athisankarar

இன்றைக்கு சுமார் 1075 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ நாட்டின் பேரரசாக விளங்கியவன் குலோத்துங்க சோழன். தமிழின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனின் பிரதான அவைப் புலவராக இருந்தவர்  ஒட்டக்கூத்தர். தமிழின் மீது தீராபற்றுக் கொண்டவர், மிகச்சிறந்த தமிழ் புலமை பெற்றவர். தான் ஒரு தமிழ் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழை பிழையாக உரைத்தால் உடனே அவரை சிறையில் அடைத்து விடுவார். அப்படி சிறையில் அடைக்கப் பட்டவர்கள் சிறையிலிருந்து மீள ஒரே ஒரு வாய்ப்புக் கொடுப்பார். அது என்னவெனில் ஒட்டக் கூத்தர்  கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறுவது தான்.
ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திப் புதல்வருக்கும் எப்பொதுமே தமிழால் யார் புலமையில் சிறந்தவர் என்ற கர்வம் உண்டு. ஒருமுறை புகழேந்திப் புலவரை எந்த விசாரணையுமின்றி சிறையிலடைத்து விட்டார் ஒட்டக்கூத்தர். அதுமட்டுமல்லாது அவருடனிருந்த தமிழ் புலவர்களையும் தமிழால் சித்தரவதை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் கண் முன் தோன்றிய ஒரு புலவரைப் பார்த்து இறுமாப்புடன்,
நீ யார்?, உன் தகப்பன் யார்? உன் தொழிலென்ன? எனக் கேட்டாராம் ஒட்டக்கூத்தர், அந்தப் புலவர் விஸ்வகர்மா இனத்தைச் சார்ந்த கொல்லர் ஆவார். அதற்கவர்,
செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே
என்றான். “நான் செல்லப்பாசாரியின் புதல்வன் திருவேங்கடாச்சாரி. நான் உலகுக்கு குருவாக விளங்குபவன். இத்தகைய கொல்லனாகிய என் கவிதையிற் குறை காண்போரது பல்லைப் பிடுங்கி, பருந்து தன் இரையை ஆட்டி அலைக்கழிப்பதுபோல் ஆட்டுவித்து, அவரது பகைவர் எள்ளி நகையாடும் வண்ணம் கவிதையாகிய இரும்பு ஆணியால் அடிப்பேன்” என்று பொருள். இப்படி இந்தப்பாடல் மூலம் விஸ்வகர்மா குலத்தைச் சார்ந்த புலவர் தம்மை ஜெகத்குரு என்றும் அதனால் ஆச்சாரியென்றும் கூறியதை ஒட்டக்கூத்தரும், புகழந்தி, கம்பர் முதலிய பெரும் புலவர்களும்,சபையோரும், மன்னர் முன்னே வாய்பொத்தி ஒப்புக்கொண்டிருப்பதை அறிகிறோம். இதன் மூலம் ஆதி தொட்டு விஸ்வகர்மாக்கள் ஜெகத்குரு என்ற பட்டமும், ஆச்சார்ய பட்டமும் பெற்றிருக்கிறார்கள் என்பது புலனாகும்.
இமயம் முதல் குமரி வரை வாழும் ஐந்தொழில்களை பிறப்புரிமையாக செய்துவரும் விஸ்வகர்மா பிராமணர்கள் மொழி நடை உடை முதலியவற்றில் சிறிய சிறிய வேறுபாடுகளக் கொண்டிருப்பினும், பொதுவாக விஸ்வகர்மாவை தங்கள் தெய்வமாக எங்கும் வழிபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அவரே தெய்வம். பாரதம் முழுக்க  விஸ்வகர்மாவிற்கென்று பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல உண்டு. விஸ்வகர்மா வழிவந்தவர்களுக்கு ஆச்சார்யா, மற்றும் ஜெகத்குரு என்ற பட்டங்கள் வேதங்களிலும் புராணங்களிலும் வழங்கப்பட்டிருந்தாலும், பிற்காலங்களில் ஏற்பட்ட ஜாதி பேதங்களால் இன்றுள்ள விஸ்வகர்மாக்கள் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போட்டுக் கொள்ளாமல் ஆசாரி என்று போட்டுக் கொள்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பத்து வருடங்களுக்கொரு முறை எடுக்கப்பட்ட ஜாதீய புள்ளி விபர கணக்கெடுப்பில் ஆச்சார்யா என்று பதிவு செய்ய வலியுறுத்தி போராடியதொன்றே இந்த விஸ்வகர்மா இனத்தவர் தங்கள் பூர்வீக பிறப்புரிமைகளை உயிரினும் மேலாக கருதியதற்கு போதிய சான்றாகும்.
