” விஸ்வகர்ம ப்ராமண வம்ச ப்ரகாசிகை” நூல் தோன்றிய வரலாறு!
1919ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கு நடைபெறும் போது, ”விஸ்வகர்மர்கள் துவிஜர்களா?” என்ற விவாதம் நடைபெற்றது. அதில் நமது தரப்பிற்கு வாதிட்டவர் ஸ்ரீ கவிசேகர பண்டித வட்டேபாடி நிரஞ்சன சாஸ்திரியார் அவர்கள்.. இவர் தெனாலியில் வசித்த ஆந்திர, சமஸ்கிருத விற்பன்னர்.
சென்னை உயர்நீ திமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த Mr.KOOTS TRAATAR என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு “பைபிள்” என்ற உலகம் கொண்டாடுகிற விவிலிய நூலை போல் விஸ்வகர்ம ப்ராமணர்களுக்குஎன்று ஒரு நூல் இல்லையான கேட்டார்.அவ்வாறு கேட்டதின் விளைவே இன்று நம் சமுதாயத்தின் மாபெரும் பொக்கிஷமான “விஸ்வகர்ம ப்ராமண வம்சா ப்ரகாசிகை” என்னும் நூல் ஆகும்.
நமது விஸ்வப்ராமண பரம்பரையில் ஓவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்கள் தோன்றி மிகப்பெரிய சாதனைகளை சாதித்து விட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் பெரும் சாதனைக்கு உரியவர் ப்ரம்மஸ்ரீ T.M தெய்வசிகாமணி ஆச்சாரியார் F.R.S.A( LONDON) அவர்கள். இவரை பற்றிய முழுமையான தகவல்கள் ஆவனப்படுத்தப்படவில்லை என்பது பெரிய குறையாகும்.
1903 ஆண்டு கோயமுத்தூர் ப்ரம்ம ஸ்ரீ C.R சுப்பராய ஆச்சாரியா அவர்களின் அன்பு மாணவனாக இருந்து விஸ்வப்ராமண குலத்தை குறித்து சர்ச்சையும், விவாதங்களையும் நடத்தி வந்துள்ளார் ப்ரம்மஸ்ரீ T.M தெய்வசிகாமணி ஆச்சாரியார் F.R.S.A (LONDON) அவர்கள். C.R சுப்பராய ஆச்சாரியா அவர்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். 1928 ம் ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி சென்னை வில்லிங்டன் ரீடிங் ரூமில் விஸ்வகர்ம பண்டிதர்கள் கூட்டம் ஒன்றை கூட்டி 40 குலப்பிரச்சனைகள் அடங்கிய கேள்வித்தாள் ஒன்றையும் அச்சிட்டு பண்டிதர்களுக்கும், இதர ப்ரமூகர்களுக்கும் கொடுத்து அதற்க்கான பதிலை கேட்டார். அந்த நேரத்திலும் பதில்கள் வெகுவாக கிடைக்கப்பெறவில்லை. பின்னர் அக்கூட்டத்தை கூட்டியதற்கு ஒரு காரணமாக அமைந்தது, நீதிபதி கூட்ஸ் விஸ்வப்ப்ராமணர்களுக்கு ஒரு நூல் இருந்ததா என்ற வினா!
பிறகு ஏற்கனவே கேட்கப்பட்ட 40 கேள்விகளுக்கு மங்கலம்பேட்டை ப்ரம்ம ஸ்ரீ கூந்தலூர் சுப்ரமண்ய ஆச்சாரியார் அவர்களின் மூலமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. பின்னர் இதன் விடைகளை “விஸ்வகலாநிதி” என்னும் நாளேட்டில் பிரசுரம் செய்தார். இந்த விஸ்வகலாநிதி என்னும் நாளேட்டின் மூலமாக 1915 ம் ஆண்டு கும்பகோணத்தில், ”தென்னிந்திய விஸ்வகர்ம கான்பரன்ஸ்”இயக்கம், அந்த இயக்க தந்தையாரான ப்ரம்மஸ்ரீ T.M முக்கண்ணாச்சாரியாரால் ஆரம்பிக்கப்பட்டு முதல் மகாநாடு 1950ம் ஆண்டு 16 வது விஸ்வகர்ம கான்பரன்ஸ் சென்னையில் நடத்தி “விஸ்வகலாநிதி” என்னும் சமூக பத்திரிகை மீளவும் ஆரம்பித்தது. கடந்த 5000 ஆண்டுகளாக படிப்படியாக கீழ் நிலைமைக்கு வந்துவிட்ட பெளருஷேய(விஸ்பப்ரம்ம) ப்ராமணர மரபினரை அவர்கள் இழந்திருக்கும் பூர்வீக உச்ச நிலையை அடையச்செய்ய வேண்டும் என்பதே விஸ்வகர்ம கான்பரன்ஸ் இயக்கத்தின் அடிப்படையான நோக்கமாக அமைந்தது.
இந்த காலகட்டத்தில் அதாவது 1934 ம் ஆண்டு வட்டேபாடி நிரஞ்சன சாஸ்திரி மூலமாக தெலுங்கில் வெளிவந்த” விஸ்வகர்ம ப்ராமண வம்ஸகமு” என்னும் தெலுங்கு புத்தகத்தை அடிப்படையான ஆதாரமாக கொண்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது….
இறுதியாக 1950 ம் ஆண்டு அக்டோபர் மாதம் T.முக்கண் ஆச்சாரியார் அறக்கட்டளை மூலம் வெளிவந்ததுஇதன் துணை நூலாசிரியராக மங்கலம்பேட்டை ப்ரம்ம ஸ்ரீ கூந்தலூர் சுப்ரமண்ய ஆச்சாரியார் அவர்கள் உதவிசெய்தார். ஆருஷேய ப்ராமணர்களின் கை ஓங்கியிருந்த காலகட்டத்தில் முதன் முதலாக ”விஸ்வகர்ம ப்ராமணவம்ச ப்ரகாசிகை” என்னும் நூல் அமரர் ப்ரம்ம ஸ்ரீ T.M தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்களால் பல இன்னல்களையும் தாண்டி வெளிவந்தது.
அன்று மட்டும் இந்த புத்தகங்கள் எழுதப்படவில்லை எனில் இன்றும் நாம், நம் ப்ராமணர்கள் என்பதையும், நமக்கு உண்டான அழிந்து போன தகவல்களையும் தேடிக்கொண்டு தான் இருந்திருப்போம்.. என்றாலும் இந்த விஸ்வகர்ம ப்ராமண சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளது.