காரைக்குடி கவிதாயினி திலகம் இராமச்சந்திரன், MA
ஐம்பொன்னால் உன்பதுமை உருவாக்கி
வடிவமைத்தோம் ஏற்றமுற முடிப்பவளே!
பள்ளத்தை நாடுகின்ற வெள்ளம்போல் எங்களது
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
பொன்னால் அலங்கரித்து வெள்ளிச் சதங்கையிட்டோம்
அங்குசம் பாசம் மலர்அம்பு கரும்பு வில்லும்
தங்கும் கரங்களினால் தாயே பரிந்தெடுத்து
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
மரத்தாலே திருத்தேரும் மாண்புமிகச் சமைத்தோம்
கரத்தாலே அருளளித்தால் கணநேரம் ஆகுமென்று
கண்ணாலே வரமளிக்கும் அன்னை காமாட்சியம்மா
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
இரும்பை அடிப்பதனால் இதயங்கள் இரும்பல்ல
விரும்பியே வேலைசெய்தும் வெறும்சோறும் நித்யமல்ல
மலரான விரலெல்லாம் இரும்பாகக் காய்த்திருக்கும்
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
பாத்திரங்கள் செய்வோம் பாடுபட்டும் பலனறியோம்
சாத்திரங்கள் போற்றும் சகலகலா வேதவல்லி
சுவர்ண காமாட்சியுனை தென்டனிட்டுக் கும்பிட்டோம்
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்
ஓஜா என்பது விஸ்வகர்மா சமுகத்தின்…வகையை சார்ந்தவர்களா… நமன் ஓஜா, பிரக்யன் ஓஜா