விஸ்வாஸ் வித்யா 2024 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா

சி.எஸ்.திருனாவுக்கரசு பொதுசெயலாளர் விஸ்வாஸ்

விஸ்வாஸ் வித்யா  2024  &  விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் பொள்ளாச்சி சார்பாக 29/09/2024 அன்று பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் விஸ்வாஸ் வித்யா 2024 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கோவை ராயல்கேர் மருத்துவமனை  பிரபல இருதய சிகிச்சை நிபுணர் பிரம்மஸ்ரீ மருத்துவர் கே சொக்கலிங்கம் அவர்கள் முதண்மை விருந்தினராகக் கலந்து 2024 ஆம் ஆண்டிற்கான மஹாவிஸ்வகர்மா விருதினையும், விஸ்வப்பிரம்ம வேதாச்சார்ய பாரதி விருதினையும், மாணவச்செல்வங்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக விஸ்வாஸ் மகளிர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த விழாவில் விஸ்வாஸ் தொடர்பு அலுவலர் எம் அன்பழகன்  அவர்கள் வரவேற்புரை நல்கினார். விஸ்வாஸ் அமைப்பின் 21 ஆண்டு கால செயல்பாடுகளையும், நோக்கங்களையும் தலைவர் பிரம்மஸ்ரீ திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

புதுதில்லியில் ஜி20 மாநாட்டு அரங்கு முகப்பில் நிறுவப்பட்டு உள்ள  21 அடி ஸ்ரீ நடராஜர் சிலையை வடிவமைத்த ஸ்வாமிமலை பிரம்மஸ்ரீ தே.ராதாகிருஷ்ணன்  ஸ்தபதி அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதினை பெற்றுக்கொண்டு, நமது விஸ்வகர்ம சமுதாய மக்கள் கல்வி அறிவு சமூக முன்னேற்றத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் குலத்திற்கான அரசு சலுகைகள், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கவனமாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு சமூகத்தை முன்னேற்ற வேண்டும், என சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

விஸ்வகர்மா சமூக மேம்பாட்டிற்காகவும், இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் என்ணத்துடன் விஸ்வப்ரம்ம வேத ஆராய்ச்சி நிறுவனமும், வேத பாடசாலையும் அமைத்து சிறப்புடன் நடத்திவரும் பிரம்மஸ்ரீ தயாதாசன் ஆச்சார்யா அவர்கட்கு விஸ்வப்ரம்ம வேதாச்சார்ய பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இன்றைய மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் நமது சமூகம் மேம்பட என்ன செய்ய வேண்டும் என்பதை பிரம்மஸ்ரீ தயாதாசன் ஆச்சார்யா அவர்கள் தனது ஏற்புரையில் அழகாக எடுத்துரைத்தார்.

விழாவின் மேண்மை குறித்தும், மாணவச்செல்வங்களுக்கும் பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ  ஏ.டி. கபீர்தாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவின் சிகரமாக, 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசுளும், கல்வி உதவி தொகைகளும் வழக்கம்போல் நன்கொடையாளர்களின் ஆதரவினால் அவர்களின் கரங்களினாலேயே வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவ மாணவியரின்  படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் பொறியியற் கல்லூரி மாணவர்கட்கு ரூ 10000, (4 ஆண்டுகளுக்கு ரூ40000) டிப்ளமா மாணவர்கட்கு ரூ 7500(3 ஆண்டுகளுக்கு ரூ 22500  கலைக்கல்லூரி மாணவர்கட்கு ரூ 5000 (3 ஆண்டுகளுக்கு ரூ15000)  வழங்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாஸ் தனது 22ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவ்வினிய வேளையில் சக சாதனை படைத்து வரும் திருப்பூர் விஸ்வேஸ்வர அறக்கட்டளைக்கு சிறப்பு விருது வழங்க்கப்பட்டது. நிகழ்ச்சியினை பொதுச்செயலாளர் சி எஸ் திருனாவுக்கரசு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார். ஒருங்கிணைப்பாளர் திரு.கோ. ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி நவில தேசிய கீதத்துடன் விஸ்வாஸ் வித்யா விழா இனிதே நிறைவுற்றது.

கோவை. ஈரோடு. திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல வெளியூர் மற்றும் உள்ளூர் சமூக அன்பர்கள், பத்திரிகை நண்பர்கள் என சுமார் 400 க்கும்  அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

Be the first to comment on "விஸ்வாஸ் வித்யா 2024 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா"

Leave a comment

Your email address will not be published.


*