அந்தக்காலம் தொட்ட பிராம்மணத்துவம் பெற்றவர்களாக இரு வகையான பிராமணர்களை புராணங்களில் குறிப்பிடப்படுள்ளது அவர்கள் பௌருஷேயர் மற்றும் ஆருஷேயர் ஆவர். விஸ்வகர்மா பிராம்மணர்களை பௌருஷேயர் அல்லது விஸ்வகர்மப் புருஷத்துவமுள்ளவர்களென்றும், தேவப்பிராம்மணர்களென்றும், ஆருஷெயர் என்பது வஷிஸ்டாதி கௌதம ரிஷிகள் மூலம் வந்த கோப்பிராம்மணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.  சுவிரத காள ஹஸ்திமுனி அருளிய பிரம்மாண்ட புராணம் ஸ்ருஷ்டி கர்த்தா பவே த்வஷ்டா என்ற முதற் சுலோகத்திற்கு அடுத்த இரண்டாம் சுலோகத்தில்,
பொருள்: பூர்வம் பிராம்மண குலம்தேவர்களினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவையானது, பௌருஷேயம் மற்றும் ஆருஷேயம் என்றும்,வஷிஸ்டர் முதலான ரிஷிகளின் கோத்திரத்தில் உண்டானவர்கள் ஆருஷேயரென்றும், விராட் புருஷ்னாகிய விஸ்வகர்மா முகத்தில் உதித்த  ஸானகாதி ஐந்து  பெரிய கிளைகளோடுள்ள ராஜ விருட்சமாகிய குலத்தினால் வுருத்தியடைந்தவர்கள் பௌருஷேயரென்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைக்கும் அவரவர்களுடைய வேத வழிபாட்டின் முறைகளில் “தேவ ப்ராம்மணேப்ய: என்றும், “கோப்ராம்மணேப்ய: என்றும் இரு பிராம்மணவர்க்கப் பெயர்கள் பிரிந்து  சொல்லப்பட்டு வருவதை அனைவரும் அறியலாம்.
“பிரஹத் ஜோதிஷார்ணவ” கிரந்தகர்த்தா ஆருஷேயப் பிராம்மணோத்தமர், பிரம்மஸ்ரீ ஹரி கிருஷ்ண சர்மா அவர்களால் தொகுக்கப் பெற்ற பிராம்மணோபதி காண்டம் என்னும் சமஸ்கிருத நூல் 51ஆம் அத்தியாயம், லிங்க புராணம் சைவாகமம் கூறுவதாவது,
பொருள்: உலகின் கண் ஐந்தொழில்கள் புரியும் பொருட்டு, ஸ்ரீ பரமசிவமாகிய விஸ்வகர்மாவினது ஐந்து முகத்தினின்று ஐந்து தேவப் பிராம்மணர்கள் தோன்றினார்கள். அவர்கள் மனு, மயன், துவஷ்டா, சில்பி, விஸ்வக்ஞன் என்னும் ஐவர்களாகும். அவர்களில் மனு சங்காரகர்த்தா, மயன் ரக்ஷிப்பின் கர்த்தா, துவஷ்டா உற்பத்தி கர்த்தா, சிற்பி கிரக சிருஸ்டி கர்த்தா, விஸ்வக்ஞன் பூஷணாதிகளை  சிருஷ்டிப்பவர். எனவே மேற்கண்ட ஐந்தொழில் வகையால் ருத்திரன், விஷ்னு, பிரம்மன், இந்திரன்-சூரியன் என்னும் ஐந்து பேர்களின் அம்சமாக வந்தவர்கள் என்பதாகும். மேலும் இவர்கள் மனு – ரிக்வேதமும், மயன்-யஜுர்வேதமும், துவஷ்டா-சாம வேதமும், சில்பி-அதர்வண வேதமும், விஸ்வக்ஞன்-ஸுஷூம்ணாபிதம் என்னும் பிரணவ வேதமும் உரிமையாகக் கொண்டு அத்தியயனம் செய்பவர்கள், அப்படி பஞ்ச வேதங்களையும் உணர்ந்த ஐவகை பிராம்மணர்களை போற்றுபவர்கள் இம்மை, மறுமை பயன்களாகிய தர்மார்த்தமாதி நான்கையும் அடைவார்கள் என்று ஸ்ரீ நந்திகேவரர் பிருகு மகனுக்கு உபதேசம் செய்தார்.
