பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தினர் பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணியர் சுவாமிக்கு தங்க கிரிடம் இரண்டு கை முத்திரைகள் அர்ப்பணிப்பு
பொள்ளாச்சி நகரின் பிரதான பகுதியில் பாண்டிய மன்னனால் கட்டிடப்படட ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் உள்ளது இந்த கோவிலின் பிரதான மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் முழுதும் கற்களால் ஆன பெரிய மண்டபம் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு இந்த கோவிலின் சிறப்பை பறை சாற்றுகிறது. இந்த கோவிலின் பிரதான தெய்வமாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் லிங்க வடிவில் சிவபெருமானும் பார்வதி தேவியும் தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றனர்
பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் இருக்கும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் உற்சவருக்கு சுமார் 11 பவுன் எடை உள்ள தங்கத்திலான (கவசம்) கிரீடமும் இரண்டு கைகளும் விஸ்வகர்மா தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் விஸ்வகர்மா சமுதாய மக்கள் சேர்ந்து 28-01-2020 தேதியன்று அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
ஏற்கனவே 2002 ஆம் ஆண்டில் தங்கத்திலான 84 கிராமம் எடையுள்ள ஓம் டாலர் செயின் விஸ்வகர்மா சமுதாய மக்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி.
இது தவிர காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ கருப்பண்ண ஆச்சாரி அவர்கள் இந்த கோவிலின் ஆருத்ரா தரிசன கட்டளைக்காக பிரதான தேர்நிலையில் இடம் வழங்கி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது
Be the first to comment on "பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தினர் பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணியர் சுவாமிக்கு தங்க கிரிடம் இரண்டு கை முத்திரைகள் அர்ப்பணிப்பு"