யாழ்ப்பாணம் முத்துக்குமார ஆச்சார்யா ஸ்வாமிகள்

பொள்ளாச்சி  வேட்டைக்காரன்புதூரில் ஶ்ரீலஶ்ரீ அழுக்கு ஸ்வாமிகளின் மடாலயத்தில் யாழ்ப்பாணம் ஸ்வாமிகள் என்கிற முத்துக்குமாரசாமி ஆச்சாரியார் வாழ்ந்து விஸ்வகர்மா சமூக பணிகளையும் சைவ பணிகளையும் ஆற்றி வந்திருக்கிறார் எனவும், இவரை பழனியம்பதியில் சந்தித்து வேட்டைக்காரன் புதூருக்கு தாங்கள் அழைத்து வந்ததாகவும் சங்க செயலாளர் எம் டி சுந்தரம் ஆச்சாரியாரின் இரங்கல் கூட்டத்தில் பேசியதிலிருந்து அறிகிறோம்இவர் இலங்கை யாழ்ப்பாணம் நகரை சார்ந்தவராக இருக்கலாம். அதனாலேயே இவர்யாழ்ப்பாணம் ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்இவர் மிக பெரிய சங்கீத வித்வானாக இருந்திருப்பார் எனவும் அறிகிறோம். மேலும் அவர் மலாய் நாட்டில் உள்ள கோலாலம்பூரில் ரயில்வே துறையில்பணி செய்து வந்துள்ளதையும் பின் துறவறம் பூண்டு குல சேவை செய்ததையும் தஞ்சை ஸ்ரீ எம். புஷ்பலிங்காச்சாரியார் தனது இரங்கற கடிததத்தில் எழுதுகிறார் .
மேலும்  வேட்டைக்காரன் புதூரில் வசித்த 15 ஆண்டுகளில் இங்குள்ள சுற்றுப்புறக் கிராமங்களில், கஜாதி, விஜாதிபிரமுகர்களின் பூரண அன்பையும், ஆதரவையும், தமது அரிய குணாதிசயத்தினாலும் ஆழ்ந்த கல்வியின் ஞானத்தாலும் பெற்று அவரவர்களுக்குத்தகுந்த முறையில், வேதாந்த சித்தாந்த ஹிதோபதேசங்களையும் குலாபிமான விஷயங்களையும், தமதினிய, பிரசங்கங்களினாலும், உபதேசங்களினாலும், அமிழ்தினுமினிய தமிழ்மொழியின் திறமையினாலும், யாவர்மனதையும் காந்த சக்திபோல் கவர்ந்து விட்டனரென்றும் சாந்தமூர்த்தியின் அரிய குணாதிசயங்களையும் சொற்பொழிவாற்றலின் திறனையும் அவர் சங்கீத ஞானத்தையும் வேதாந்த உபதேசங்களையும் கவி இயற்றும் கற்பனா சக்தியையும்நம் போலொத்த சாமான்யர்களால் பேச முடியாதென்றும அண்னாரின் குடும்ப உறவினரின் வரலாற்றையறிய இடங்கொடாத காரணத்தினால் அறிந்து கொள்ள இயலவில்லை என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்பேற்பட்ட மஹான் குறித்து அப்போது விஸ்வ பந்து இதழில் வெளிவந்த தகவல்களிலிருந்து மட்டுமே அறிகிறோம்.
5-4-37  சோமவாரம்  மாலை 3 மணிக்கு  பொள்ளாச்சி தாலூகா வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சுவாமிகள் கோயில் மடாலயத்தில் இவ்வுலக வாழ்வை நீத்த ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் முத்துக்குமர ஆச்சாரியஸ்வாமிகள் சமாதி அடைந்தார் என்றும் இந்த நூலிலிருந்து காணமுடிகிறது.
மேலும்  யாழ்ப்பாணம்  முத்துக்குமார ஆச்சார்ய ஸ்வாமிகள் ஜீவிய சரித்திரம் என்ற நூலை மு நாகலிங்கம் என்பவர் எழுதி 03.04.1939ல் வெளியிட்டுள்ளார் என அறிகிறோம். ஆனால் அந்த புத்தகம் இப்போது யாரிடமாவது இருக்கிறதா எனவும் தெரியவில்லை சில பக்கங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்ற அந்த நூலின்வாயிலாக திரட்டிய செய்திகளேஇவை.
சரித்திர அநுபந்தம்
அநுதாபக் கடிதங்கள்
விஸ்வபந்து:
காரைக்குடி. ஈஸ்வர வருடம் சித்திரைமீ 11 (23.04.1937) காலஞ்சென்ற முத்துக்குமர ஆச்சாரிய சுவாமிகள் மலையாண்டிப்பட்டணத்தில் அநுதாபம்.
விஸ்வகர்ம சங்கத்தின் பொதுக்கூட்டம் ஒன்று 8 4.1937 மாலை 7 மணிக்கு சங்கத்தலைவர் ஸ்ரீ எம். டி. பொன்னுசாமி ஆச்சாரியார் தலைமையின் கீழ் நடைபெற்றது. இறைவணக்கம் முடிந்ததும் காரியதரிசி ஸ்ரீ எம். டிசுந்தரம் ஆச்சாரியாரால்
5-4-37 சோமவாரம் மாலை 3 மணிக்கு பொள்ளாச்சி தாலூகா வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச் சுவாமிகள் கோயில் மடாலயத்தில் இவ்வுலகவாழ்வை நீத்த ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் முத்துக்குமர ஆச்சாரிய ஸ்வாமிகளின் அரிய குணாதிசயங்களைப்பற்றி பேசிய பொழுது அன்னாரின் அந்தியகாலக் கடன்களில் ஈடுபடாமைக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும், அன்னவரின் பிரிவானது நம் சமுகத்திற்கு ஈடுபடுத்தொணாத பெரும் நஷ்டமென்றும், கடந்த 15 ஆண்டுகட்கு முன் ஸ்ரீ பழநியம்பதியில் ஸ்வாமிகளைச் சந்தித்து அழைத்ததற்கிணங்கவே இங்கு விஜயம் செய்தனரெனவும் இந்த 15 ஆண்டுகளில் இங்குள்ள சுற்றுப்புறக் கிராமங்களில், கஜாதி, விஜாதிபிரமுகர்களின் பூரண அன்பையும், ஆதரவையும், தமது அரிய குணாதிசயத்தினாலும் ஆழ்ந்த கல்வியின் ஞானத்தாலும் பெற்று அவரவர்களுக்குத் தகுந்த முறையில், வேதாந்த சித்தாந்த ஹிதோபதேசங்களையும் குலாபிமான விஷயங்களையும், தமதினிய,  பிரசங்கங்களினாலும், உபதேசங்களினாலும்அமிழ்தினுமினிய தமிழ்மொழியின் திறமையினாலும், யாவர் மனதையும் காந்த சக்தி போல் கவர்ந்து விட்டனரென்றும் சாந்தமூர்த்தியின் அரிய குணாதிசயங்களையும் சொற்பொழிவாற்றலின் திறனையும் அவர் சங்கீத ஞானத்தையும் வேதாந்த உபதேசங்களையும் கவி இயற்றும் கற்பனா சக்தியையும், நம் போலொத்த சாமான்யர்களால் பேசமுடியாதென்றும அண்னாரின் குடும்ப உறவினரின் வரலாற்றையறிய இடங்கொடாத காரணத்தினால் அறிந்து கொள்ள இயலவில்லையாதாலால்இன்னாரின் பிரிவிற்கு தாம் அதிகம் வருந்துவதாகவும் அண்ணாரின் குடும்பத்தாருக்கு தன் சொந்தச்சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் ஆழந்த அநுதாபத்தை நம்விஸ்வபந்துமூலம் அறிவித்துக்கொள்வதென்னும் தீர்மானத்தைப் பிரரேகிக்க மேற்படி தீர்மானத்தை ஆதரித்த கே. எஸ். கருப்புசாமி ஆச்சாரியர் அவர்களால் ஸ்வாமிகளின் சங்கீத ஞானத்தைப் பற்றியும் ஆங்கிலம் தமிழ்க்கல்வியின் அபார ஞானத்தையும் வெகுவாக புகழ்ந்து பேசி அன்னவர் துறவறத்தை மேற்கொண்டிருப்பினும் குலாபிமான