உலக வரலாற்றில் மானுடவியல் சரித்திரம் எண்ணுதற்கரிய இறைவனின் படைப்பில் அற்புதமான படைப்பும் மானிடப்படைப்பே இம்மானிடம் உலகம் எங்கும் பல இன பல மரபு வழி மக்களாக பரிணாமம் பெற்றிருக்கின்றார்கள் இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான பிறவியாக மனிதன் தன்னையும் தான்சார்ந்த சமுகத்தையும் பல நெறி பட்ட மரபு வழிப்பண்புகளோடு சமூகக்கட்டமைப்பை ஏற்படுத்தினான்
அக்கட்டமைப்பு குலங்களாக குடிகளாக வளர்சி கண்டது. இதில் தொழில் சார்சமுகம் தொழிற் பெயரோடு ஜாதியாக உருவாக்கம் பெற்றது. இதன் தொடக்கம் ஆதிமனிதன் பண்பாட்டியல் கூறுகள் வீராட் விஸ்வப்பிரம்மன் என்னும் பரப்பிரம்மம் உலக தோற்றத்தின் மூலமாகின்றது அப்பிரம்மத்தின் ஐந்து முகங்களில் இருந்து
மனு – சானகரிஷி – கொல்லர் – இரும்பு வேலை
மய – சனாதனரிஷி – தச்சர் – மர வேலை
துவஷ்ட்டா-அவுவணசநிஷி-கன்னார் -உலோகம்
சிற்பி – பிரத்னஷரிஷி – சிற்பியர் – கல் வேலை
விஸ்வக்ய – சுவர்ணஷர்ஷி – பொன்செய்கொல்லர் – பொன்வேலை
இத்தகு ஐந்துமுகத்தில் தோன்றிய ஐந்து ரஷிகளின் வழித்தோன்றல்களே பஞ்ச கம்மாளர்களாவர் இவர்கள் உலக மாந்தர்களுக்கு வேண்டிய அணைத்து தொழில் சார் விடையங்களையும் செவ்வனே செய்து சிறப்போங்கி யிருக்கின்றனர். ஆதி மனுவின் வழித்தோன்றல்களாகிய கொல்லர் எனும் கருமர் இரும்பலான இயந்திரங்கள், மேளி, கத்தி கோடாரி, மண்வேட்டி ,ஈட்டி ,வேல் , வாள் போன்ற தொழில் கருவிகளையும், பெரு மன்னர்களுக்குரிய ஆயுதக் கருவிகளையும் செய்து கொடுத்து இருக்கின்றார்கள். சங்க இலக்கியமாகிய புறநாநூற்றில் வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்கு கடனே” என்ற பாடல் வரி இவர்களின் பெருமையை பறைசாற்றுகின்றது.
தேவதட்சனாகிய மயனுடைய சந்ததியினர் தச்சர் என புகழ்மிகு கம்மியர் இவர்கள் மரங்களிலான இறை உருத்தாங்கும் வாகனங்கள், தேர்கள், சகடைகள், வீடு மனைகளுக்கு தேவையான மரத்தாள பாடங்கள், யாகங்களுக்கு உபயோகப்படும் சிருசுருபங்கள், ஆசனங்கள், ஜோகதண்டங்கள் ஆகியவற்றை செய்யும் திறன் கொண்டவர்கள்.
துவஷ்ட்டா என்ற மகரிஷியின் வழித்தோன்றல்கள் உலோகங்களிலான விக்கிரங்களை தேவாலயங்களுக்கு வேண்டிய மணி, தீபங்களிலான தெய்வீகப்பொருட்கள், திருவாசிகள், செம்பு, வட்டி, சேவரக்கால், குடங்கள், வட்டா, தாம்பாளங்கள் ஆகியன இவர்களின் கைவண்ணங்களாகும். சிற்பியர் என்னும் ஸ்தபதிகள், ஆலயங்களை அமைத்தல், பெருநகரங்கள் அமைத்தல், அவ்விக்கிரகங்களை ஆலய கருவறையில் ஸ்தாபித்தல், ஆகிய கருமங்களை செய்யும் திறன் கொண்டவர்கள்.
விஸ்வக்ஞர் எனும் பொற்த்தொழில் கம்மியர்கள் அழகுமிக்க ஆபரணங்களை வடிவமைப்பதோடு ஆண், பெண் எனும் இருவரையும் இணைக்கும் தெய்வீக வாழ்க்கை பாலமாகிய திருமாங்கல்யம் எனும் திருத்தாளியை செய்கின்ற தெய்வீகமானவர்கள். இவர்களின் கலை வண்ணம், இவர்களின் கைவண்ணத்தின் திறன் மிக்கது. விஸ்வம் என்றால் உலகம், ஐக்கியம் என்றால் சம்பந்தப்படுத்துபவர் உலகத்தை ஐக்கியப்படுத்தும் பெருமை மிக்க தொழில்சார்புடைய மக்கள்.
