காலத்தைவென்றவர்
(மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்)
“பாகவதர் என்ற சொல்லுக்கு இசைப்புலவர் என்ற பொதுவான பெயரிருந்தாலும் தமிழ்நாட்டில் அச்சொல் குறிப்பாக தியாகராஜ பாகவதரைத்தான் குறிப்பிட்டு வந்தது. ஒரு காலத்தில் திரை உலகின் ஒலியும் ஒளியுமாக விளங்கிய திரு பாகவதருக்கு தமிழ் மக்களின்உள்ளத்திலே ஒரு நிரந்தரமான இடம் உண்டு.” தியாகராஜ பாகவதர் 01-11-1959 ல் மறைந்தபோது ஆனந்த விகடன்
சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் மார்ச் 1, 1910 மாயவரத்தில் விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் திரு கிருஷ்ணமூர்த்தி- மாணிக்கத்தம்மாள் ஆவார். தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் சூப்பர் ஸ்டார் (உயர் நட்சத்திர) அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதர் கர்நாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக வலம் வந்தவை.. 1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட் ஒரே இந்தியப்படம் இதுதான். எம்.கே.டியின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
-
உன்னை அல்லால்,
-
நீலகண்டா,
-
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
-
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
-
ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
-
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
-
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
