விராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்

கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்குகும் என்பது பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீர பிரம்மேந்திர சுவாமிகள் என்பார், “சாந்திர சிந்து” என்னும் வேதமாகிய “காலக்ஞானம்” என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் பங்கனபள்ளி நமது சேலத்து மாம்பழம் எப்படி பிரசித்தமோ அப்படி இந்த பங்கனபள்ளி மாம்பழம் ஆந்திராவில் மட்டுமின்றி மேலை நாடுகளிலும் பிரசித்தமானது தங்கம் போன்ற மஞ்சள் நிறத்தில் மெல்லிய தோலுடன் அதிக சதைப்பற்று கொண்ட சுவையான மாம்பழங்களுக்கு இந்த ஊர் பேர்போனது.இந்த ஊரில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ வீர பிரமேந்திர சுவாமிகளின் கோவில் உள்ளது/ இவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும் சொல்வார்கள். கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதை பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டு கால ஞானம் என்ற நூலில் விவரமாக எழுதி வைத்தவர் இந்த சுவாமிகள்.
ஆங்கிலேயர் காலத்தில் இது ஒரு குட்டி சமஸ்தானமாக இருந்தது. நவாப்கள் தான் இதனை ஆண்டு வந்தனர். சுவாமிகள் இங்கு 25 வருடங்கள் தங்கி இருந்தார். பலவிதமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பங்கனபள்ளி நவாப் இவரை சோதிக்க விரும்பி சூல் கொண்ட ஒரு குதிரையை சபைக்கு கொண்டுவந்து அதன் வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என சுவாமிகளைக் கேட்டார். அதற்கு சரியாக பதில் சொன்னதோடு தனது ஞானத்தின் மகிமையால் குருட்டுப் பையனுக்கு பார்வை அளித்தார். இதையெல்லாம் பார்த்து மகிழ்ந்த நவாப் ஸ்ரீ வீர பிரமேந்திர சுவாமிக்கு பங்கனபள்ளியில் கோவில் கட்ட 50 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார்.இன்றும் அந்த மடம் அங்கு உள்ளது பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர் மொத்தம் 4,32,000 பனை ஓலைகளில் முக்காலத்தையும் கணித்து எழுதியவை இந்த மடத்தின் கிழே ஒரு மரப் பெட்டியில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது.ஸ்ரீ வீரப்பிம்மம் – உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது.
அவர் கலியுக்தில் நடக்கயிருப்பதை எழுதுகின்றேன். இது “காலக்ஞானம்” என்று கூறி அதிலுள்ளவற்றை அச்சம்மாவுக்கு கூறி அருளினார். அதில் கூறியவை இன்றும் நடக்கின்றது. பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் புண்ணிய தலங்களிலே தரும தேவதையிருப்பாள். கலிமுற்றும் போது சத்தியம் அழிந்து விடும். அசத்தியம் தான் இருக்கும். மக்களிடையே பரபட்சம் அதிகரித்து அதன் படி நடப்பர். துரோகிகள் பிறப்பர் பஞ்சமாபாதகங்கள் விருத்தியடையும். ஆச்சாரமுள்ளவர்கள் அனாச்சாரியாவார்கள். மக்களிடையே கலகம் தோன்றி ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர். இறைவணை நிந்திப்பர். பெண்கள் மறுமணம் செய்து கொள்வர். தெய்வசக்தி குறைந்து மந்திர சக்தியும் குறையும். பிராமண குலத்தில் பிறந்தவர்கள் சமுத்திர பிரயாணம் மேற்கொள்வர். மாமிசம் புசிப்பர். கலப்பு ஜாதிகள் தோன்றும். மக்கள் தர்மகாரியங்களில் நம்பிக்கை இழப்பார்கள். உலகில் பயங்கரமான வரட்சி