இவ்வாறு  பிராம்மணத்துவம் கொண்ட விஸ்வகர்மா பிராமணர்கள் தங்களின் உண்மை நிலை அறியாது தாழ்த்திக் கொண்டதாலும், பூர்வ ராஜாக்கள் காலம் தொட்டு ஆங்கில அரசாட்சி வரை பிராம்மணன் என்று சொல்லிக்கொள்ளும் அச்சந்ததியார் தங்களுடை அரசியல் செல்வாக்குகளாலும் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வகர்மா பிராமணர்களுக்கு தொல்லைகள் பல விளைவித்து வந்ததையும், அதனை எதிர்த்து பல்வேறு நீதி மன்றங்களில் விஸ்வகர்மா பிராம்மண சான்றோர்கள் வாதாடி தங்கள் உரிமையை நிலை நாட்டியுள்ளனர் என்பதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆங்கிலயர் ஆட்சிக் காலத்தில் அவர்களது சூழ்ச்சி காரணமாக ஆச்சாரி என்ற பட்டம் ஆசாரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர்  தங்கள் தங்கள் பட்டப்பெயர்களால் அழைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு ஜாதியினருக்கும் உண்டென்பதை உணர்ந்து, விஸ்வப்பிராமணர் என்ற சாதிப்பெயரும், விஸ்வகர்மர் எனவும் மாற்றிக் கொள்ள ஆங்கிலேயர் உத்தரவிட்டனர்.
ஆச்சார்ய என்பது மட்டுமல்லாது ஜெகத்குரு என்ற பட்டமும் விஸ்வபிராம்மணர்களுக்கே உரியதாகும். புராணங்களிலும், பல்வேறு சமஸ்கிருத கிருந்தங்களிலும் இவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணயஜுர் வேதம் 2-5, சாந்தோக்ய உபநிஷத் அஷ்டமம், நாகரகாண்டம் அத்தியாயம் 5, அமரகோஷ வாக்கியம், விஸ்வகர்மா புராணம், சிற்ப சாஸ்திரங்கள், சரஸ்வதி நாம கிரந்தம் போன்ற புராண சமஸ்கிருத நூல்களில் இதற்க்கான ஆதாரங்களைக் காணலாம். (சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பிரம்மஸ்ரீ டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரியார் எழுதிய விஸ்வகர்மா பிராம்மண வம்சப் பிரகாசிகை)
ஆதிகாலம் தொட்டே விஸ்வப்ராமணருக்கென்றே பல குரு மடங்கள் இருந்து வந்துள்ளன.தமிழகத்தில் திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளாரிநாத அனவராதார்ச்சய ஸ்வாமிகள் பிரசித்தி பெற்றவர். பரசமய கோளாரிநாத பிள்ளைத்தமிழ்  என்னும் அரிய பிரபந்தத்தில்,
மருக்கமலம் மொழிபழன நெல்லை
வளம் பதினாலு மறை வேதத்தின்
உருக்கலந்து கருத்தரித்து சிவஞான
வடிவாகி யுலகிலெங்குந்
திருக்கறுக்கும் பரசமயசிங்க மெனும்பெயர்
படைத்துத் தெளிந்துவைகுங்
குருக்களுக்குங் குருவாகிக் குலத்திலெயுஞ்
ஜெகத்குருவாவாகு மென்றே”
என்று பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெகத்குரு என்ற பட்டம் விஸ்வகர்மா பெரியோர்களுக்கே உரித்தானது என்பது விளங்குகின்றது. இதேபோன்று மாந்தைப்பள் என்னும் பண்டைய  நூலில், மழைக்குறியோர்தல் என்ற பாடலில்,
“தனமரையோர் குலகுரு வாச்சாரி சங்கராச்சாரி
கனதுவட்டா மகன்விசுவ கன்மப் பிராமணனே
மனமையம்வேண்டாமெனுமேன்மக்களுரை மழைக்குறிகள்
தினமுறவேயுணர்ந்த வுழத்தியர் மகிழ்ந்து கிளத்துவரே”
என்ற பாடலின் மூலம் ஆதி சங்கராச்சாரியார் விஸ்வப்பிராம்மணரே என்பதும் ஆச்சார்ய பட்டத்திற்கு உரியவரே  என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இதேபோன்று ஆந்திரநாட்டு ஞானியும் யோகியுமான வேமன்னா அவர்கள் இயற்றியுள்ள பாடல்களில் வரும் இரண்டு பதிகங்கள் ஆதிசங்கராச்சாரியார் விஸ்வப்ராமண இனத்தைச் சார்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