விஷயத்தில் அதிகம் ஈடுபட்டதை உத்தேசிக்கும் பொழுது ஸ்வாமிகளின் குலாபிமாநத்தின் உணர்ச்சியை அளவிடமுடியாதென்றும், இன்னவரின் பிரிவானது விஸ்வகர்ம சமுகம் தனதருந்தவப் புதல்வனையும் சைவ உலகம் சைவத்தொண்டர் ஒருவரையுமிழந்ததென்று உறுதியாய்க் கூறலாமென வெகு உருக்கமாகப் பேசியதோடு தீர்மானத்தை ஆதரித்த, கனம் பிரஸிடெண்டு அவர்களால் ஸ்வாமிகளின் உயர் குண லக்ஷியங்களை, வெகுவாய்ப்புகழ்ந்தும்கடந்த 4, 5 ஆண்டுகளாய் அன்னாரின் தலைமையிலேயே சைவ சமயாச்சாரிகள் நால்வருள் ஒருவரான ஸ்ரீலஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் திருநட்சத்திர வைபவம் வெகு விமரிசையுமாய் நடைபெற்றதென்றும், இத்தீர்மானத்தை எல்லோரும் எழுந்து நின்று அன்னவரின் ஆத்மா சாந்தியடையுமாறு பிரார்த்தனைசெய்ய வேண்டுமெனவும், 5 நிமிஷ பிரார்த்தனையுடன் தீர்மானம் யாவராலும் ஏகமனதுடன் நிறைவேறியது. ஸ்வாமிகளுக்குத் தக்க இடத்தில் சமாதி ஏற்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் இனிது நிறைவெய்தியது.
(குறிப்பு) — ஸ்வாமிகளின் ஜீவிய சரிதம் தெரிந்த உறவினர்கள் நம் பந்து வின் மூலயமாய் வெளிப்படுத்துவார்களாகில் மிகவும் நலமென வேண்டிக்கொள்ளுகின்றேன்.) காரியதரிசி.
காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமிகள்நமது குலத்தினர் அனைவருக்கும் வேண்டுவன அளிக்கும் கற்பக விருக்ஷமாய்த்தோன்றி நமது குல முன்னேற்றத்திற்கும் தொழில் அபிவிருத்திக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் வேண்டிய வழிகளை விளக்கிக்காட்டி வரும் நமது விஸ்வபந்து 25-6-37-ல் வெளிவந்த இதழை யான் வாசித்துவரும் பொழுது திடீரென ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமிகள் அகால மாணமடைந்த விபரம் அறிந்தேன். அன்னாரின் கல்வித்திறமையும் சாந்த குணமும், தேவதா பக்தியும்,  குலாபிமானமும் சமூக சீர்திருத்த நோக்கமும் யாவும் ஒருங்கே அமைந்த அண்ணாரின் சிறந்த அம்சங்களை என்னால் சொல்ல இயலாது. மலாய நாடாகிய கோலாலம்பூர் ரயில்வே டிபார்ட்மெண்டில்உத்யோகமாயிருக்கவர்கள் குலச்சேவை புரிய வேணுமென்ற பெரிய நோக்கம் கொண்டு உத்தியோகத்தை ராஜிநாமாச் செய்து விட்டு பல வருஷங்களாகக் குலத்தொண்டில் ஈடுபட்டு உழைத்து வந்தார்கள். அது சமயம் யான் சுவாமிகளோடு சில வருஷங்களாய் ஆத்மார்த்தமாய் நேசித்து வந்தேன். அவர்களுடைய மனப்பான்மையும் உயர்ந்த நோக்கமும் என்  மனதை விட்டு அகலா நின்றது. இப்பொழுது சுவாமிகள் காலஞ்சென்ற விபரந்தெரிந்ததும் என் பால்ய வயதிலே எனது தந்தை காலமான அன்று அடைந்த துயரத்தைக்காட்டிலும் சுவாமிகளின் பிரிவாற்றாமையினால் யான் பன்மடங்கு அதிகம் துக்கத்தையடைந்தேன். சுவாமிகளின் ஆத்மாவானது சாந்தியடையும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சுவாமிகளின் குடும்பத்தாருக்கும் அவர்களின் சகோதரர் பிரம்மஶ்ரீ கந்தையா ஆச்சாரியார் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று தஞ்சை ஸ்ரீ எம். புஷ்பலிங்காச்சாரியார் எழுதுகிறார்.”
