படைப்புக் கடவுள்

பிரகாசம் பொருந்திய ஜோதிமயமான ஞானத்தையே தானாக கொண்டவரும் அண்டசராச்சரம் அனைத்திற்க்கும் காரணகர்த்தராயும், ஆதி இறைவனாகவும்,யோகம் ஞானம் முதலிய பல ஆகம சாஸ்திரங்களை அறிவித்தவரும் பரமஸிவமும் குருவானவரும் சாட்சாத் ஸ்ரீவிஸ்வகர்மாவாகும்  (மூல ஸ்தம்பம்)
ஸ்ரீவிஸ்வகர்மாவின் சகலவடிவ அலங்காரங்களையும் நாராயண  தைத்ரீய சதுர்த்த ப்ரவசனம் ஆகிய  “கிருஷ்ணயஜுர்” வேதத்தில் ஸ்தோத்திரமாக  துதிக்கப் படுகிறது இதுவே ஸ்ரீ விஸ்வகர்மாவின்  பூரண சமஸ்த இலட்சணமான திருவடிவமாகும்  “விஸ்வபிரம்மம்’ என்றும் “ஜகத்குரு” என்றும்  போற்றப்படுகின்ற ஆதியாய்  இருக்கின்ற  ஸ்ரீவிராட் விஸ்வப்பிரம்மம் ஐந்து முகங்களை கொண்டும் சடாம குடங்களை உடை கருநீல நிறமுடையது தெற்கு முகம் அஹோரம் முகம் சிகப்பு நிறம் கொண்டது. மேற்கு முகம் தத்புருஷம் முகம் மஞ்சள் நிறம் உடையது. வடக்கு முகம் ஈசான முகம் பச்சை நிறம் உடையது ஆகாய முகம்  சரீரம் பொன் நிறமானது, பத்து புஜங்களை உடையவரும்,  பிரகாசிக்கும் குண்டலங்களை காதில் தரித்தவரும் யஞ்ஞோபவீதத்தைக் கொண்டவரும், உருத்திராட்சமாலையை ஆபரணமாய் பூண்டும், புலித்தோல் ஆடையை தரித்தும், ஒரு கரத்தில் அட்ச்சமாலையும்,  ஒரு கரத்தில் தாமரையும்,  ஒரு கரத்தில்  நாகபாசமும்,  ஒரு கரத்தில் சூலமும் ஒரு கரத்தில் பினாக வில்லும், ஒரு கரத்தில் மேரு வீணையும், ஒரு கரத்தில் பானமும்,  ஒரு கரத்தில் உடுக்கையும்,
இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் தாங்கியவரும்,  புகழும் படியான தோற்றமும், கோடி சூர்யர்கள் ஒருங்கே உதயமானது  போல் பிரகாசிப்பவரும்,  எல்லா உயிர்களிடமும் கருணைகொண்டவரும், தேவர்கட்கும்,  மூவர்கட்கும் தேவனான, மஹாதேவனுமாகிய ஸ்ரீவிஸ்வகர்மப் ப்ரம்மம்,  ஜகத்குருவாகவும், நான்கு திசைகளையும்,  ஆகாயத்தையும்  நோக்கிய  ஐந்து  முகங்களைக்  கொண்ட சர்வவியாபகருமாகிய   ஸ்ரீ விஸ்வகர்மாவைத்  துதிக்கின்றோம் என்பதாகும்.
விஸ்வபிரம்மம்’ ஜகத்குரு ஸ்ரீவிஸ்வகர்மா என வேத இதிகாச புராணங்களில்  போற்றப் படுகின்ற ஸ்ரீ “விஸ்வபிரம்மம்’   லோகங்களைப் படைத்த பின் அதை பரிபாலிக்கின்ற விதமாக முதலில் தன் மானச சிருஷ்டியால் சுயம்புவாய்  தோன்றியவர்கள் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகள், பின் அவர்களின்  தோன்றல்கள் வழி வழியாக விஸ்வகுலம், பல விருட்சமாகி விரிந்து பரந்து உள்ளது.
விஸ்வகர்மாவின்,
வெண்ணிற ஸத்யோஜாத முகம் கிழக்கு முக தியானத்தால் உருத்திர ரூபமுடைய சானகரிஷி பின் மனு தோன்றி ரிக் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்
கருநீல நிற வாமதேவ முகம் தெற்கு முக தியானத்தால் விஷ்ணு ரூபமுடைய சனாதனரிஷி பின் மயா தோன்றி  யஜுர்  வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.
சிகப்பு நிற அகோரம் மேற்கு முக தியானத்தால் பிரம்ம ரூபமுடைய அபுவனஸரிஷி பின் துவஷ்டா தோன்றி சாம வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.
மஞ்சள் நிற தத் புருஷம் வடக்கு முக தியானத்தால் இந்திர ரூபமுடைய பிரத்தனஸரிஷி பின் ஸில்பி தோன்றி அதர்வண வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.
பச்சை நிற ஈசானம் ஆகாய முக தியானத்தால் ஸூர்ய ரூபமுடைய சுபர்ணரிஷி பின் விஸ்வக்ஞ தோன்றி பிரணவ வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.
(இதை யஜுர்வேத எக்ஞ் மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது)
“ஜாதம்பஞ்சப்ரம்ம  குலம்  ஸ்ந்ததெள  விஸ்வகர்மண
நித்தியகர்மாஷ்டகயுதம் கர்மசோடச நிஷ்டிதம்
மனு மயா ஸ்ததாத் வஷ்டா ஸில்பி விஸ்வக்ஞ்யித்யபி
விஸ்வகர்ம சுதாஹ்தே பஞ்சஸ்ருட்டிப்ரவர்ததக.
என்று ஸ்காந்தம் நாகர காண்டத்தில் ஸ்ரீவிஸ்வகர்மாவின் புத்திரராக ஜனித்த மனு, மய, த்வஷ்டா, ஸில்பி விஸ்வக்ஞ, எனும் விஸ்வகுல சந்ததியர்களே,உலக சேமங்களைக் கருதி பஞ்ச கிர்த்திய தொழில்களைப் புரிந்து ஜகத், ஜீவ  சிருஸ்டிகளை  ஒருங்கே கொண்டு ஸ்ரீவிஸ்வப்ப்ரம்ம சந்ததியரேனவும்   போற்றத்தக்க விஸ்வகர்ம பிராமணர்கள் என வேத சம்மதமாக அழைக்கப் பெற்றனர். இதுவே இப்பூவுலகில் ஐந்தொழிலைத் தமது உரிமையாக, உடமையாகக் கொண்டு தொழில் நடத்தி வாழ்ந்து வரும் விஸ்வ குலத்தவரின்  வரலாறு ஆகும்.
விஸ்வபிரம்மம்
விஸ்வகர்மா என்ற இந்த இனம் இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர், பத்தர், ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் – கொல்லர், பாத்திரவேலை – கண்னார், மரவேலை – தச்சர், சிற்பவேலை – சிற்பி, தங்கநகை தொழில் – பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம்.
விஸ்வப்பிரம்மம் என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். [1] எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் விராட் விஸ்வப்பிரம்மம் என்றும் அறியப்படுகிறார்.
ஐந்து முகங்களையும், பத்து கைகளையும், நாகாபரணம் மற்றும் புலியுடை தரித்து விஸ்வபிரம்மம் காட்சியளிக்கிறார். அவர் வலது கைகளில் சூலம், சக்கரம், அம்பு, நாகாபரணம், மாலை ஆகியவையும், இடது கைகளில் நாக உடுக்கை, சங்கு, வில், வீணை ஆகியவற்றுடன் செந்தாமரையில் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய ஐந்து விஸ்வகர்மா ரிசிகளும் அவரிடம் படைப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
விசுவகர்மன் என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.
கதாயுதம் – கதன் எனும் அசுரனை திருமால் கொன்றார். அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதம் என்பதை விசுவகர்மா செய்து தந்தார் என அக்கினி புராணம் கூறுகிறது.[1]
சிவபெருமானுக்காக திரிசூலம், திருமாலுக்காக சக்ராயுதம், முருகனுக்காக வேல், குபேரனுக்காக சிவிகை ஆகிய ஆயுதங்களை விசுவகர்மா உருவாக்கி தந்தாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.[2]
பிருந்தாவனத்தில் வீடுகளையும், இந்திரனுக்காக அமராவதி நகரை புதுப்பித்ததாகவும் பிரம்ம புராணம் கூறுகிறது.[3]
இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் சாயா தேவி என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.[4]
இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.
சிவன் பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், திருமாலின் கிருஷ்ண அவதாரத்தின் பொழுது துவாரகை மற்றும் எமபுரத்தினை அமைத்து தந்தார் எனவும் இந்து நூல்கள் குறிப்படுகின்றன. அத்துடன் சேது பாலத்தினை அமைக்க இராமருக்கு துணையாக நளன் என்ற வானரத்தினை இவர் படைத்தாகவும் கூறப்படுகிறது.
தகவல்: கீதா மதுராந்தகன்