vemanna

“ஆதிசங்கரர் யுலவனிலோ விஸ்வகர்மா
வேறை சங்கராச்சார்யா விபுலமயிரி
பாதுகாசிரமந்து மோசின பலமுனோ
விஸ்வதா பிராம விநரவேமா”
பொருள்:  இந்த பூமியின் கண் சிவாம்சமாய் அவதரித்த ஆதிசங்கராச்சாரியார் என்றால் அவர் சாட்சாத் விஸ்வகர்மாவாகும். (அவருக்கு நான்காம் பட்டமாகவும் சுவீகார புத்திரரும் சீடருமாக வந்த) வேறு ஆருஷேய சங்கராச்சார்யார் பெருமை பெற்றார். அதற்கு காரணம் தன்னுடைய  மூன்றாவது சங்கராச்சார்யா ஸ்வாமிகளின் பாதுகையை தனது சிரசின் மீது வைத்து, சுமந்து வந்ததின் பலனேயன்றி, வேறொன்றுமல்ல. உலகிற்குணர்த்தும் ஞானமாகிய அழகு வாய்ந்த ஓ வேமன்னா நீ கூறுவாயாக என்பதாகும்.
“சங்கராசார்யுலு – ஜகத்குருவனுதுனு
கொப்பகா செப்பிரி – ஒப்பு கொண்ட்டி
கம்சாலி பேர்ட்ளு பாபுலகு கலிகெனோ!
விஸ்வதா பிராம விநரவேமா!”
ஞானமாகிய அழகால் உலகுக்கு மகிழ்வை விளைவிக்கும் ஓ வேமன்னா! ஸ்ரீ சங்கராச்சார்யா ஸ்வாமிகள், ஆச்சார்யார், ஜெகத்குரு என்றும் பெருமைப் படுத்தி சொன்னார்கள். அதையும் ஒப்புக் கொண்டேன். கம்மாளருக்கே உரிய ஆச்சாரியார், ஜெகத்குரு என்னும் பட்டமானது பார்ப்பனுர்களுக்கு உண்டோ? என்பதை நீ ஆராய்ந்து கூறுவாயாக என்பதாம். இப்படி ஜெகத்குரு, ஆச்சார்யார் பட்டம் விஸ்வ பிரம்மணர்களுக்கே உரித்தது. அந்த வகையில்  ஜெகத்குரு ஆதி சங்கராச்சார்யார் எந்த பிராம்மணர் வகையை சார்ந்தவர் என்பதை ஆதாரத்துடன் பார்ப்போம்.
ஒரு சமயம் ஆதிசங்கராச்சார்யார் அவர்கள் தேச சஞ்ஞாரம் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அங்கே ஹிந்து மதத்தின் மேன்மைகளையும் தனதுதத்துவங்களையும் அத்வைத கோட்பாடுகளையும் மக்களுக்கு போதித்து வந்தார். இதற்க்காக தனது சீடர்களுடன் தேச சஞ்ஞாரம் மேற்கொண்டு வரும் போது, ஆந்திராவில் உள்ள மசூலிப்பட்டணம் வந்தடைந்தார். அந்த ஊரிலே தேவகம்மாளர்கள் என்று சொல்லக் கூடிய விஸ்வ பிராம்மணர்கள் செழிப்புடனும், வேதங்களை பயிற்சியும் செய்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்தனர். தங்களது ஊருக்கு வேதவிற்பன்னர் ஒருவர் வருவது கண்டு அவரைக் காண