பிரம்மஸ்ரீ டாக்டர் K. கனகராஜ் M.B.B.S., DNB., சக்தி மருத்துவமனை, பென்னாகரம், தர்மபுரி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மாங்குடி மீனாட்சிபுரம் கிராமம், பிரம்மஸ்ரீ மா. காமாட்சி ஆச்சாரி – லட்சுமி, அம்மாள் தம்பதியினருக்கு 1960ல் தவப்புதல்வராகப் பிறந்தவர். டாக்டர் தனது சிறுவயது முதற்கொண்டே பொது மக்களுக்கு மருத்துவ தொண்டாற்ற விரும்பி M.B.B.S., & DNB., பட்டம் பெற்று 1983 முதல் பென்னாகரம், நகரத்தில் சக்தி மருத்துவமனையை நிறுவி அதன் மூலம் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.
இதுகாறும் சுமார் 18000 அறுவை சிகிச்சைகள் செய்ககோடு பல்வகை மருத்துவ சிறப்பு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் பென்னாகரத்தில் சிவசக்தி ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற செவிலியர் பயிலகத்தை சிறப்பாக நடத்தியும், ஆண்டுதோறும் தகுதி அடிப்படையில் 10 மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கி மருத்துவப் பணி ஆற்றி வரும் பெருமகனார் ஆவார். – தான் பிறந்த விஸ்வகர்மா சமூகத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு சமூக சேவைகள் புரிந்து வருவதோடு பல ஆன்மீகப் பணிகள் ஆற்றிவரும் சிறந்த அருட்பணியாளர்.
திருவண்ணாமலை சீனந்தல் மடாலயம், தென்காசி நகர் ஸ்ரீ விஸ்வகர்மா விநாயகர் ஆலயம், சிவகிரி அழுக்குச் சித்தர் கோயில், உள்ளிட்ட ஆலயங்கள், மம்சாபுரம், பொள்ளாச்சி, கரூர் போன்ற பல நகரங்களில் உள்ள விஸ்வகர்மா சங்கங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் புனரமைப்புகள், கும்பாபிஷேக விழாவிற்கு பொருட்கொடைகளும், நிதிகளும், ஆண்டுதோறும் திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல விஸ்வகர்மா பண்பாட்டு மையங்களுக்கு கல்வி உதவித் தொகைகளும், சமூகம் தாண்டி IMA மற்றும் பல பள்ளிகளுக்கு கட்டிட நிதி உதவிகளும் வழங்கி வரும் வள்ளல் பெருந்தகை.
நமது பாரத கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் விஸ்வகர்மா சமூகத்தின் திறமை, பெருமைகளை பறை சாற்றும் விதமாகவும், மதிப்புமிகு கல்வி & கொமில் நட்பத்தை இச்சமூகத்திற்கு வழங்கும் வண்ணம் “விவாஸ்ட்” எனும் பெயரில் விஸ்வகர்மா கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை பல்கலைக் கழகம் ஒன்றை தோற்றுவிக்கும் செயல் டாக்டர் அவர்களின் சேவைப் பயணத்தில் ஓர் மைல்கல் ஆகும். – சமூக பத்திரிக்கைகளாகிய விஸ்வ மலர் & விஸ்வ ரூபம் ஆகியவற்றின் கௌரவ ஆலோசகராகவும், நமது அனைத்து விஸ்வகர்மா சங்கங்களின் கூட்டமைப்புகள் ம போன்றவற்றின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசகராகவும், ஒற்றுமைக்குப் பாலமாகவும் விளங்கி வருபவர். டாக்டர் அவர்கள்
தர்மபுரி IMA வின் தலைவராக சீரிய பணி ஆற்றியவர். மேலும் கர்நாடகா நந்தி மலை பூஜ்ய ஸ்ரீ சிவாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் எழுதிய ‘ரிக் யஜூர் சாம அதர்வண பிரணவ வேதங்களும், விளக்கங்களும்” (சமஸ்கிருதம் & ஆங்கில வழி) என்ற நூலை வெளியிட மிகவும் பொருளுதவி செய்திட்டவர். !
நமது சமூக வளர்ச்சியில் பெரும் பங்காற்றி மருத்துவ சேவையில் தன்னிகரற்று விளங்கும் பிரம்மளு டாக்டர் K. கனகராஜ் அவர்களுக்கு பின்பலமாக இருந்து சிவனுக்கு ஏற்ற சக்தியாக விளங்கும் டாக்டரின் துணைவியார் டாக்டர் திருமதி K. முருகம்மாள் M.B.B.S. D.G.O., அவர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.
இத்துனை சிறப்புகள் பெற்ற நம் அன்பிற்குரிய பிரம்மஸ்ரீ டாக்டர் K. கனகராஜ் அவர்களுக்கு இந்த ஆண்டு நமது விஸ்வாஸ் அமைப்பின் உயரிய விருதான “மஹா விஸ்வகர்மா” விருதளித்து மகிழ்வதோடு டாக்டர் அவர்கள் பல்லாண்டு கண்டு உலகம் பயனுற பணி ஆற்ற எல்லாம் வல்ல பரப்பிரம்மத்தை வணங்கி மகிழ்கிறோம்!
Be the first to commenton "மஹா விஸ்வகர்மா விருது!"
Be the first to comment on "மஹா விஸ்வகர்மா விருது!"