விஸ்வகர்ம சமூகம் பாரத நாட்டில் பரந்து விரிந்து விஸ்வகர்மா என்ற பெயரிலும் பல துணைப் பெயரிலும் வாழ்ந்து வரும் தேசீய சமூகமாகும். படைக்கும் பரம்பரையில் வழி வந்தவிஸ்வகர்மாக்கள், பாரத நாட்டு கலாச்சாரத்தை பறை சாற்றிய விஸ்வகர்மாக்கள், மாமன்னர்கள் மதித்த விஸ்வகர்மாக்கள், இப்படி தனெக்கென்று, சமூக பாரம்பரியமும் கலாச்சாரமும்தொழில் நிபுணத்துவம் கொண்ட சமூகம், இன்று, தனது தனித்தன்மைய இழந்து, தானே, தனது முகவரியை தேடிக்கொண்டு உள்ளது. இதற்க்கு சமூக ஒற்றுமை இல்லாமை, யநலம், தான் என்ற அகந்தை, தொழிலில் நேர்மையின்மை, தனிமனித ஒழுக்கமின்மை, தன் சமூகத்தாருக்கு தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை, போன்ற பலகாரணங்களால் இந்த நிலமை ஏற்ப்பட்டுள்ளது. இந்த, நிலைமை மாற விஸ்வகர்மா சமூகத்தில் உள்ள அனைவரும் படிப்பறிவு பெற வேண்டும். படிப்பறிவு பெற்றால் மட்டுமே சமூகத்தில் நல்ல உயர்ந்த நிலைக்கு வரமுடியும். நல்ல பதவிகளைப் பெறமுடியும். பதவிகளைப் பெற்று நேர்மையாக வாழ்ந்தால் நம் சமூகம் இழந்த தனித் தன்மையை மீண்டும் பெற முடியும். தன் சமூகத்தாருக்கு தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், நமது இளைஞர்கட்கு உருவாக வேண்டும். நமதுசமூகத்தினர் வேலைவாய்ப்பு பெற நம்மால் ஆன உதவிகளை செய்திட வேண்டும். இதற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையில் விஸ்வகர்மா நல அமைப்பு, விஸ்வாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்தும் நோக்கில்,
-
விஸ்வாஸ் வித்யா என்ற திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகளும், உதவித் தொகைகளும் வழங்கப் படுகின்றன.
-
விஸ்வாஸ் விவாஹா என்ற திட்டத்தின் மூலம் திருமணத் தகவல் மையம் நடத்தப்படுகிறது.
-
விஸ்வாஸ் உத்யோக் கல்வி, வேலைவாய்ப்பு பெறுதல் போன்றவற்றில் உரிய உதவிகளும், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படுகிறது.
-
விஸ்வாஸ் மகளிர் ஆன்மீகப் பணியின் மூலம் ஒன்றிணைக்கப் படுகின்றனர். ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை, நவராத்திரி இதர விழாக்களை மகளிரே முன்னின்று நடத்துகின்றனர்.
-
தனி மனித மேம்பாடு, சுய உதவி போன்றவற்றிக்காக கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
-
மஹா விஸ்வகர்மா விருது நமது சமூகத்தில் தனது துறையில் முத்திரை பதித்து சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டுள்ள வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறது.
THANJAVUR DT,
VISWAKARMA FAMILY
super friends