உலகின் முதல் ஆகாய வி மானம் செய்த தச்சன் குறித்து குறித்து சீவக சிந்தாமணி
திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி தமிழ்ப் பெருங்காப்பியங்களுள் வைத்துப் பேசப்படும் மிகச்சிறந்த அற நூல். ஏமாங்கத நாட்டுத் தலைநகரம் இராசமாபுரம். அந்நாட்டு மன்னன் சச்சந்தன், அவனுடைய மாமன் விதேய நாட்டு அரசன் சீதத்தன். சீதத்தனின் மகள் விசயை. அவளை மணந்து சச்சந்தன் அரண்மனையே சுகமெனக் கிடந்தான். நாட்டைக் கட்டி யங்காரன் எனும் அமைச்சனிடம் கொடுத்து காத்துவரச் சொன்னான். நாட்டைத் தாமே ஆளும் நயவஞ்சக எண்ணத்தால் அரசனைக் கொன்று, தானே ஆட்சி செய்கிறான். முன்பே செய்து வைத்திருந்த மயிலூர்தியில் சூல் கொண்ட அரசியும், கருவிலிருக்கும் குழந்தையும் (சீவகனும்) தப்பிக்கின்றனர். இதுதான் சீவகசிந்தாமணி.
தமிழ் தச்சன் செய்தவானூர்தி
பல் கிழியும்பயி னுந்துகி னூலொடு
நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன
வல்லன வும் மமைத் தாங்கெழு நாளிடைச்
செல்வதோர் மாமயில் செய்தனன்றே’
(சீவக :235)
நலந்திகழும் பல சீலைகளும் வெள்ளிய நூலும், நல்ல அரக்கும், மெழுகும் பிறவும் கொண்டு வந்து, அரசன் கூறியவாறே ஏழு நாள் கள் வரை வானிலே பறந்து திரியக் கூடிய மயில் போன்ற ஓர் இயக்கூர்தியை (ஆகாய விமானம்) நன்கு செய்தான் தச்சன்.
அரசியாரின் விமானப் பயிற்சி
ஆடியன் மாமயிலூர்தியை யவ்வழி
மாடமுங்காவு மடுத்த தோர் சின்னாள் செலப்
பாடலின் மேன் மெற் பயப்பயத் தான்றுரந்த்
தோட மு றுக்கி யுணர்த்த வு ணர்ந்தாள்
விசயை (அரசி) பாடிப்பாடி, பாடல் அறிந்தாற் போல விமானத்தை மெல்ல மெல்ல இயக்கக் கற்றுக் கொண்டாள். சில நாள்கள் சென்ற பிறகு, ஒரு நாள் கற்பித்தவன் விசையுடன் ஓடுமாறு முறுக்கி உணர்த்த அவளும் கற்றுக்கொண்டு உணர்ந்தாள்.
இயக்கக் கட்டுப்பாட்டுக் கருவி
பண்டவழ் விறலிற் பாவை
பொறிவலந்திரிப்பப் பொங்கி
விண்டவழ் மேகம் போழ்ந்து
விசும்பிடை பறக்கும் வெய்ய
புண்டலழ் வேற் கட்பாவை
பொறியிடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து
கால் குவித்திருக்கு மன்றே!!
விசயை யாழ் நரம்பில் தவழும் தன் விரல்களால் பொறியை வலப்பக்கம் திரிக்க, எழும்பி வானில் தவழும் முகிலைக் கிழித்துக் கொண்டு வானிலே பறக்கும்; இடப்பக்கம் திரிக்க, அம்மயிலூரர்தி மெல்ல இறங்கிக் காலைக் குவிந்திருக்கும்.
ரைட் சகோதரர்கள் விமானம் கண்டு பிடித்ததற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்முடைய தமிழ்த் தச்சன் இயக்குக் கருவியுடன் (ரிமோட்) கூடிய விமானத்தை அமைத்துள்ளான் என்பதே வியப்பாக உள்ளது!
விசயை வானூர்தியில் கையில் இயக்குக் கருவியுடன் காணப்பெறும் இச்ப சிற்பம் திருப்பெருந்துறை அருள்மிகு அளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் செதுக்கப் பெற்றுள்ளது. இச்சிற்பத்தில் கழுகு வடி வினதாய் ஊர்தி உள்ளதே என யாவர்க்கும் ஐயப்பாடு தோன்றலாம்.
கழுகிருந் துறங்கு நீழற்பாடுடை மயிலந் தோகை பைப் பய வீழ்ந்த தன்றே (சீ வகத.300)
என்பதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டாரோ என்னவோ?
உலகம் போற்றும் தமிழ்க் காப்பியக் கருத்துகளும் அரிய கண்டு பிடி ப்புகளும் மறைந்து போதல் நலமோ? ஆகாய ஊர்தியில் அமர்ந்த அரசியார் காணுமளவிற்கும், கேட்கும் அளவிற்கும் அவ்வூர்தியிலே கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால்தான், வென்றி வெம்முரச மார்ப்ப அரசன் இறந்துபட்ட நிகழ்வை விமானத்திலேயே இருந்து கண்டுகொண்டாள் விசயை.
கட்டுப்பாடின்றித்தரையிறங்கிய மயிலூர்தி
அரசி மூர்ச்சித்ததால் தானாகவே விசை குறைந்து இடப்பக்கம் கைப்பட்டு, நகரை விட்டு நீங்கி மனஉறுதி கொண்டோரும் மயங்குமாறு திகழும் கழுகுகள் நிறைந்த அந்த இடுகாட்டிலே மெல்ல மெல்ல விழுந்த து (சீவக:3000) விமானம் என்கிறது மேற்குறித்த பாடல்.
“மஞ்சு சூழ் வதனை ஓத்துப் பிணப்புகை
மலிந்து பேயும், அஞ்சும் மயானந் தன்னுள்,
அகில் வயிறார்ந்த கோதை (அரசியார்) பஞ்சி
மேல் வீழ்வதே போல், பல்பொறிக் குடுமி
நெற்றிக் குஞ்சிமா மஞ்ஞை (மயிற்பொறி)
வீழ்ந்து கால் குவித்திருந்த தன்றே”
(சீவக, நாம இலம்-301)
என்கிறார் திருத்தக்கத்தேவர்.
நன்றி: முனைவர் காளிதாஸ் தினமணி 2, 6. 2019
விஸ்வகர்மாக்களின் அறிவும், அறிவியலும் வரலாற்று ஆவணங்களும் மறைந்து போதலும் மறைத்தலும் தகுமோ?
Be the first to comment on "உலகின் முதல் ஆகாய விமானம் செய்த தச்சன்!"