சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு

‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’

இந்நூலில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி ‘பஞ்சாங்கம் குண்டையனுக்கும் மார்க்கசகாயம் ஆசாரிக்கும் நடந்த சம்வாதம்.’ இரண்டாம் பகுதி ‘மார்க்கசகாயம் ஆசாரி முதலிய வாதிகளுக்கும் குண்டையன் முதலிய பிரதிவாதிகளுக்கும், சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாதிகளது வாக்குமூலமும் நீதிபதி அளித்த தீர்ப்பும்.’
மேற்குறிப்பிட்ட வழக்கு, விஸ்வகர்மா சமூகத்தில் திருமணத்தை நடத்தி வைக்க பிராமணர்களுக்கு உரிமையுண்டா அல்லது விஸ்வகர்மா சமூக ஆச்சாரியர்களுக்கு உரிமையுண்டா என்ற பிரச்சினை பற்றி எழுந்தது. இதனைப் பற்றிச் ‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’ என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது:
சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த சதுர்ப்பேரியில் விஸ்வப் பிரம்ம வம்சத்தில் பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி முதலியவர்கள் நடத்துகிற விவாகஸ்தம்பப் பிரதிஷ்டை வைபவத்தில் பஞ்சாங்கம் குண்டையன் முதலான விப்பிராள் கும்பல் கூடி வந்து ஆட்சேபணை செய்தார்கள். அவன் போதனைக்குட்பட்டு வந்த புத்திமான்கள், இந்தப் பஞ்சாங்கக் குண்டையனை நீக்கி நீங்கள் வேத விதிப்படி விவாகஞ் செய்ய யத்தனித்தபடியால் இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் வேத சுருதிப் பிரமாணப் படிக்கு உத்திரவு கொடுத்து உங்களினத்தில் உபாத்தியாயரை வைத்து விவாகஞ் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மேற்படி குண்டையனைக் கொண்டு விவாகம் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னதன பேரில் பஞ்சாங்கக் குண்டையனுக்கும் மார்க்க சகாயம் ஆசாரிக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் சம்வாதம் நடந்தது.
குண்டையன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை கூறினார். இந்த உரையாடலே நூலின் முதல் பகுதியாகும்.
மார்க்க சகாயம் ஆசாரி கூறிய விவாதங்களைக் கேட்டு, பஞ்சாயத்தார் அவர் பக்கமே தீர்ப்பளித்தார்கள். அத்தீர்ப்பில்,
இந்தப் பண்டிதல் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தர்க்கித்ததற்கு மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாய்த் தெரிந்திருப்பதால் இனி விஸ்வப் பிரம்ம வம்சத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று முடிவு செய்தார்கள்.
