பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூல் வெளியீடு

ஶ்ரீஶ்ரீஶ்ரீ விஸ்வகர்மா ஜகத்குரு  ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களின் பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூலை 10.4.2022 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கனகபுரா வாழும் கலை மையத்தின்  தலைமை பீடத்தில் வாழும் கலை மைய நிறுவனர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

ஸ்வாமிஜி அவர்கள் இந்த பூவுலகை துறக்கும் முன்னர் அவர் எழுதிய இந்த நூலை அவரது சீடர்கள் சிரமேற்கொண்டு இந்த பணியினை சிறப்பாக முடித்துள்ளது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் டாக்டர் திரு கனகராஜன் ஐயா அவர்களும் கோவை விஸ்வபிரம்ம  மையத்தின் நிறுவனரும் ஸ்வாமி அவர்களின் சீடருமான ஶ்ரீ தயா தாசன் ஸ்வாமிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த வெளியீடு ஸ்வாமிகளுக்கு மட்டுமல்ல விஸ்வகர்மா சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்

 

1 Comment on "பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூல் வெளியீடு"

  1. இந்த நூல் எங்கே எப்படி கிடைக்கும்.

Leave a Reply to Veeramani Cancel reply

Your email address will not be published.


*