மலையாண்டிப்பட்டணத்தில் முத்துக்குமராச்சார்ய சுவாமிகள் தினம்
(4-4-38) மாலை 7-30 மணிக்கு பிரம்மஸ்ரீ எம். டி. பொன்னுசாமி ஆச்சாரியார் அவர்களின் இல்லத்தில் மகா ஜன வாலிப சங்கங்களினாதரவில் யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாராச்சாச்சார்ய சுவாமிகளின் முதலாவதாண்டு வருட பூஜை விழா வெகு சிறப்புடன் கொண்டாடப் பெற்றது. பிரதமத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற்றதும் ஸ்வாமிகளின் படத்திற்கு அபிஷேக அலங்கார தீபாராதனை சிறப்பாய் நடைபெற்றது.
பல பாகவதர்கள் பிரம்மஸ்ரீ டி. பி. ராஜப்பா எம். . ராமலிங்கம் பொன்னாண்டகவுண்டனூர் திருவாளர்களான டி. பி. அழகர்சாமி ஆச்சாரியார் முதலியவர்களின் இனிய சங்கீதக்கச்சேரியும், தேவாரம் திருப்புகழ்ப் பாராயணமும் நடைபெற்றது. க்ஷ வைபவத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கட்கு தேநீர் விருந்தளிக்கப்பட்ட பின்னர் மகாஜன பிரசிடெண்டு எம். பொன்னுசாமி ஆச்சாரியார் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது, காரியதரிசி எம் டி சுந்தரம் ஆச்சாரியார் அவர்களால் சென்ற ஆண்டு பங்குனி திங்கள் 24ஆம் தேதி சோமவாரம் மாலை 3.30 மணிக்கு நிர்விகல்ப சமாதியடைந்த நம்குல திலகரின் சைவப்பெரியாரும் சிவஞான தத்துவ தீபம் தியான யோக சரவணமாலை முதலிய நூற்களின் ஆசிரியருமான யாழ்ப்பாணம் முத்துக்குமார ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆழ்ந்த சிவபக்தியையும் தமிழாங்கில கல்விவியின் பாண்டியத்தையும் சங்கீத திறனையும் குலனூல் சித்தாந்த வேதாந்த நூல்களில் அபார தேர்ச்சியையும் பாராட்டி மிகவிளக்கமாகவும் உருக்கமாகவும் சொற்பொழிவு நிகழ்த்திய பின் மஹோர்சவ விழா இனிது நிறைவெய்தியது எனக் காரியதரிசி எம் தண்டபாணி அறிவிக்கிறார்
குறிப்பு: 1930 களில் பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தினர் சிறப்பாக சங்கம் நடத்திவந்திருக்கின்றனர் என்பதை காண முடிகின்றது.

Be the first to comment on "யாழ்ப்பாணம் முத்துக்குமார ஆச்சார்யா ஸ்வாமிகள்"

Leave a comment

Your email address will not be published.


*