குண்டையனும் அவனைச் சேர்ந்த சிலரும் இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் அடிதடிச் சண்டை செய்தார்கள். இது குறித்து மார்க்க சகாயம் ஆசாரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிராது செய்தார். இவ்வழக்கு சாட்சிகளால் ருசுவானபடியால் குண்டையனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் மாஜிஸ்திரேட் அபராதம் விதித்தார். விவாக நஷ்டத்தைப் பற்றிச் சிவில் கோர்ட்டில் பிராது கொடுக்கும்படியும் உத்திரவிட்டார்.
அவ்வாறே 1814 இல் மார்க்கசாகயம் ஆசாரி முதலியோர் சித்தூர் ஜில்லா அதலாத்துக் கோர்ட்டில் பிராது கொடுத்தார்கள். அவர்களுடைய வாதங்களும் குண்டையன் முதலிய பிரதிவாதிகளின் மறுமொழியும் கோர்ட்டுத் தீர்ப்பில் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அத்தீர்ப்பு முழுவதையும் இங்கே தருவோம்.
விஸ்வப்பிரம்ம வம்மிசத்தாரை சுபாசுபங்களைக் குறித்து வேத விதிப்படி செய்வதை விப்பிராள் தடங்கல் செய்ய கூடாதென்று சித்தூர் ஜில்லா அதலாத்துக் கோட்ர்டுத் தீர்ப்பு
1814ஆம் வருஷத்திய அசலுக்குச் சரியான நகல். அசல் நவம்பர் 205, 1818இல் தீர்ப்பு.
வாதிகள்
சதுப்பேரியிலிருக்கும்
வெள்ளை ஆசாரியார்
மார்க்கசகாயம் ஆசாரியார்
ருத்திர ஆசாரியார்
வெங்கிடாசல ஆசாரியார்
நல்லா ஆசாரியார்
குழந்தை ஆசாரியார்
சின்னக்கண்ணு ஆசாரியார்
அருணாசல ஆசாரியார்
மகாதேவ ஸ்தபதியார்
தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார்
வரத ஆச்சாரியார்
வக்கீல்- அப்துல் சாயபு
வாதிகள் பக்கம் தஸ்தாவேசுகள் வேதசாத்திரங்கள் விபரம் உள்நம்பர் 1இல்
 • எசுர் வேதம்
 • புருஷசூக்தம்
 • மூலஸ்தம்பம்
 • வச்சிரசூசி
 • வேமநபத்யம்
 • கபிலரகவல்
 • ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.
 • பிரதிவாதிகள்
சதுர்ப்பேரியிலிருக்கும்
பஞ்சாங்கக் குண்டையன்
அருணாசல ஐயன்
வெங்கடசப்பு சாஸ்திரி
விஸ்வதி சாஸ்தரி
தொட்டாசாரி
எக்கிய தீட்சிதர்
வியாச பட்டர்
சூரிய நாராயண சாஸ்திரி
ஜோசி சாஸ்திரி
வந்தவாசி சிரஸ்தாரய்யர்
வக்கீல் – அருணாசல முதலி
பிரதிவாதிகள் பக்கம் தாஸ்தாவேசுகளாகத் தாக்கல் இல்லை
விசாரணை சாட்சிகள்
ஆண்டியப்ப முதலி
சங்கரநாராயண செட்டி
கோபி செட்டி
அப்பாசாமி பிள்ளை
வெங்கடசுப்பு நாயக்கன்
வாதிகள் பிராது
பஞ்சமுகப் பிரம்மாவினுடைய சத்தியோ ஜாலமுகத்தில் ஸாநகரிஷியும் வாமதேவ முகத்தில் ஸநாதனரிஷியும் அகோர முகத்தில் அபுவநஸரிஷியும் தற்புருஷமுகத்தில் பிரத்நஸரிஷியும் ஈசாந முகத்தில் ஸூபர்நஸரிஷியும் இந்த ஐந்து பேரும் பஞ்சமுகத்தில் உற்பவித்த பிரம்ம ரிஷிகளின் வம்சஸ்தர்களாகிய தாங்களே பிராமணாளென்று பாத்தியஞ் சுருதி வாக்கியப் படிக்கும் வழக்கப்படிக்கும் தங்களில் 1, 2, 3 வாதிகளுடைய வீட்டில் விவாக முகூர்த்தங்கள் நடக்கும் பொருட்டாய் தாங்களனைவரும் யத்தனப் பட்டுக்கொண்டிருக்கையில் சங்கர சாதிகளான பிரதிவாதிகள் துராக்கிருதமாய் பிரவேசித்து, தாங்களே