படைப்புக் கடவுள் ஸ்ரீ விஸ்வகர்மா

பிரகாசம் பொருந்திய ஜோதிமயமான  ஞானத்தையே தானாக கொண்டவரும், அண்டசராச்சரம் அனைத்திற்க்கும காரணகர்த்தராயும், ஆதி இறைவனாகவும், யோகம் ஞானம் முதலிய பல ஆகம சாஸ்திரங்களை. அறிவித்தவரும் பரமஸிவமும் குருவானவரும் சாட்சாத  ஸ்ரீ விஸ்வகர்மாவாகும்

(மூல ஸ்தம்பம்)

ஸ்ரீ விஸ்வகர்மாவின் சகல வடிவ அலங்காரங்களையும்  நாராயண  தைத்ரீயசதுர்த்த  ப்ரவசனம்  ஆகிய “கிருஷ்ணயஜுர்”  வேதத்தில் ஸ்தோத்திரமாக  துதிக்கப்படுகிறது இதுவே ஸ்ரீவிஸ்வகர்மாவின் பூரண  சமஸ்த இலட்சணமான  திருவடிவமாகும் “விஸ்வபிரம்மம்’ என்றும் “ஜகத்குரு” என்றும் போற்றப்படுகின்ற  ஆதியாய்  இருக்கின்ற  ஸ்ரீவிராட்விஸ்வப்பிரம்மம்  ஐந்து முகங்களை கொண்டும் சடாம குடங்களை உடைய அவருடைய.  ஸத்யோஜாதமுகம், வெண் நிறமுடையது கிழக்கு முகம். வாமதேவ முகம் கருநீலநிறமுடையது தெற்கு முகம் அஹோரம் முகம்சிகப்பு நிறம் கொண்டதுமேற்கு முகம் தத்புருஷம் முகம் மஞ்சள் நிறம் உடையது வடக்கு முகம் ஈசான முகம் பச்சைநிறம் உடையது ஆகாய முகம்  சரீரம் பொன் நிறமானது, பத்து புஜங்களை உடையவரும்,  பிரகாசிக்கும் குண்டலங்களை காதில் தரித்தவரும் பொன்னாலான பீதாம்பரத்தை

உத்திரீயமாய் உடையவரும், நாகங்களாகிய  யஞ்ஞோப வீதத்தைக்  கொண்டவரும், உருத்திராட்ச மாலையை  ஆபரணமாய் பூண்டும், புலித்தோல் ஆடையை தரித்தும்,   ஒரு கரத்தில் அட்ச்சமாலையும்,

ஒரு கரத்தில் தாமரையும்,  ஒரு கரத்தில்  நாகபாசமும்,  ஒரு கரத்தில் சூலமும்   ஒரு கரத்தில் பினாக வில்லும்,  ஒரு கரத்தில் மேரு வீணையும், ஒரு கரத்தில் பானமும்,  ஒரு கரத்தில் உடுக்கையும், 

இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் தாங்கியவரும்,  புகழும் படியான தோற்றமும், கோடி சூர்யர்கள் ஒருங்கே உதயமானது  போல் பிரகாசிப்பவரும், எல்லா உயிர்களிடமும் கருணைகொண்டவரும்,  தேவர்கட்கும், மூவர்கட்கும்தேவனான,  மஹாதேவனுமாகிய ஸ்ரீவிஸ்வகர்மப்ப்ரம்மம், ஜகத்குருவாகவும், நான்குதிசைகளையும்,  ஆகாயத்தையும்  நோக்கிய ஐந்து  முகங்களைக்  கொண்டசர்வ  வியாபகருமாகிய

ஸ்ரீவிஸ்வகர்மாவைத் துதிக்கின்றோம் என்பதாகும்.

விஸ்வபிரம்மம்’ ஜகத்குரு ஸ்ரீவிஸ்வகர்மா என வேத

இதிகாசபுராணங்களில் போற்றப்படுகின்ற

ஸ்ரீ “விஸ்வபிரம்மம்’   லோகங்களைப் படைத்த பின்

அதை பரிபாலிக்கின்ற விதமாக முதலில்

தன் மானச சிருஷ்டியால்

சுயம்புவாய்  தோன்றியவர்கள் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகள்,

பின் அவர்களின்  தோன்றல்கள் வழி வழியாக விஸ்வகுலம்,

பல விருட்சமாகி விரிந்து பரந்து உள்ளது.

ஸ்ரீவிஸ்வகர்மாவின்,

வெண்ணிற ஸத்யோஜாதமுகம் கிழக்கு முக தியானத்தால்

உருத்திர ரூபமுடைய சானகரிஷி பின் மனு தோன்றி

ரிக் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்

 

கருநீல நிற வாமதேவ முகம் தெற்கு முக தியானத்தால்

விஷ்ணு ரூபமுடைய சனாதன ரிஷிபின் மயா தோன்றி

யஜுர் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

சிகப்பு நிற அகோரம் மேற்கு முக தியானத்தால்

பிரம்ம ரூபமுடைய அபுவனஸரிஷி பின் துவஷ்டா தோன்றி

சாமவேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

மஞ்சள் நிற தத்புருஷம் வடக்கு முக தியானத்தால்

இந்திர ரூபமுடையபிரத்தன ஸரிஷி பின் ஸில்பி தோன்றி

அதர்வண வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

பச்சை நிற ஈசானம் ஆகாய முக தியானத்தால்

ஸூர்ய ரூபமுடைய சுபர்ணரிஷி பின் விஸ்வக்ஞ தோன்றி

பிரணவ வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

(இதை யஜுர்வேத எக்ஞ் மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது)

“ஜாதம்பஞ்சப்ரம்ம  குலம்  ஸ்ந்ததெள  விஸ்வகர்மண

நித்தியகர்மாஷ்டகயுதம் கர்மசோடச நிஷ்டிதம்

மனு மயா ஸ்ததாத் வஷ்டா ஸில்பி விஸ்வக்ஞ்யித்யபி

விஸ்வகர்ம சுதாஹ்தே பஞ்சஸ்ருட்டிப்ரவர்ததக.”

என்று ஸ்காந்தம் நாகர காண்டத்தில் ஸ்ரீவிஸ்வகர்மாவின்

புத்திரராக ஜனித்த மனு, மய, த்வஷ்டா, ஸில்பி விஸ்வக்ஞ,

எனும் விஸ்வகுல சந்ததியர்களே,

உலக சேமங்களைக் கருதி பஞ்ச கிர்த்திய தொழில்களைப்

புரிந்து ஜகத்,ஜீவ  சிருஸ்டிகளை  ஒருங்கேகொண்டு

ஸ்ரீவிஸ்வப்ப்ரம்ம சந்ததியரேனவும்   போற்றத்தக்க

விஸ்வகர்மபிராமணர்கள் என வேத சம்மதமாக

அழைக்கப்பெற்றனர். இதுவே இப்பூவுலகில் ஐந்தொழிலைத்

தமது உரிமையாக,

உடமையாகக் கொண்டு தொழில் நடத்தி

வாழ்ந்து வரும் விஸ்வகுலத்தவரின்  வரலாறு ஆகும்.

 

1 Comment on ""

  1. Super support vishwakarma mayiladuthurai 9445637270

Leave a comment

Your email address will not be published.


*