தோன்றும். ரத்தக்கண்ணீர் வடிப்பர். முறை தவறிய விசாகம் நடைபெறும். நடு இரவில் சூரியன் பகவான் தோன்றுவார். து~;ட தேவதை ஆட்சி கிராமம் தோறும் நிகழ்ந்து கிராமங்கள் அழிந்து போகும். இது போன்ற நிகழ்வுகள் சர்வசாதாரனமாக நிகளும். இவை குறித்து யாரும் பயமோ கவலையோபடமாட்டார்கள். அவர்களுக்கு அது நிதியாகத் தெரியும். அப்படி உலகமே மாறிவிடும். அறிவற்ற மூடர்கையில் இது பட்டால் இதைப்படித்து கேலிசெய்வர். இதன் இரகசியம் புரிந்தவரிகளுக்கே இது புரியும்.
அடுத்து நவாப் மன்னருக்கு அவரின் வேண்டு கோளின் படி சுவாமி எழுதிய காலக்ஞானம் என்ற நூலின் சில பகுதியை செல்லத்துவங்கினார் அவை காசியில் உள்ள நடன சிற்பங்கள் உயிர்பெற்று நடனமாடுவதுடன் மக்களுடன் பேசும் இவ்வாறு நிகளும் போது வீரபோக வசந்தராயன் என்னும் பேரில் மான்நிட ஜென்மம் எடுப்போன். உலகில் நியாயச் செயல்கள் குறைந்து அநியாயம் தலைவிரித்தாடும். உண்மை பொய்யாகவும் பொய் உண்மையாகவும் மாறும். நல்லவர்களுக்கு நாட்டில் பெருகை இருக்காது. உலகில் தீமை பிரகாசமாகும் அதையே உலகமக்கள் நாடுவர். வேதம் சாரம்லாது போகும். விராமணர்கள் தமது சுயநலத்தின் பொருட்டு சாஸ்திரங்களையும் வேங்களையும் பயன் படுத்துவர். வேதசாஸ்திரங்கள் பொய் என்ற பாதங்கள் உலகில் பல பாகங்களிலும் நடைபெறும். உலக வாழ்கையில் தந்தை மகனையும் மகன் தந்தையையும் மோசம் செய்வான். பருவகால மழைகள் உரியகாலத்தில் பொழியாது. விளைச்சல் வீரியம் குறைந்தாக இருப்பதுடன் விளைச்சலும் குறைவாகும். பிராமணர்கள் வேதசாஸ்திரங்களிலிருந்து விலகி சூத்திரர்கள் போல் மாமிசம் புசிப்பர். தாய்தந்தையர்கள் ஆண்மக்களை நம்பாது பெண்பிள்ளைகளை நம்புவர். அரசர்கள் ஆட்சிக்குப்பதில் மக்களே அராஜக ஆட்சி நடத்துவர். கோயில்களில் பிராமணருக்குப் பதிலாக சுத்திரர்கள் பூசை புணக்காரங்களில் ஈடுபடுவர். குதிரை மாடு போன்ற நான்கு கால் விலங்குகளுக்குப் பதில் நான்கு சக்கர இயந்திரம் தோன்றும். நாட்டில் உணவு விளைச்சல் குறைந்து பஞ்சம் தோன்றும். ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்ல முயல்வர். மக்களிடையே சாந்தம் குறைந்து கோபம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடும் விரதமும் மேற்கொள்வோர் க~;டமும் தரித்திரமும் அனுபவிப்பர். வேம்பின் இலை இனிபாமும். காஞ்சிகாமாட்சி கிறுகிறு என்று சுற்றுவாள். ஒருவர் மனைவி மற்றொருவருக்கு மனைவியாக இருப்பாள். பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும். குருவாயுரில் உள்ள கிரு~;ணன் மக்களுடன் பேசுவார். காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும். திருப்பதிக்குச் செல்லும் வழியிவ் தடங்கள் ஏற்படும். வெங்கடவன் சொத்து மற்றவர்களால் களவாடப்படும். முஸ்லிம்களின் அரசம் அதிகாரமும். அடியோடு அழிந்து போகும். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் பிறரால் வஞ்சிக்கப்படுவர். வேதங்களும் புராணங்களும் சரியான முறையிலான விளக்கங்கள் கொடுக்கப்படது. தவறான கேலியன முறையில் விளக்கங்கள் கொடுக்கப்படும். உண்மைகள் மறைக்கப்பட்டு பெய்கள் அதிகரித்து கபடமானமுறையில் ஏமாற்றப்படுவர். தாய் தந்தையர் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற ஆசாபாசம் இல்லாது போகும்.
சமாதிக் கோவில்:
போதைப் பொருட்களின் தயாரிப்பு அதிகரித்து மக்கள் அதிகமானவர்கள்; போதையில் மூழ்கி அடிமையாகுவர். விக்கமேநாம வருடம் உலகின் பல பகுதிகளில் பயங்கரமான நிலைமைகள் ஏற்பட்டு தனவந்தர்கள பெரும்;பலானவர்கள் தரித்திரநிலையையடைவர். தணிணீரில் மிதற்கும் பொருட்கள் தாண்டும் தாளும் பொருட்கள் மிதந்கும் தன்மை பெறும்.இந்த மாறுதலின் விழைவால் 17 சதவீதமான மக்கள் இந்த நிலையினால் மாண்டு போவர். இராத்தாட்வரிநாம வருடம் மாரக்க சிரசுத்த சத்தமி அன்று சென்னைப்பட்டினத்தில் ஏழுவயது சிறுமியான பெண் ஒருத்திக்கு நான்கு கைகளும் மூன்று கண்களும் மூன்நு கால்களும் தலையில் கொம்பும் ஓரு குழந்தை பிறக்கும் அச்சிசுவானது இருபத்திநானகு நாட்கள் வாழ்ந்து இருபத்திமூன்றாம் நாள் ஸ்ரீPவீரபோகசசந்தராயன் அழிவிலிருந்து காக்க வருவார் எனக்கூறி பிராணத்தை விடும். அரசாங்கமே கருச்சிதைவுக்கு அனுமதி வழங்கி அறிவிக்கும்.மூன்நு வயது சிறுவன் பெரியவர்களுடன் வாதம் வெய்வான். தான் பெற்று எடுத்த மகனை வஞ்சித்து நிந்திக்கும் தந்தை. கணவனை மோசம் செய்து அவனுடன் சன்டையிட்டு அவமாயப்படுத்தும் மனைவி. பெற்று வளர்து ஆளாக்கிய தந்தையரை ரச்சிக்காத மகன்கள். தான் மணந்த பதிவிரதையை அம்சிக்கும் கனவர்மார். இப்படியான தூர்குணங்கள் கொன்டவர்கள் அதிகளவில் காணப்படுவர். பசுவின் கருவில்மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான். மூன்று தலைகளைக் கொண்ட பசுக்கன்று ஜனிக்கும்அற்கு இரண்டு யோனி இருக்கும். ஆதில் ஒன்று மனிதத்தன்மையுடையதாக விருக்கும். செம்பு பித்தலை போன்ற உலோகங்கள் தங்கத்தில் கலந்து கலப்புலோகம் செய்து மக்களை ஏமாத்துவர். பிராமணர்கள் ஆச்சாரம் தவறி சுயநலத்துக்காகவும் பணத்தாசையாகவும் வேதங்களுக்கும் பிராமணர்களுக்கும் இரிகாசங்களுக்கும் புரோகிதங்களுக்கும் பிதுர்கருமங்களுக்கும் தெய்வ பூஜா விதானங்களுக்கும். தவறானதும் தனக்கு சாதகமானதுமான தவறான வியாக்கியானங்களைக் கூறுவார்கள். மேலும் ஆசாரம் தவறி அனாச்சாரங்கள் செய்வதில் விருப்பப்படுவதினால் மக்கள் மத்தியில் இவர்களுக்கிருக்கும் பத்தியும் மரியாதையும்; விசுவாசமூம் குறையும். சூத்திரர்கள் இவ்வாதிக்கத்தை பிடித்து பிராமணர்கள் சூத்திரர்களின் கீழ்ப்படிந்து பணியாற்றுவார்கள். தரய் தந்தையர்கள் உலக நீதியைத்துறந்து தன்பிள்ளையை பணத்துக்கு விற்பர்.வறுமையின் காரணமாக பெண்கள் மற்றவர்களுக்கு விற்பனைப்பொருளாக மறும் நிலை ஏற்படும். வியாபாரிகள் உணவுப் பொருட்களை குறைவான அளவு அதிகவிலைக்கு விற்கப்படும். பணத்துக்காக ஒருவரை ஒருவர் நிந்தித்து சன்டை செய்து மாண்டு போவர். உலகில் பலபாகங்களிலும் பூகம்பம் ஏற்பட்டு பல உடலும் உடமையும் சேதமுறும். நான் எழுதிய காலக்ஞானத்தை புதைத்து வைத்துள்ள இடத்தில் புளிய மரம் வளர்ந்து வாசனை மிகுதியான பூக்கள் பூக்கும். ஒரு சமயம் வடநாட்டிலிருந்து வந்த யாத்திரிகளுக்கு சுவாமி கூறிய காலக்ஞானத்தின் ஒரு பகுதி. புண்ணிய நதிகள் அனைத்தையும் ஒரு சமயம் பொங்கி மக்கள் அதனால் அவதியுறுவர். கடலில் அமுதம் தோன்றும்( நவீன மக்களுக்கு பயன்படும் பொருள்). காளாஸ்திரியில் இருக்கும் சொர்ணமுகி ஆற்றில் பத்து மகா புருசர்கள் தோன்றுவார்கள். அச்சமயம் நாயுடு பேட்டையில்யுள்ள தனவந்தர்கள் மடிவார்கள். மேல் நாடுகளில் நாகரீகம் என்ற பேரில் புதிய புதிய செயல்கள் தோன்றும். இந்தியா இரண்டாகவும். பிறகு மூன்றாகவும் பிரியும். பங்களாதே~; என்னும் நகரம் புயலுக்கு இரையாகி மக்கள் சேதமடைவர். இந்தியா சனத்தொகை பெருகி குறைக்க வழிதேடும். திருமணங்கள் குலம் கோத்திரம் பார்க்காது நடைபெறும். உயர்ஜாதிப் பெண்கள் நாட்டியம் கச்சேரி பாட்டு நிழல் படம் என்ற மேகத்தினால் கேட்டுபோவர். புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர். அதை கேட்க நாத்தீகர்கள் ஆவலுடன் இருப்பர். மனிதரிடையே சத்வீக போக்கு மாறி அறாஜகம் அதிகரித்து. சிறுவயதிலே சக்தி இழந்து கண்பார்வை இழந்து பெறாமை குடிகொண்டு க~;டங்களில் மூழ்கிக்கிடப்பான். நல்ல ஒழுக்கமான குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் உழைத்துச்சப்பிடும் எண்ணம்மின்றி சோம்பேறியாகி சுற்றுவர் அவர்களுக்கு தாய் தந்தையர் பயபடபடுவர். விதவைகள் உலகில் அதிகரிக்கும். அவர்கள் மறுமணம் செய்து சுமங்கலியாகத்திகழ்வர். பதிவிரதைகள் உலகில் அபூர்வம். பெண்கள் நாகரீகம் என்ற பேரால் கெட்டவளிகளிலும் செயல்களிலும் ஈடுபடுவர். மக்களின் சராசரி வயது குறையும் சிற்றிபங்களில் ஆர்வம் அதிகரித்து ஈடுபடுவர். வெள்ளை காக்கள் காணப்படும். அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும். வயிற்றுப்பிழைப்புக்கு கலைகளைக் கற்றுக்கொள்வர். நான் அப்போது ராஜயோகிகளுக்கு மட்டுமே காட்சி தருவேன்.
வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் – (கலிநடப்பு – முடிவு)
தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து “ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்” என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் “காலக்ஞான தத்துவம்” என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்க தரிசனங்களைக் காண்போம்.
ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.
மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
குலத்தொழில்கள் மாறுபடும்.
ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்;
வஞ்சனைகள் தலைதூக்கும்.
புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
உண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
கண்பார்வை மிகையாக கெடும்.
எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
மக்களின் சராசரி வயது குறையும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)
வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.
பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.
இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

பாரதத்திலும் நாஸ்டிராடாம்ஸ் …….

2 Comments on "விராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்"

  1. K Kumaragurubaran | December 8, 2022 at 1:06 pm | Reply

    ஸ்வாமி கோவிலை பற்றி விபரமாக கூறுங்கள். அங்கு கோவிலில் தங்க இலவச மண்டபங்கள் இருக்கிறதா?அவரது ஆசிக்கான வழிபாடு பற்றியும் ஏதேனும் பூஜிக்கும் மந்திரங்கள் இருந்தாலும் கூறுங்கள். நோய் குணமாக எப்படி வழிபட வேண்டும். நன்றி

  2. இது பற்றிய தகவல்கள் தனியாக இல்லை.இணையத்தில் தேடினால் கிடைக்கும்

Leave a comment

Your email address will not be published.


*