வேதோக்தப் பிரகாரம் நடப்பிவிக்கக் கூடாதென்றும், புராணோக்தமாய், தாங்களே நடத்தி வைக்கிறதாயும், சொல்லித் தாங்கள் கும்பல் கூடி அடித்து விவாக முகூர்த்தம் நிறைவேறாமல் தடங்கல் செய்து போட்டதாயும், அது சங்கதிகளைக் குறித்து மேற்படி ஜில்லா மாஜிஸ்திரேட்டுத் துரையவர்களிடத்தில் தாங்கள் பிரியாது கொடுத்ததற்கு அவர்களை விசாரணை செய்து பிரதிவாதிகளுக்குத் தகுமான தண்டனை கொடுத்து நஷ்டத்தைக் குறித்து ஜில்லாவில் பிராது செய்து கொள்ளும்படியாய் டைரி நகல் கொடுத்திருப்பதாகவும் ஆனதால் பிரதிவாதிகளால் கலியாண சாமக்கிரியை ரூபாய் 550-ம் வாங்கிக் கொடுக்குப்படியாயும், வாதிகளாகிய தாங்கள் இனி மேல் நடப்பிக்கப்பட்ட சுபாசுபக் கிரியைகளில் பிரதிவாதிகளெங்கும் எத்தேச கிராமங்களிலும் பிரதிவாதி வம்மிசத்தாரைப் பிரவேசிக்காமலிருக்கும்படியாயும் தீர்மானிக்க வேண்டுமெனவும் கண்டிருக்கிறார்கள்.
பிரதிவாதிகள் கொடுத்த ஆன்ஸர்
பிராதில் கண்ட பிரம்மரிஷிகளுக்கும் வாதிகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், பிரம்மரிஷிகளுடைய வம்சம் வாதிகளுடைய வம்சம் அல்லவென்றும், வாதிகள் பஞ்சமர் வம்சத்திற்குச் சமமானவரென்றும், ஆனதால் வேதோக்தமாய் உபாத்தியாயஞ் செய்யக் கூடாதென்றும், வாதிகள் செய்கிற தொழில் வெகு நிக்ருஷ்டமானதென்றும், தாங்கள் சுருதிப் பிரமாணமாயும் பிராமணாளென்பது திருஷ்டாந்தமாய் உலகத்திலுள்ள சமஸ்த வருணாசிரமத்தாருக்கும் தங்களைக் கொண்டே சகல கிரியைகளும் நடப்பித்துக்கொண்டு வரப்பட்டவர்கள். தாங்கள் இருக்கையில் வாதிகள் மாமூலுக்கு விரோதமாய்த் தாங்களேயென்று கலியாண காரியங்கள் நடப்பிக்க யத்தனப் பட்டதேயன்றி தங்களால் நஷ்டம் சம்பவித்ததில்லையென்று கண்டிருக்கிறார்கள்.
வாதிகள் கொடுத்த ரிப்ளை
ஸாநகரிஷி, மனுப்பிரம்மரூபமும், ஸநாதனரிஷி மயப்பிரம்மரூபமும், பிரத்னஸரிஷி சில்பிப் பிரம்மரூபமும், சுபர்னஸரிஷி விஸ்வக்ஞப் பிரம்மரூபமும் இந்தப் பிரம்மரிஷிகளில் வகுத்துக் கொண்டவர்களின் வம்மிசத்தார்களாகிய தங்களுக்கு வேதோக்தமாய் மேற்கண்ட ரிஷிகளின் கோத்திரசாகை பிற வகைகளும் உண்டாயிருப்பதாகவும்,
வேதபிராமணப் பூர்வீகமாய் மனுப்பிரம்மாவிற்கு இரும்பு வேலையும் ரிக்வேத பாராயணமும் துவஷ்டப் பிரம்மாவுக்கு தாமிர வேலையும் சாமவேத பாராயணமும் விஸ்வக்ஞப் பிரம்மாவுக்கு சுவர்ண வேலையும் பிரணவவேத பாராயணமும் ஆகிய இந்தப் பஞ்சவித கன்மங்களை அனஷ்டித்து விதிப்படி வருகிறதினாலே உலக சம்ரக்ஷ்ணையாகி வருகிறதாகவும்,
தங்களுடைய அவுபாஸன ஓமகுண்டலத்திற்கு தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலான பஞ்சலோகங்களையும் ரத்தினம் முதலான நவமணிகளையும் ஆகுதி கொடுத்து அதினாலே சிருஷ்டிதிதி, சம்ஹாரம், திரோபாவம், அநுக்கிரக முதலானதற்கும் அஸ்திர ஆயுதங்களை உண்டாக்கவும் சென, ஆசன, அத்தி என அத்தியர் பதானதான பிரிதீ சஷ்டி கர்மமும் சர்வதாபிமானமும் அரசுநிலை ஆக்கினாச்சுரமும் இஷ்டகாம் யார்த்தமும் ஜனன மரணநரக கதியும் ஆதாரமாயிருப்பதுமன்றி சர்வாதார கடவுளாக்கினைக்குச் சம ஆதாரமாயிருக்கின்றது மன்றியில்,
மனுப்பிரம்மா உற்பவம் – வாரம், மயப்பிரம்மா உற்பவம் – நக்ஷத்திரம், துவஷ்டப் பிரம்மா உற்பவம் – யோகம், சில்பி பிரம்மா உற்பவம் கரணம், விஸ்வக்ஞப் பிரம்மா உற்பவம் ஆக இருப்பதால் பஞ்சாங்கம் சொல்லிக் கொண்டு தாங்களே உபாத்தியாயஞ் செய்யலாமென்றும், விஸ்வகர்மாவின் வம்சத்தவர்களாகிய தங்களுக்கு கர்ப்பத்திலேயே பிராமணத்துவம் நிச்சயமாயிருப்பதாகவும், கலைக்கோட்டார் மான் வயிற்றிலும் கௌசிகர் காதி மகராஜாவுக்கு ஜம்புநர் நரி வயிற்றிலும் கௌதமர் பசுவின் வயிற்றிலும் வால்மீகர் வேடச்சிக்கும் அகஸ்தியர் கும்பத்திலும் வியாசர் செம்படத்தி வயிற்றிலும் வசிஷ்டர் தாசி வயிற்றிலும் நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும் கௌண்டின்யன் முண்டச்சி வயிற்றிலும் மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும் மாண்டவ்யர் தவளை வயிற்றிலும் சாங்கியர் பறைச்சி வயிற்றிலும் கார்க்கேயர் கழுதை வயிற்றிலும் சௌனகர் நாயின் வயிற்றிலும் இவ்வித உற்பவமன்றியில் பின்னும் வேமன பத்தியப் பிரகாரம் பறையர் குலத்தில் பிறந்து பறையரைத் தூஷித்து வருகிறதுமன்றியில், ஆதியில் பிறந்தவரை அறியாரோ? இரு பிறப்பர் சேற்றினில் பிறந்த செங்கழுநீர் போல் கூடத்தி வயிற்றில் பிறந்தார் வசிஷ்டர். வசிஷ்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்தார் வசிஷ்டர். வசிஷ்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்தார் க்ஷத்திரியர். புங்கனூர் புலைச்சி வயிற்றிற் பிறந்தார் பராசரர். பராசரருக்கு மீன் வாணிச்சி வயிற்றிற் பிறந்தார் வேத வியாசரென்றும் நீச சாதி முதலான சங்கர சாதியினுற்பவித்த ரிஷிகளின் வம்சத்தார்களென்றும், இவ்வுற்பவதானத்தைக் கோர்ட்டாரவர்கள் பரிசோதித்தால் பிரதிவாதிகள் மேற்கண்ட ரிஷிகளின் வம்சஸ்தார் என்பது திருஷ்டாந்தப்படும் என்றுங் கண்டிருக்கிறார்கள்.
இதற்குப் பிரதிவாதிகள் தங்கள் ரிஜாய்ண்டரில் மேற்படி ரிஷிகளின் உற்பத்தியானது வாதிகள் ரிப்ளையில் கண்டபடிக்கு இருந்த போதிலும் பிரம்ம பீஜந்தாரென்றும் வாதிகளைக் குறித்து வேத வாக்கிய முண்டாயிருப்பது உண்மையாயிருந்தால் பாரத முதலான புராணங்களில் விஸ்வப் பிரம்மாவைக் குறித்து மிகவும் தாழ்மையாகக் கண்டிருக்க இடமிராதென்றும் தாங்கள் சிரேஷ்டர்களென்றும் வெகு காலமாய் ராஜராஜாக்கள் ஒப்புக் கொண்டு சர்வமானியங்கள் முதலானதும் விட்டு இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள்.

கோட்டாரவர்கள் தீர்மானம்

 1. இந்த நம்பர் கட்டு முதலான வேதச்சுருதி பிரமாணங்களெல்லாம் கோட்டாரவர்கள் நன்றாய் பரிசோதித்து ஆலோசனை செய்யுமளவில் சுருதிப் பிரமாணமாயும் சாஸ்திரோக்தமாகவும் வாதிகளாகிய தாங்களே விஸ்வப் பிராம்மணாளென்றும், பிரதிவாதிகள் சங்கர ஜாதியாரென்று ஆட்சேபித்துச் சமாதானம் சொல்லுகிறார்கள்.
 1. பிரதிவாதிகள் பிராமணாளாயிருப்பது ஆன்சரில் கண்டபடிக்கு வாதிகளைப் பஞ்சம சாதியென்று சொல்வது யதார்த்தமாயிருந்தால் யாதொரு வசன மூலமாவது சமாதானஞ் சொல்லாமலும் அவர்கள் சொல்லப்பட்ட சாஸ்திரம் நூதனமென்றாவது வேறே விதமான தாத்பரியமிருக்கிறதென்றாவது ஆட்சேபிக்காமற்போன படியால் யாதொரு புரட்டுமிருக்கமாட்டாது.
 1. புராணங்கள் மூலமாய் பிரதிவாதிகளின் முன்னோர்களாகிய ரிஷிகளின் ஜனனங்களைப் பரிசோதித்தால் வாதிகள் ரிப்ளையில் சொல்லிய வச்சிரசூசி முதலான சுருதி வாக்கியத்திலும் பிரம்மஞானியான வேமன சதகத்திற்கும் இணங்கியிருப்பதாக அபிப்பிராயப்படுவது மன்னியில் மேற்படி பிரதிவாதிகளின் ரிஷிகளை வாதிகள் ரிப்ளையில் சொல்லிய பதினைந்து ரிஷிகளும் தங்கள் ரிஷிகளல்ல என்றாவது, மறுதலிக்காமல் பிரம்ம பீஜத்திற்கு உற்பவமான ரிஷிகள் என்று சொல்வதைக் கேட்டால், பிரம்மாவானவர் நீதியைத் தப்பி ஒருபோதும் நீச சாதிகளிடத்தும் ஜெந்துக்களிடத்திலும் சம்பந்தஞ் செய்திருக்க மாட்டார். அப்படியிருப்பது யதார்த்தமாயிருந்தால் ரிஷிமூலங்கள் சொல்லக் கூடாதென்று புராணங்களில் கட்டுப்பாடு செய்திருக்கும்படியாக நிமித்தியமிராது.
 1. பார்ப்பாரின் கோத்திரங்களிலும் பிறவரையென்று என்று சொல்லப்பட்ட உற்பத்தியும் சாஸ்திர பூர்வீகமாய்த் தெரியப்படுத்தும்படிக்கு மேற்படி ஜில்லா சதுரமீன் பண்டிதருக்கு சகஸ்திரநாமா எழுதித் தெரிவித்ததிலும் மேற்கண்ட பதினைந்து ரிஷிகளுடைய உற்பத்தி ஸ்தானமாயிருக்கிறது. மேலும் அவர்கள் உலகத்தில் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதி முதலான சகல வருணாசிரமங்களும் ஏற்பாடான வெகு காலத்திற்கு பின்பு ஜனித்த முனிவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரிஷிகளின் வம்சத்தாராகிய பிரதிவாதிகள் சிருஷ்டி ஆதியிலேயே ஜனித்த பிரம்ம வம்சத்தாரென்பதற்கு யாதொரு ஞாயமும் காணப்படவில்லை.
 1. பிரதிவாதிகள் சகல வருணாசிரமத்திற்கும் உயர்ந்த பிராம்மணர்களா யிருப்பார்களேயாகில் பிரம்ம சிருஷ்டிக்கு கொஞ்சம் சம்மதியாகிய சகலத்துக்கும் ஆதாரமான கர்மம் அவசியமாக இருக்க வேணும், அப்படிக்கொன்றுமில்லாமல் ஜோகி ஜங்கமரைப் போலே யாசித்து ஜீவனம் செய்யும்படி பரிச்சேதம் விதியிருக்கமாட்டாது.
 1. வாதிகள் தஸ்தாவேசுகளாக தாக்கல் செய்திருக்கிற வேத சாஸ்திரங்களைப் பரிசோதனை செய்ததில் உபயவாதிகள் பாராயணஞ் செய்து கொண்டு வரப்பட்டவர்களாகவிருந்தபோதைக்கும் அந்த வேதங்களில் ஒரு வரியாவது ஒரு அட்சரமாவது பிரதிவாதிகளுக்கும் அவர்கள் முன்னோர்களான முனிகளுக்கும் மற்றவர்களுக்கும் பாத்தியமுண்டாயிருப்பதாகக் காணப்படவில்லை. முன்னோர்களாகிய ரிஷிமுனிகள் லோகப் பிரசித்தமாய் நீசச் சாதியில் பிறந்தவர்களாயிருக்கையில் அவர்களுடைய வம்சஸ்தர்களாகிய பிரதிவாதிகளை சர்வச் சிரேஷ்டர்களாக ஒப்புக் கொள்வது சாஸ்திர விசாரணையில்லாமையாயும் அறிவில்லாமையாயும் இருக்கிறது. ஆனால் முன்னாலே சில தேசங்களுக்குப் பாளையக்காரராக இருந்த அவிவேக துரைத்தனத்தாரையும் சில மூட ஜனங்களையும் எப்படியோ சூதடியினாலே மோசஞ் செய்து நாளது வரைக்கும் கரு ஆண்மை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மோசடிகளைக் கண்டுபிடித்து வருணாச்சிரம தருமங்களையறிந்து பரிபாலனஞ் செய்வது கனம்பொருந்திய கவர்மென்டு துரைத்தனத்தைச் சார்ந்த நீதியாயிருக்கிறது.
 1. வாதிகள் பிராதிலும் ரிப்ளையிலும் சொல்லியிருக்கிற பஞ்சமுகப் பிரம்மாவின் சிருஷ்டி பரம்பரையினுடைய வம்சத்தார்களாகவும் உலக சம்ரக்ஷணைக்காக ஈஸ்வரனுடைய ஆக்கையென்று சுருதி வாக்கியப்படிக்கு சமஸ்தத்துக்கும் ஆதாரமான பிரம கர்மமென்ற பஞ்சவித கர்மங்களை வாதிகள் செய்து கொண்டு வருவதனாலே உலக சம்ரக்ஷணையாகி வருகிறதாக எசுர்வேத முதலானதும் முறையிட்டுக் கொண்டு வருவதனால் ஈஸ்வர ரூபமாகிய ஆகாஸ பூதமானது சகலத்திலும் வியாபித்திருக்கிறாப்போலே வாதிகள் செய்யப்பட்ட பஞ்சகிர்த்தியங்கள் ஜகமுழுவதுக்கும் பீபிலிகாதி ஜந்துக்களுக்கும் ஆதாரமாய்ச சர்வத்திர வியாபியாய் வியாபித்துக் கொண்டிருப்பதால், வேத சம்மதியாய்ப் பிரயட்சமான பிராம்மணரென்று நம்புவதற்குப் போதுமான திருப்திகார முண்டாகிறது.
 1. பாரத முதலான கற்பனைப் புராணங்களில் விஸ்வப் பிரம்மாவைக் கொஞ்சம் நிக்ருஷ்டமாய் எழுதியிருப்பதைப் பார்த்து பிரதிவாதிகள் மனஞ் சகிக்கமாட்டாமல் தூஷித்துப் புராணக் கட்டுக்கதைகள் செய்திருக்கிறார்கள். அப்படியிருந்த போதைக்கும் சகல சாஸ்திரங்களுக்கும் சாட்சியாயிருக்கிற ஆதி வேதங்கள் சிரேஷ்டமாயிருப்பதால் புராணங்களின் கட்டுக் கதைகள் உபயோகப்படமாட்டாது.
 1. பிராதில் கண்டபடிக்கு வாதிகளைப் பிரதிவாதிகள் கும்படி கூடியடித்து கலியாண முகூர்த்தங்களை நடவாமல் தடங்கல் செய்து குந்தப்படுத்தினதாகவும் வாதிகள் சாட்சி நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் முதலான பதினைந்து பேர்களாலும் மாஜிஸ்டிரேட் டைரியினாலும் ருசுவாகியிருக்கிறதினால் கலியாண சாமக் கிரியை நஷ்டம் ரூபாய் 550-ம் இதற்கடியில் காண்கிற செலவுகளும் வாதிகளுக்குப் பிரதிவாதிகள் கொடுக்கும்படியும், வாதிகள் தங்களுக்குண்டாயிருக்கிற பாத்தியப்படிக்கு வேதபாராயண முதலியதுஞ் செய்து கொண்டு சகல கிரியைகளும் தாராளமாய் நடத்திக் கொண்டு வரும்படியாயும் அதில் பிரதிவாதிகள் பிரவேசிக்கக் கூடாதெனவும் தீர்மாளிக்கலாச்சுது.

இந்தப்படிக்கு 1818 டிசம்பர் 15 தேதி சித்தூர் ஜில்லா அதலாத்து கோர்ட்டாருடைய தீர்மானம் அசலுக்குச் சரியான நகல்

9 Comments on "சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு"

 1. Where does the copy of this judgement is available?

 2. தனசேகரன் ஆச்சாரியர் | November 5, 2017 at 3:34 pm | Reply

  ஆச்சாரியாவாக பிறந்ததுக்கு பெருமைபட்டு தலைவணங்குகிறேன்

 3. நான் விஸ்வகர்மன் என்பதில்
  பெருமிதம் கொள்கிறேன்.

 4. செல்வரெங்கம் ராமசாமி | March 16, 2019 at 5:00 am | Reply

  விஸ்வகர்மா குலத்தில் பிறந்ததால் பெருமை.நீசசாதியை தவிர்ப்போம்.

 5. பாலசுப்ரமணியன் | January 31, 2020 at 2:52 am | Reply

  மிகச் சிறப்பு.
  நல்ல அருமையான சமுதாயப் பணிகள்.
  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
  வணக்கம்.

 6. நடராஜ ஆச்சாரியார் | October 13, 2022 at 12:28 am | Reply

  பகவான் விஸ்வகர்மாவே சிருஷ்டிகர்த்தா விஸ்வகுலத்தவரே ஜகத்குருக்கள் ஸ்ரீமத் விராட் விஸ்வ பிரம்மனே நம

 7. R shanmuga moorthy | November 1, 2022 at 9:09 am | Reply

  i am 55 year old person my father and my four father are gold smith at kamuthi ramnad dt.
  more the 40 years back i read chittoor jilla theerppu book in tamil at thrunelvelly.
  at my age of fifteen i can not understand this subject today i has come to understand/
  thanking you
  R shanmuga moorthy

 8. ஜனார்த்தனன் . செ . நா | January 8, 2023 at 5:23 pm | Reply

  சிறப்பான பதிவு

 9. விஸ்வகர்மா குலமக்கள் அனைவருக்கு இதை தெரியப்படுத்த வேண்டும்

  நல்ல பதிவு நன்றி

Leave a comment

Your email address will not be published.


*