எத்தகு பெருமை மிக்க பஞ்சகம்மாளர்களாகிய விஸ்வ குல கம்மியர்கள் இலங்கை வரலாற்றின் முதல்குடிமக்களாவார் இயக்கர் நாகர் எனும் பண்டைய ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்களே இக்கம்மியர்களாவார்கள் துவஷ்ட்டி மகாரிஷி எனும் பெருமன்னனால் ஆட்சிக்குட்பட்ட பெருநிலப் பரப்பே மாதோட்டம் எனும் மாந்தைப்பட்டனமாகும் மாது வட்டாபுரவே மருவி மாதோட்டம் ஆசியது துவஷ்ட்டி மகாமன்னனால் கட்டப்பட்ட ஆலயமே திருக் கேதிஸ்வரமாகும் தேவதட்சனாகிய மயனுடைய மகள் மண்டோதறியே இலங்காபுரி மன்னன் இயக்கர்கோன் இராவணேசனை திருமணம் செய்திருந்தால் மாந்தை மாதகரம் மிகப்பெரும் வர்த்தக நகரமாக விஸ்வகுல கம்மியரின் ஆட்சி நிலமாக காந்த கோட்டையின் சிறப்பு மிக்க நிலமாக விளங்கியதை மாத்தைபுள்ளு திருக்கேதிஸ்வர புராணம் சீன யாத்திரிகர்களின் வரலாற்று குறிப்புகள் கோடிட்டு காட்டுகின்றன அரபிய நாட்டு வர்த்தகர்களுக்கும் மாந்தையில் வாழ்ந்த பெரும் கம்மியர்களுக்கும் உள்ள தொடர்பினை மாந்தை கம்மியரும் மக்கத்துத் துலக்கரும் பக்கத்திருந்தவாதே என்று மாந்தை புள்ளு அழகாக எடுத்து கூறுகின்றது
காலத்துக்கு காலம் இந்தியத் தமிழக மண்ணில் இருந்து படையெடுத்து வந்து இலங்கையை கைபற்றிய சேர சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கையில் உள்ள சிவாலயம் பணிகளை செப் பணிடுவதற்காக தமிழகத்தில் இருந்து விஸ்வ குல கம்மியர்களை அழைத்து வந்து சீர்படுத்தி இருக்கின்றார்கள் விஜய மன்னனோடு ஆயிரம் கம்மாளர்கள் இலங்கைக்கு வந்ததாக வரலாறு கூறுகின்றது கம்பளியில் அமைந்த லங்கா திலக என்ற விகாரையை அமைப்பதற்கு சோழநாட்டில் இருந்து சிற்பிகளை கொண்டுவந்ததாக ஆய்வுகள் எடுத்துயம்புகின்றது இலங்கையில் பெரும்பான்பையின மக்களாகிய சிங்களவர்களிடையேயும் விஸ்வகர்ம கம்மியர்கள் சிறப்போடு வாழ்கின்றனர் அவர்கள் தங்களை விஸ்வகர்ம தெய்வபுத்ர என்று சிறப்போடு கூறுகின்றார்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் சிறப்புமிக்க ஓர் இனமாக நுண்வினைக் கம்மியர்களாக கலைத்தாயின் புதல்வர்களாக இவ் விஸ்வ குலமக்கள் மிளிர்கின்றனர்.
இலங்கையில் யாழ்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு மலைநாடு, இந்த நாற்திசைகளிலும் பறந்துபட்டு வாழும் இச் சமூகத்தினர் யாழ்பாணம், மலை நாடு ஆகிய இடங்களில் தந்தை வழி கோத்திர மரவு வழி உரிமை உடையோராக வாழ்கின்றார்கள். கிழக்கிலங்கையாகிய திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இடங்களில் தாய் வழி பண்புசார் மரவுவழி உரித்துடையோராக வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூனித்தீவு, திரியாய், சேனையூர், திருகோணமலை ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முறாவோடை, சித்தாண்டி, ஏறாவூர், கோட்டைமுனை, ஆரையம்பதி, தாழங்குடா பெரிய போரதீவு, முனைத்தீவு ஒந்தாட்சிமடம், பெரியகல்லாறு, பாண்டிருப்பு, அன்னமலை, அக்கரைப்று, தம்பிலுவில், பொத்துவில் ஆகிய இடங்களில் தாய் வழி நேரடி மரவு உரிமை கொண்டவர்களாக வாழுகின்றனர். மட்டக்களப்பு தமிழகத்தின் ஆரம்ப காலங்களில் கரவாகுப்பற்று கம்மாளர், எருவில்பற்று கம்மாளர் என்ற அரசியல்சாசன உரித்துடையோராக இருந்திருக்கின்றனர். இதில் கல்முனைப்பிரதேசம் சார்ந்த சொறிக்கல்முனை, சாய்ந்தமருதாகிய கரவாகு, பட்டிருப்புத்தொகுதி சார்ந்த எருவில் ஆகிய இடங்களில் மிகப் பெரும்குடியிருப்புகளை தன்னகத்தே கொண்ட பெரும்குடிமக்கள் விஸ்வ குல கம்மியர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் தாய் வழி சமூதாய மரபினராக மன்னர் காலங்களில் வகுக்கப்பட்ட குடி வழிப் பன்புடயோராக வாழ்கின்றனர். மாகோன் மன்னனால் வகுக்கப்பட்ட குடிவழி இவர்களிடையே பண்டு முறையாக வழக்காற்றில் உள்ளது.
