தேவ. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி அவர்கட்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதமஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2024 விஸ்வாஸ் வித்யா நிகழ்ச்சியில் மஹா விஸ்வகர்மா விருது வழங்கி விஸ்வாஸ் ஸ்தபதி அவர்களை கௌரவித்தது நினைவிருக்கலாம்!
சுவாமிமலை பாரம்பரிய சிற்பக்கலை குடும்பத்தின் ஜெயம் இண்டஸ்டரீஸ் மறைந்த தேவ சேனாதிபதியின் மூத்த மகன் ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக அளவில், உலோக சிற்பங்கள் தயார் செய்வதில் சுவாமிமலை புகழ் பெற்று விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை பெரிய கோயிலை கட்டும் பணிக்காக, வந்த சிற்ப கலைஞர்கள் பாரம்பரியத்தை சேர்ந்த 34வது தலைமுறையினர் சுவாமிமலையில் ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் சிற்ப கூடத்தை நடத்தி வருகின்றனர். மறைந்த ஸ்தபதி தேவ சேனாதிபதியின் மகன்களான ராதா கிருஷ்ணன் ஸ்தபதி, ஸ்ரீகண்ட ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்திபதி ஆகிய மூன்று சகோதரர்களும் இணைந்து இதனை இந்த நிறுவனத்தை வருகின்றனர்.
இவர்களது சிற்பங்கள் இன்று உலக அளவில் பல்வேறு கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இந்தியா அளவில் பல்வேறு முக்கிய கோயில்களிலும் இவர்கள் வடிவமைத்த சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான சிலைகளை மிக நேர்த்தியாக சோழர் கால பாணியில் தயாரித்தளித்து காண்போரை வியக்க வைத்த பெருமை இவர்கள் குடும்பத்திற்கு உண்டு. தேவ சேனாதிபதியின் மூத்த மகன் ராதாகிருஷ்ணன் ஸ்திபதி, மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு மேற்கொண்டவர். 2023ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடந்த 18வது ஜி20 மாநாட்டிற்காக 40 அடி உயரத்தில் மிகப்பெரிய நடராஜர் சிலை செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வழங்கியது.
இதுபற்றி குறிப்பிடுகையில்,
“27 நட்சத்திரங்களை குறித்திடும் வகையிலும், பிரதமர் மற்றும் இந்தியா என்ற பெயருக்கும் பொருந்திடும் வகையில் 27 அடி உயரத்தில் 24 அடி அகலத்தில், 21 டன் எடையில் உருவாக்க முடிவு செய்து அது மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனது தலைமையில் சகோதரர்கள் ஸ்ரீ கண்டன் மற்றும் சுவாமிநாதன் உதவியோடு, நூற்றுக்கணக்காண சிற்பிகளின் துணையோடு இப்பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. டெல்லி பாரத மண்டபத்தின் நுழைவு வாயிலில் இச்சிலை நிறுவப்பட்டது. 3 மாதங்களில் ஒரே வார்ப்பில், தயார் செய்தோம். இது சுவாமி மலைக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமை
இந்த விருதிற்கு நான் மட்டுமல்ல எனது சகோதரர்கள் மற்றும் சிற்ப கூட சக ஊழியர்கள், சுவாமிமலை ஊர் மக்கள் என அனைவருமே காரணம், இந்த விருது, சிற்ப கலைஞர்களுக்கு மேலும் உந்து சக்தியாகவும், ஊக்க சக்தியாக அமையும். இதனை வழங்கிய பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”என்றார்.
Be the first to comment on "ஸ்வாமிமலை ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி ஸ்தபதி அவர்கட்கு பத்மஸ்ரீ விருது"