தேவகம்மாளர்கள் கூடினர். ஆதிசங்கராச்சார்யார் மசூலிப்பட்டணத்தில் நுழையும்போது அவரது சீடர்கள் ஆச்சார்யா ஆதிசங்கரரை போற்றி ஜெகத்குரு வருகிறார், ஜெகத்குரு வருகிறார், என கோஷங்களை எழுப்பியவாறே ஊடினுள் னுழைந்தனர். இதுகண்டு ஏற்கனவே ஜெகத்குரு, ஆச்சார்யா பட்டங்கள் தங்கள் சமூகத்திற்கே உரிமையானது என்றும் மற்றவர்கள் எப்படி இந்த பட்டங்களை உபயோகிக்கலாம் எனவும்  ஆதிசங்கரரிடம் வாதாடினர். அதற்கு ஆதிசங்கரர் தான் யார் என்று அவர்களுக்கு உரைத்ததை சங்கரவிஜயம் மூலமாக அறியலாம்.
“ஆச்சார்யோ சங்கரநாமோ துவஷ்டா புத்ரோ நசன்சய விப்ரகுலகௌரார்டிக்க்ஷ விஷ்வகர்மந்து பிராம்மண;” நான் ஆச்சார்யா சங்கராச்சாரி, துவஷ்டாவின் புதல்வன், விஸ்வகர்மா எனது குலம் என்று அவர்களிடம் உரைக்கிறார். ( Questioning Shankara his right to the distinction, he sang in reply: Acharyo Sankaranama Twashta putro nasansaya Viprakula Gourordiksha Visvakarmantu Brahmana: I am a decendent of Twashter, […] I am a Brahmin of the Vishwakarma Caste. Alfred Edward Roberts (Proctor of the Supreme Court of the Island of Ceylon, Member of the Ceylon Branch of the Royal Asatic Society.). Visvakarma, and His Descendants. Ceylon Visvakarma Union, Colombo, Ceylon, 1909. p. 10.) (Adi Shankaracharya – As per Shankar Vijaya, Shankara Sang “I am a decendent of Twashter, … I am a Brahmin of the Vishwakarma Caste”. (Andhra Historical Research Society, Rajahmundry, Madras, Andhra Historical Research Society. Journal of the Andhra Historical Society, Volumes 14-17\. Andhra Historical Research Society., 1953. p. 161.)
பிராம்மணர்களின் இணையதளத்திலும் (http://www.brahminvoice.org/ 2012/10/ 12/his-holiness-bhagawan-sri-sri-sri-adi-shankaracharya-life-history/)  ஆதிசங்கரர் விஸ்வகர்மா குலத்தை சார்ந்தவர் என்று எழுதப்பட்டிருப்பதை காணலாம். சில பிராம்மணர்கள் தொடர்ந்து இந்த உண்மையை மறைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்:

33 Comments on ""

  1. AWESOME explanation about adi sankaratcharya..
    SUPERB.

  2. வே.பாலசுப்பிரமணியன் ஆச்சாாி | April 28, 2017 at 4:01 pm | Reply

    அநேக விஷயங்களை தொிந்துகொண்டேன்…

  3. கே என் வி நடராஜன் விஸ்வகாமா மயிலாடுதுறை | June 16, 2017 at 8:24 am | Reply

    நல்ல பல தகவல்களை தொிந்து கொள்ள முடிந்தது ! இது போன்று விஸ்வகாமா இனம் சம்பந்தமான பல புத்தகங்களில் இருந்து இன்னும் சிறப்பான அறிய விஷயங்களை எடுத்து எழுதுங்கள் நம் விஸ்வமாமா இளைஞா்கள் மற்றும் எதிா்கால சந்ததியினருக்கு மிகவும் பயன் பாடாக இருக்கும் !!

  4. Fine Thanks ; Please publish this kind of writings in regional languages also . Then only all younger generation will know about unknown things.

  5. தனசேகரன் ஆச்சாரியர் | November 5, 2017 at 4:21 pm | Reply

    very nice

  6. N.Alagumurthi | January 3, 2018 at 9:44 am | Reply

    Extraordinary service to the society

  7. நம் குல விசயங்கள் பல தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி.

  8. குலம் காக்க விஸ்வபிராமணர் வளர்க.

  9. எம்குலமக்கள் வரலாறு சிறப்புமிக்க குலம் வளர்க….

  10. விஜயராஜா | February 16, 2018 at 5:04 pm | Reply

    பயனுல்ல பதிவு

  11. விஜயராஜா | February 16, 2018 at 5:20 pm | Reply

    விஸ்வகர்மாவை மறந்தோம் வேதங்களை இலந்தோம் இன்று துன்பங்கள் அனுபவித்து கொண்டுள்ளோம் ? நாளை நடப்பது கலியுகம் என்றாலும் நடப்பது நன்மையாக அமையட்டும் எல்லாம் அவன் செயல் வாழ்க வளமுடன்

  12. சூப்பர் விஸ்வகர்மா மக்கள் வாழ்க வளமுடன்

  13. Saravana kumar | April 1, 2018 at 4:07 pm | Reply

    அருமையனதகவல்

  14. SARAVANAN DORAISWAMY | April 20, 2018 at 1:51 pm | Reply

    Sir, it was told my ancestors, but now I am confident about “Jagadguru Sri Sankaracharyar”
    but we the Sakara matam is controlled by Brahmins.

  15. Excellent information I am interest poonul details plz help me

  16. Very important news more than use advanced good useful useful message thank you Kum sankarachary test beautiful use Tamil Nadu all India god bless you Mayiladuthurai MD Jaya Ganesh god bless you god bless you

  17. நமது விஸ்வகர்ம சமூகத்தின் வரலாற்றுப் பூர்வமான அருமைபெருமைகளை நம்மில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

    பல சாதனையாளர்களை உடைய சமுதாயம் என்றாலும் கூட, காலச்சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் நம்மவர்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள் ஜனநாயக அடிப்படையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகின்றன என்பது உண்மை.