11 Comments on "படைப்புக் கடவுள்"

  1. Super support vishwakarma mayiladuthurai 9445637270

  2. மயிலாடுதுறை விஸ்வகர்மா தலைவர்.ஜெயகனேஷ் பத்தர்

    • Ganesh Kumar | July 14, 2024 at 7:58 am | Reply

      ஐயா வணக்கம் பத்தர் என்பவர் நமது இனத்தில் என்ன வேலை செய்பவர் என்று சொல்லுங்க ஐயா

  3. nalla seithikal

  4. உங்களுடன் பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது மேலும் புராணத்தையும் வரலாற்றையும் பதிவிடுங்கள் .. இந்த பதிவுக்கு நன்றி

  5. I am very proud and courage for having borned in Vishwakarma community and my father,Late Mr Shanmuga Achari, is professionalised Goldsmith.

  6. Ganesh Kumar | July 14, 2024 at 7:58 am | Reply

    ஐயா வணக்கம் பத்தர் என்பவர் நமது இனத்தில் என்ன வேலை செய்பவர் என்று சொல்லுங்க ஐயா

  7. Super mg for vishvakarma comunity Karthikeyan vishvakarma

  8. எல்லாவற்றையும் உருவாக்கியவன் ஏன் இப்படி கீழ்நிலையில் உள்ளான். வெறும் வேதங்கள் மட்டும் வைத்துகொண்ட பார்ப்பனன் ஏன் முதல்நிலையில் உள்ளான் எப்போதும் எனக்கு என் இனம் குறித்து வெறுப்பே மிஞ்சுகிறது

Leave a comment

Your email address will not be published.


*