர்ந்தவை.
எனவே இவரது காலம்‌ 16-ஆம்‌ நூற்றாண்டுக்கு உட்பட்டது என்பது தெளிவு. இவரது நூலில் குமரகுருபரர் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.இவர்‌ சூரியனை ஒத்த பிரகாசத்துடன்‌ விளங்கினார் என்றும் கபிலமுனி, கொங்கணர் போன்றோர்‌ இவரிடம் ஆசி பெற்றுள்ளனர் என்றும் தனுஷ்கோடி பக்கம் இவரது ஆசிரமம்‌ உள்ளது என்றும்‌போகரும்‌ இவரைக்‌ கன்டு ஆசி பெற்றுள்ளார் எனவும் குமரகுருபர ஸ்வாமிகளை தமிழ் முனிவர்கள் பலர் ‌சூழ்ந்து உள்ளனர்‌ என்றும்‌ குறிப்புகள்‌ உள்ளது
குமரகுருபரர்‌ திருமலை நாயக்கர்‌ காலத்தவர்‌ சிறந்த தமிழ்ப்‌புலவர்‌, இளமையில்‌ துறவு பூண்டு ஆசிரமம்‌ அனமத்து வாழ்ந்தவர்‌, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்‌, நீதிநெறிவிளக்கம்‌, கந்தர்‌ கலி வெண்பா போன்ற நூல்களின் ஆசிரியர்‌, குருபரர்‌ காலம்‌ திருமலை நாயக்கரின்‌ காலமாகக்‌ குறிப்பிடப்படுவதால்‌ இவரிடம்‌ ஆசிபெற்ற போகரும்‌ இக்காலக்கட்டத்தில்‌ (கி, பி. 1623-1659) வாழ்ந்துள்ளார்‌ என்பது உறுதியாகிறது.இறுதியாக போகர் காலத்தை அறிய  இரண்டு சான்றுகளை காட்டலாம்.
1.புலிப்பாணியின் பழனி செப்பேடு
2.அதிவீர ராம பாண்டியனை(கிபி1565-1600) பற்றிய செய்திகள்
புலிப்பாணியின் பழனி செப்பேடு:
தற்போது பழனியில்‌ முருகள்‌ கோயிலில்‌ உள்ள திருமலை நாயக்கர்‌ காலச்செப்பேடு. போகரின்‌ மாணவரான புலிப்பாணியை பற்றிக்‌ குறிக்கிறது. இச்செப்‌பேடு மூலச்‌ செப்‌பேட்டின்‌ நகலாகத் தோன்றினாலும் மூலப்படி சிதையாமல் எழுதப்பட்டுள்ளது.
1) திருமலை நாயக்கர்‌ காலத்தில்‌ தளபதி ராமப்‌பைய்யன்‌ பழனி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து ஒரு அஷ்ட பந்தன கும்பாபிசேகம்‌ நடத்தியுள்ளாம்‌,
2)இந்தத்‌ தலத்தை போகரின் சீடரான புலிப்பாணி பாத்திர சுவாமிகள்‌ பூஜை செய்து வந்தார்கள்‌
3)இராமப்பையச்‌ பிராமணர்‌ அல்லாத புலிப்பாணியிடம்‌ பிரசாதம்‌ வாங்க விரும்பாது கொடுமுடி சரஸ்வதி அய்யனைத்‌ தலைமையாகக்‌ கொண்ட 5 பிராமணர்களிடம் ‌ வழிபாட்டுரிமையைக்‌ கொடுக்கிறான், இச்‌செய்திகள்‌ இச்செப்பேட்டில்‌ காணப்படுகின்றன. இச்செப்‌பேட்டின்படி புலிப்பானியின்‌ காலம்‌ திருமலைநாயக்கரின்‌ காலமான கி.பி, 1600-1650 என அறிய முடிகிறது.போகரை, புலிப்பாணிக்கு 50 வயது மூத்தவராகக்‌கொண்டால்‌ கி.பி, 1550-1650 வாழ்ந்தவர்‌ எனத்‌ துணியலாம்‌,
அதிவீரராம பாண்டியர்:
காலம்: கிபி1565-1600 போகரின் நூல்களில் அதிவீரராம பாண்டியரைப் பற்றி மூன்று இடங்களில் குறிப்புகள்காணப்படுகிறது. சதாசிவ ரிஷி என்பவர் அதிவீரராம பாண்டியனின் ஆட்சியில் தமிழகம் வந்துள்ளார்.அவரை போகர் கண்டு பேசியுள்ளார்.அதிவீரராம பாண்டியனின் ஆட்சியில் அந்த நாட்டிற்கு சென்று மன்னரை நேரில் கண்டு போகர் உரையாடியுள்ளார். அதிவீரராம பாண்டியன் கிபி1564-1604 வரை ஆட்சிபுரிந்துள்ளார். தென்காசி கோயிலைக் கட்டியவரும் அவரே! கர்மபுராணம்,வாயு புராணம், காசிக்காண்டம், இலிங்கபுராணம்னைடதம்கொக்கோகம் போன்ற நூல்களை பாடியுள்ளார். இவரது காலத்திலும்போகர் வாழ்ந்துள்ளார் என்பதால் உறுதியாக இவரது காலம் கிபி 1550-1650 க்குள் என்பது உறுதியாகிறது.