    இந்தக் குறைகளையெல்லாம் களைய நமது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும், பாடுபடும் பொருட்டு, எல்லாம் வல்ல வேதாந்த சொரூப ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்தின் திருவருள் துணையுடன் விஸ்வகர்ம மயிலாடுதுறை MD.ஜெயகணேஷ் 9445637270

  18. இங்கு உள்ள விவரங்கள் எல்லாம் பெரும் பொக்கிஷம்.
    Blessed to know about this website

  19. M.Balasubramaniaacharya | March 9, 2019 at 3:48 pm | Reply

    It is true

  20. நல்ல பல தகவல்களை தொிந்து கொள்ள முடிந்தது ! இது போன்று விஸ்வகாமா இனம் சம்பந்தமான பல புத்தகங்களில் இருந்து இன்னும் சிறப்பான அறிய விஷயங்களை எடுத்து எழுதுங்கள் நம் விஸ்வமாமா இளைஞா்கள் மற்றும் எதிா்கால சந்ததியினருக்கு மிகவும் பயன் பாடாக இருக்கும் !!

  21. M.Marichelvam | April 3, 2019 at 2:38 pm | Reply

    Kammala perinamay valka valka

  22. S.K. Balasubramani Vishwakarma | May 2, 2019 at 7:52 pm | Reply

    Real story is Greatly acceptingly world’s proud to Vishwabramana and Vishwakarma. My Heartfully Thanks for information.

  23. s,kalidass, M.Sc., M.Phil., B.Ed., Ph.D | June 10, 2019 at 9:32 am | Reply

    nammudaia kulathai pattri nandraga therindu konden

  24. s,kalidass, M.Sc., M.Phil., B.Ed., Ph.D | June 10, 2019 at 9:33 am | Reply

    I know the full details of lord vishwakarma and it is very useful for our future generation

  25. SM Brammarayar | June 29, 2019 at 4:01 pm | Reply

    This the indication of right direction to be followed by our youths because we should know our origin. Very sharp approach. Awaiting more.

  26. Balamurugan Vishwakarma Achary | November 27, 2019 at 12:28 pm | Reply

    அருமையான பதிவு விஸ்வகர்மாவின் விஸ்வபிராமனன் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது.

    நன்றி,
    பாலமுருகன் விஸ்வகர்மா ஆச்சாரி
    புவனகிரி

  27. பரமசிவம் | November 29, 2019 at 3:21 pm | Reply

    நல்லா பல தகவல்களை தெரிந்துக்கெள்ளா முடிந்தது நம்மலுக்கு அரசல் கிடைக்கும் சலுகை ஒரு துழிகூட கிடைக்கா வில்லை இது தான் உன்மை

  28. D.வேலு ஆச்சாரி | December 25, 2019 at 5:21 pm | Reply

    அருமையான தகவல்கள் முற்றிலும் உண்மை

  29. I am happy to read the history of vishvakarma community and i am proud to be vishvakarma. i congratulate for this great service.

  30. KESAVAASHARI.R | June 13, 2020 at 1:48 pm | Reply

    VAALGA VISWAKARMA….. SAMAYAM VAALGA VIYAGAM VILITHTHURU KARMANE………

  31. Vijayakumar Balachary | June 19, 2020 at 1:23 pm | Reply

    Vijayakumar Balachary, Good day
    I am very happy to see about Vishwarkarma details and proud to be Viswakarama

    Thanks/Vijaykumar Balachary
    9445421106

  32. மணிகண்டன் | August 13, 2022 at 6:03 am | Reply

    Very nice

  33. குமாரவேல் ஆச்சாரி | September 26, 2022 at 6:50 pm | Reply

    அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். மனித சமுதாயத்திற்கு பல தொண்டுகள் செய்த செய்து கொண்டிருக்கிற சமுதாயம் நமது விஸ்வகர்ம சமுதாயம் என்பதில் பெருமை கொள்வோம்.

Leave a Reply to வே.பாலசுப்பிரமணியன் ஆச்சாாி Cancel reply

Your email address will not be published.


*