விஸ்வகர்மாக்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்!

விஸ்வகர்மாக்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்!

விஸ்வகர்மாக்கள் தங்களை நிலை நாட்டிக் கொள்ள பல வழக்குகளை சந்தித்து

தாங்களே பிராமணர்கள் என்று பல தீர்ப்புக்களில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளது

இதோ சில தீர்ப்புக்கள்:

1814௵ சித்தூர் ஜில்லா கோர்ட்டு தீர்ப்பு ::-

பண்டித மார்க்க சகாய ஆச்சாரியார்க்கும், பஞ்சாங்க குண்டையனுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் விஸ்வகர்மப்ராமணர்கள் புரோகிதர்கள் ஆவதற்கு தகுதியில்லை என நடந்த விவாதத்தில் , விஸ்வகர்ம ப்ராமணர்கள்  அனைத்துக்கும் தகுதியுடையவர்கள் என்றே திரு . ஜோசப் என்னும் நீதிபதியால் நமக்கு ஞாயம் கிடைத்தது. ஆனாலும் 1814ல் தொடங்கிய இந்த விவாதம் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 1818 ம் தீர்ப்புநமக்கு சாதகமாக அமைந்தது. இந்த காலகட்டத்தில் நமது வாத்தியார்கள் அதாவது உபாத்தியாயர் என்றுசொல்லப்படும் விஸ்வப்ராமணர்கள் வேதம் ஓதுவதற்கும் , புரோகிதங்கள் செய்வதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் உபாத்தியாயர்கள் பட்ட துன்பங்களும், வேதனைகளும் சொல்லிமாளாது.பலகுடும்பங்களும எங்கெங்கில்லும் பிரிந்து சென்றனர். பசிக்கு சரியான உணவும் கூட கிடைக்கப்பெறவில்லை. இரத்த கண்ணீர் சிந்தியதின் பலனே ஆங்கிலேயர்கள் நமக்கு சாதகமாக கொடுத்த முதல் தீர்ப்பு…

2) வேலூர் தீர்ப்பு ::- 1938ம் ஆண்டு ::- வெங்கிட சுப்பாச்சாரியார் என்னும் விஸ்வப்ராமணருக்கும் , பஞ்சாங்ககிருஷ்ணமாச்சாரி என்னும் ஆருஷேய ப்ராமணருக்கும் “திவசம்” நடத்தும் ப்ரச்சினையில் தீர்ப்பு நமக்குசாதகமாக. Magistrate Bower Dillan என்னும் நீதிபதியால் அமைந்தது… ..

3) சேலம் ஜில்லா தீர்ப்பு 1843௵ ::- இராம லிங்க ஆச்சாரியாரின் பூணூல் அறுத்த குற்றத்திற்காக சேலம் சிவில்ஜட்ஜ் J.G.S. BROOKER. என்னும் நீதிபதி யால் நமக்கு ஞாயம் கிடைத்தது. இதிலும் பூணூல் அறுத்த குற்றத்திற்காக மானநஷ்டத்திற்கு வாதியான இராமலிங்க ஆச்சாரியாருக்கு ௹ 20 ம், வேத அதிகாரத்தை அசிங்கப்படுத்தியதற்காக ௹ 64ம் , கீழ்கோர்ட்டு செலவு ௹ 136 ம் , ஆக மொத்தம் ௹ 220 இராமலிங்கஆச்சாரியார் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கப்பட்டது…

4) சென்னை ஹைகோர்ட்டு கிரிமினல் தீர்ப்பு::- 1885௵ தீர்ப்பின் சாராம்சம்:- விஸ்வப்ராமணர்கள் எந்தகோவிலின் கர்ப்பக்ரகத்திற்குள்ளும் சென்று ருத்ராபிசேகம் செய்வதற்கும், பூஜிப்பதற்கும் தகுதி உண்டென்றுதீர்ப்பு அளிக்கப்பட்டது.

5) மசூலிப்பட்டணம் அபிஷேக தீர்ப்பு ::- 1894௵ மே ௴ சிவகோடி வீரபத்திரன் எனும் விஸ்வப்ராமணன் ம்ஹசிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ப்ரவேசித்து லிங்காபிஷேகம் செய்ததால் லிங்கம் பரி  சுத்தம் இழந்தது என்ற வாதம் ஏற்கப்படாமல் 258 வது செக்ஷன் ப்ரகாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. ………

நமக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்புகளும் , வருடங்களும் பின்வருமாறு::-

1) 1840 ௵ சேலம் கோர்ட்டு தீர்ப்பு ,

2) 1856 ௵ திருச்சிராப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பு

3) 1857 ௵ சேலம் அதாலத்து கோர்ட்டு தீர்ப்பு

4) 1891௵ கோயம்புத்தூர் ஜில்லா சத்தியமங்கலம் டிஸ்டிரிக்ட் முன்சீப் கொடுத்த தீர்ப்பு.

5) 1891௵ செக்ஷன் 394 கொள்ளேகாலம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பு..

6) 1893 ௵ டிசம்பர் 7௳ ஆனாபிள் ஜஸ்டிஸ் தி. முத்து சுவாமி அய்யர் அவர்களுடைய தீர்ப்பு .

7) 1866௵ நவம்பர் 12௳ கிருஷ்ணா ஜில்லா டிஸ்டிரிக்ட் முன்சீப் அவர்களின் தீர்ப்பு .

8) 1866௵ செக்ஷன் 220 , பெஜவாடா டிஸ்டிரிக்ட் முன்சீப் அவர்களின் தீர்ப்பு ,

9) 1885௵ விசாகப்பட்டினம் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்திரேட் TURNER என்பவரால் CASE 78ல் கொடுக்கப்பட்டதீர்ப்பு

10) 1894௵ -1895௵ மைசூர் ஜில்லா கோர்ட்டு தீர்ப்பு,

11) 1928௵ டில்லி நகர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் ஸ்ரீ R.S.L கோபால்தாஸ் அவர்களால் வடநாட்டு ஜாங்கிட்ப்ராமணர்கள் (கொல்லன் ஆச்சாரியார்) கொடுக்கப்பட்ட தீர்ப்பு. ……

இவைகள் அனைத்தும் நமக்கு கிடைத்தவெற்றிகளே.