மட்டக்களப்பில் பெரிய கல்வெட்டு என்னும் வரலாற்று ஏட்டில் இப்பஞ்ச கம்மாளர் ஐந்து குடி பட்டைய உரிமையாளர்களாகவும். இரண்டு இணை குடிகளும் சார்ந்த வரலாற்று மரபினர். அதன் படியே இவர்களின் ஐந்து குடிகளும் மட்டக்களப்பு மான்மியம் , மட்டக்களப்பின் பூர்வசரித்திரம் பெரிய கல்வெட்டு ஆகிய சாசனங்கள் ஊடாக இவர்களின் குடிவளிகள் பின்வருமாறு சூரிய அடப்பன் குடி சும்மாடு கட்டுக்குடி கட்டாடி குடி பதஞ்சல்லி குடி வேளிவாளை குடி இணைக்குடியான முத்தநம்பி சந்ததியனரும் பத்தநம்பி சந்ததியினரும் ஆவார்கள் இதில் முத்து தம்பிலன் சந்ததியில் வந்தவர்கள் ஆனந்தி கத்தறையினதும் பத்தி நம்பி சந்ததியில் வந்தவர்கள் ஆட்டுவள்ளி கத்தறையினதும் ஆவர் இவர்களோடு பட்டயம் சாராத குடிகளான சிங்களக் குடி வடராமன் குடி கொல்லன் கந்தன் குடி சம்மான் காரக்குடி காமாட்சி குடி கிரிசங்கரன் குடி சங்கரப்பத்தான் குடி சைவேந்திரன் குடி மடத்து அடியார் (கடல் அரசன்குடியார்) வாணக்காரர் குடி பொன்னீட்டி குடி பிராமணக்கத்தரை முத்தையா வைற்ருவர் வடமலை கண்ணார் குடி ஆகிய குடிகள் விஸ்வ குலகம்பியரின் குடவழி மரபுகளாகும்
இவர்களுக்கு விருது இவ் அனுமக்குடி இவர்களின் பெருநிகழ்வுகளிலும் தெய்வீக நிகழ்வுகளிலும் இவ்வனுமக்குடி ஏற்றப்பட்டு நிகழ்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது பண்டைய மரபு மாந்தையில் இருந்த காந்தக்கோட்டையாம் “அனுமத் துவஜம்” எனும் அனுமக்கொடி பட்டொளி வீசி பறந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன சிவப்பு , மஞ்சள் வெள்ளை .நீலம் ,பச்சை ஆகிய ஐந்து நிறங்களில் இக்கொடியை அமைத்து நடுவில்வரும் வெள்ளை நிறத்தினில் கைகூப்பி வணங்கிய நிலையில் அனுமானின் உருவம் அமைக்கபட்ட கொடியே அனுமக்கொடியாகும். இவர்களின் நன்மை தீமைகளான நிகழ்வுகளுக்கு கூரைமுடி சேலைகள் தென்கின் மலர், நீல பாவாடை அமைக்கபட்ட வேம் என்பது மரபு வழியாகும் இத்தகைய அனைத்துச சிறப்புகளை உடைய இச்சமுகத்தார்கள் மட்டக்களப்பு தமிழகத்தில் “ஏந்துபணி செய்வோர்க்கு காளியாம்” என்ற பாடலுக்கு அமைப்பாகவும் “காளிவரம் பெற்ற கண்ணாளா” எனும் வாக்கியத்துக்கு அமையவும் காளி வழிபாட்டினை அன்றுமுதல் இன்றுவரை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.
source: http://omkali.weebly.com/
இது ஒரு வரலாற்று பதிவு மிகவும் நன்றாக இருக்கின்றது, நமது கம்மாளர் சமூகம் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய விடயங்கள், நான் கரவாகுவை (சாய்ந்தமருது ) பிறப்பிடமாக கொண்டவன்
மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு இது பற்றிய இன்னும் பல தகவல்கள் வேண்டும்
Ontrupaduvom udvegamkolvom jeithu kattuvom valnthukattuvom