விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே!

கவி யோகி சுத்தானந்த பாரதியார்

உலகை யெங்கள் உளி செதுக்கும் கோயிலென்போமே-அதை
உருவை யெங்கள் மனதிலுள்ள கனவ தென்போமே
சலவைக்கல்லில் கலைமணக்கும் சிலையமைப்போமே-ஒரு
சடமரத்தின் வாழ்வி னிக்கும் உயிரளிப்போமே!
எளியவர்க்கும் செல்வருக்கும் வீடமைப்போமே
எல்லவரும் வாழுகின்ற நாடமைப்போமே
உளங்குவிந்து கடவுள் வழிபாடுகள் செய்ய
ஓங்கிவளர் கோயில்களை ஒளிரச் செய்வோமே!
தச்சர் கொல்லர் தட்டா ரென்பர் தரணி மாந்தரே
தளர்வரிய கரும வீரர் புலவர் நாங்களே
உச்சமா மலைவிளக்கும் எங்கள் விளக்கே-இசை
ஓங்கு நாட்டுக் கொடியும் நாங்கள் தாங்கும் வெற்றியே!
அறுசமயக் கோயி லெங்கே அறநிலை யெங்கே
அறிவுடனே தொழில் வளர்க்கும் ஆலய மெங்கே
விறுவிறுப்பாய் கலை வளரும் வித்து வானெங்கே
வேகப் பொறிகள் எங்கே யெங்கள் வேலை யில்லையேல்!
அயனுலகை அமைத்தவர்கள் விசுவகர்மாக்கள்
அழகுக்கலையை வளர்ப்பவர்கள் விசுவகர்மாக்கள்
வியனுலகை இலகுவிப்போர் விசுவ கர்மாக்கள்
விசுவகரும வீரர் நீடு வாழ்க வாழ்கவே!
 

2 Comments on "விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே!"

  1. good.Visva karma patri arumaiyana kavidai.Nandri

  2. கவிதை மிக அருமை, ஒரு மணிமகுடம்

Leave a comment

Your email address will not be published.


*