
01.03.1910 ஆம் ஆண்டூ மாயவரத்தில்,திரு கிருஷ்ணமூர்தி என்ற விஸ்வகர்ம சமூக பொற்கொல்லருக்கும், அவருடைய மனைவி மாணிக்கத்தம்மாள் என்பவருக்கும் பிறந்தவர் தான் பாடகராய், நடிகராய், கர்னாடக இசை வித்வானாக மூன்றில் ஒன்றாக பரிமளித்து மணம் பரப்பிய எம்கேதியாகராஜ பாகவதர் அவர்கள் பிறந்த பொழுது அவர் குடும்பம் வளமானதாக இல்லை சிறிது காலம் கழித்து அவர் குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது. சிறுவன் தியாகராஜன் பாலக்கரையில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி கற்க அனுப்பப்பட்டான். தியாகராஜன் ஆர்வம் படிப்புக்கு பதிலாக, பாட்டு கேட்பதிலும், பாடுவதிலுமே இருந்தது. அச்சிறுவனைத் தேவார, திருவாசகப் பாடல்களும் எஸ்ஜிகிட்டப்பா போன்ற நாடக நடிகர்களின் கணீரென்ற பாடல்களுமே பெரிதும் கவர்ந்தன. அந்நாட்களில் நாடக நடிகர்கட்கு பெரிதாக மதிப்பும் இருக்கவில்லை. வருவாயும் இருப்பதில்லை. எனவே அவர் தந்தை, மகன் பாடுவதைக் கேட்டு ரசிக்கும் மன நிலையில் இல்லை. ஆனால் தியகராஜனின் சங்கீதக் காதல் மிகவும் ஆழமானதாக இருந்தபடியால் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான். பெற்றோர் மனம் கலங்கி அவனைத் தேடத் தொடங்கினார்கள். தியகராஜன் கடப்பாவில் இருப்பதையும், அங்கு தன் பாடல்களால் ஒரு ரசிகர் குழுவைப் பெற்றிருப்பதையும் அறிந்து உடனே கடப்பா சென்ற கிருஷ்ணமூர்த்தி, இறைவனைப் புகழ்ந்து தன் மகன் பாடிய பாடல்களைக் கற்கண்டை சுவைக்கச்செல்லும் எறும்புகள் போல் ரசிகர் கூட்டம் ரசித்து மகிழ்வதைக் கண்டு பெறு மகிழ்வுற்றார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார். திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரியான பேஷகார், அச்சிறுவனின் தெய்வீக கானத்தைக் கேட்டு மகிழ்ந்து பிரசாதத்தை அளித்து ஆசிர்வதித்தார். திருச்சிக்கு திரும்பியதும் எறக்குறைய அந்த ஊரின் எல்லாக் கோவில்களிலும், சபாக்களிலும் பஜனைகள் பாட அழைக்கப்பட்டான். சங்கீதக் (குழந்தை) மேதையின் புகழ் பரவலாயிற்று ரயில்வே துறையில். பணியாற்றிக் கொண்டிருந்த எஃப் ஜி நடேச ஐயர் என்பவர் திருச்சியில் “திருச்சி ரசிக ரஞ்சனி சபா” என்ற பெயரில் ஒரு நாடக கம்பெனி நடத்திவந்தார்.திசேவாசதனம் என்ற திரைப்படத்தில் எம் எஸ் சுப்புலஷ்மியுடன் ஈஸ்வர ஐயர் என்ற கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார். ஐயர் தனது ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் பாத்திரமேற்று நடிக்க ஒரு தகுதியான சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து அவருடைய அனுமதி பெற்றுத் தியாகராஜனை தன் நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
வருடங்கள் கழித்து எஸ்.டி. சுப்பலஷ்மி, பாகவதருடன் ஜோடி சேர்ந்து ஆரோக்கியமான, கூர்மையான வசனங்களாலும், ஒருவர்க்கொருவர் சளைக்காத நடிப்பினாலும் சரித்திரம் படைத்தனர். எம்.கே.டி.யின் இசை அனைவரது மனதையும் ஆட்கொண்டது மறுக்கவொண்ணாத உண்மை. இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி ஸ்ரீ லங்கா, பர்மா, மலேயா மற்றும் சிங்கப்பூர்த் தமிழரையும் அவருடைய இசை அடிமைப்படுத்தியது. எம்.கே.டி. தன்னை மற்றவர்களைப் போல் எந்த ஒரு குறிப்பிட்ட நாடகக் கம்பனியுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பாததால் அவருடைய நாடகங்கள் ‘சிறப்பு நாடக’ங்களாக அறிவிக்கப்பட்டன. அவர் தன் விருப்பத்திற்கும், வருவாய்க்கும் தக்கவாறு வாய்ப்புகளைத் தேர்வு செய்தார். அவருக்கு ஒரு நாளுக்கு 50 ரூபாய்கள் கொடுக்கப்பட்டு வந்தது. அது அந்த நாளில் மிக உயர்ந்த தொகையாகக் கருதப்பட்டது. அவருடைய நாடகங்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன.
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்து வைத்துக் கொள்வார்களாம். இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீக குரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர். இன்னொரு சமயம், காரில் போய் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் இவரைப் பார்த்து விட, ஒரு ரசிகர் அருகிலிருந்த கடையில் சோடா வாங்கிவந்து தர, பாகவதரின் கார் ஓட்டுனர் சுகாதரமற்ற இதை இதை குடிக்கமாட்டார் என் கூற அதை எம் கே டி உடனே வாங்கி குடித்து விட்டு ரசிகர்களின் அன்பை விட பெரிது வேறொன்றுமில்லை என்றார்.
பல லட்சக்கணக்கான ஆண்களை தனது தோற்றத்தால் கிறங்கடித்த ஹாலிவுட் நடிகை கிராட்டோ கார்போ போல, இவர் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் என்றே சொல்லலாம். பல பெண்களின் தூக்கத்தை பாழடித்தவர். பணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த ஜாதியாக் இருந்தாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும் சரி, உள் மனதிலே காதலித்தார்கள் என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார். அந்த அளவிற்க்கு ஒரு வசீகரம்.
சென்னையில் 1941ல் கல்கி, ராஜா அண்ணாமலை செட்டியார், ஆர் கே சண்முகம் செட்டியார் ஆகியோர் தமிழிசை சங்கம் ஆரம்பித்தபோது, அதை ஊக்குவித்ததோடல்லாமல் தமிழ் பண்ணிசை ஆய்விலும் பங்கெடுத்தார். 1954 வரை தமிழிசை விழாவில் தொடர்ந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு விழாகளிலும் தமிழில் கீர்த்தனகள் பாடி தமிழிசையை ஊக்குவித்தார். சொல்லு பாப்பா என்ற தலைப்பிட்டு பாரதி பாடல்களை ஒவ்வொரு மேடையிலும் பாடினார்.
பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள். இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. ஆனால் உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம். பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார் என்கிற ரதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் பல. எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று. *ஒரு கொலை வழக்கு. ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை சூன்யமாக்கிய வழக்கு. நடந்தது என்ன? பாகவதர் குற்றவாளியா? நிரபராதியா?தொலைத்த இடத்திலேயே தன் புகழைத் தேடிய பாகவருக்கு, மீண்டும் அது கிடைக்காமல் போனது ஏன்? *இசையும் நாடகமும் கலந்த பாகவதரின் வாழ்க்கையை எளிய, சுவாரசியமான மொழியில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி.