விஸ்வாஸ் வித்யா மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா 2019

விஸ்வாஸ் வித்யா – 2019 

நம் விஸ்வகர்மா சமூக மாணவச்செல்வங்கள் பயனுறும் வகையில் 17 ஆவது ஆண்டு விஸ்வாஸ் வித்யா மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா கடந்த 22 செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் சிறப்பாகநடந்தேறியது.

விஸ்வாஸ் தலைவர் திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு கர்நாடகா நந்தி மலை ஶ்ரீ ஞானானந்த ஆஸ்ரமத்தின் ஸ்வாமிஜி பூஜ்யஶ்ரீ ஸ்வாமிசிவாத்மானந்ந சரஸ்வதி அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு அரக்கோணம் திரு..மாணிக்கவேலு அவர்களுக்கு மஹா விஸ்வகர்மா விருதினை வழங்கி ஆசியுரை அளித்து சிறப்பித்தார்கள்

விஸ்வாஸ் அமைப்பின் கடந்த 17 ஆண்டு சீரிய சேவைகளையும் , மாணவர்கள்வாய்ப்புகளைப்  பயன்படுத்தி வாழ்க்கையில் மேன்மையடையும் நெறிகளையும், இவ்விழாவின் நோக்கம் பற்றியும் விஸ்வாஸ் தலைவர் திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் எடுத்துரைத்தார்கள்.

பென்னாகரம் டாக்டர் எஸ் கனகராஜ் அவர்கள் நமது சமூகத்தின் சிறப்புகளையும் , மாணவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு குறித்தும் நிகழ்ச்சியின் மேன்மை பற்றியும் தனது சிறப்புரையில்  எடுத்துரைத்தார்கள்

மஹா விஸ்வகர்மா விருது பெற்ற அரக்கோணம் திரு. மாணிக்கவேலு அவர்கள் அரசியலில். விஸ்வகர்மாவின் பங்கு மற்றும் நமது சமூகத்திற்கான சலுகைகள் குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் சிறப்புக்கள் பற்றியும் தனது ஏற்புரையில் வழங்கினார்

பொள்ளாச்சியில் உள்ள நமது சமுதாய சார்பு அமைப்பின் சேவைகள் மற்றும் மாணவர்களின் சமுதாய உணர்வு அவசியத்தையும் விஸ்வகர்மா ஶ்ரீ காமாட்சிஅம்மன் கோயில் & கல்யாணமண்டப அறக்கட்டளையின் தலைவர் திரு. கே.எஸ்.என்.கனகராஜ் அவர்கள்தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்விழாவில் டிப்ளமோ, கலை, பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூ இரண்டு லட்சம் (ரூ.200000/) அளவில் புதிய தொடர் கல்வி உதவித்தொகைகள் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டன.

மேலும் ஸ்வாமிஜி மற்றும் சிறப்பு விருந்தினர்களின் திருக்கரங்களால் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நமக்கு விண்ணப்பித்த அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டதுவிழாவில் தன்துறையில் சாதித்து வரும் சைக்கிள் பந்தய வீரர் பத்தாம் வகுப்பு மாணவர் செல்வன் அனிருத்ஜெகதீஸ்அரசு மருத்துவர் திரு.முருகேசன் எம் எஸ் கட்டிட பொறியற்துறை வல்லுனர் திரு.ஜி.கே.சரண்ராஜ்குமார் எம் இ ஆகிய இளம் விஸ்வகர்மாக்கள் கௌரவிக்கப்பட்டனர்

நிகழ்ச்சியின் இனிய துவக்கமாக நிசாரி இசைப்பள்ளியின் ஆசிரியர் திரு.ஶ்ரீசுரேந்தர்பண்ணிசைத்த இறைவணக்கம் குறிப்பிடத்தக்கது

முன்னதாக விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு.தி.விவேகானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்க விஸ்வாஸ் இணைச்செயலாளர் திரு.ஜெ.மதுராந்தகன் அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப்பண் இசைத்து விழா இனிதே நிறைவுற்றது

விழாவினை விஸ்வாஸ் பொதுச்செயலாளர் திரு.சி.எஸ்.திருநாவுக்கரசு அவர்கள் தொகுத்து வழங்கினார்.

விழாவில்  கலந்து கொண்ட கோவைதிருப்பூர், தர்மபுரி , சென்னை மற்றும் உள்ளூர் சமூகஅன்பர்கள் விருந்தினர் பெருமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

-சி எஸ் திருநாவுக்கரசு செயலாளர்

Be the first to comment on "விஸ்வாஸ் வித்யா மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா 2019"

Leave a comment

Your email address will not be published.


*