விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்

விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்

விஸ்வாஸ் வித்யா 2023 & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா

விஸ்வாஸ்   வித்யா  2023   &   மஹா   விஸ்வகர்மா   விருது   வழங்கும்   விழா

விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் பொள்ளாச்சி சார்பாக 15.10.2023 அன்று  பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் விஸ்வாஸ் வித்யா 2023 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பிரபல பின்னனிப்பாடகரும், இசையமைப்பாளருமான பிரம்மஸ்ரீ டி.எல்.மஹாராஜன் அவர்கள் முதண்மை விருந்தினராகக் கலந்து 2023 ஆம் ஆண்டிற்கான மஹாவிஸ்வகர்மா விருதினையும், மாணவச்செல்வங்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த விழாவில் விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு தி.விவேகானந்தன்  அவர்கள் வரவேற்புரை நல்கினார். விஸ்வாஸ் அமைப்பின் இருபதாண்டு கால செயல்பாடுகளையும், நோக்கங்களையும் தலைவர் பிரம்மஸ்ரீ திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
பெங்களூரு விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் பிரம்மஸ்ரீ கே.பி.நஞ்சுன்டி விஸ்வகர்மா அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதினை பெற்றுக்கொண்டு, நமது விஸ்வகர்ம சமுதாய மக்கள் கல்வி அறிவு சமூக முன்னேற்றத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் குலத்திற்கான அரசு சலுகைகள், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கவனமாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு சமூகத்தை முன்னேற்ற வேண்டும், என சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
விழாவில், விஸ்வாஸ் அமைப்பின் இருபது ஆண்டுகள் செயல்பாட்டினை நினைவு கூறும் வகையில் அனைவரும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷமாக விஸ்வாஸ் சிறப்பு மலரின் முதல் பிரதியை  கோவை சொடல்டெக் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பிரம்மஸ்ரீ கே.எஸ். பாலமுருகன் அவர்கள் வெளியிட்டு மகிழ்வுரை ஆற்றினார். கோயம்புத்தூர் இயற்றமிழ் கலைஞர் பாரதிசுடர், சொல்லரசி திருமதி மஹேஸ்வரி சற்குரு அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு அணிந்துரை வழங்கினார். விழாவின் மேண்மை குறித்தும், மாணவச்செல்வங்களுக்கும் பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ  ஏ.டி. கபீர்தாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் சிகரமாக, 60 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு ஊக்கப்பரிசுளும், கல்வி உதவி தொகைகளும் வழக்கம்போல் நன்கொடையாளர்களின் ஆதரவினால் அவர்களின் கரங்களினாலேயே வழங்கப்பட்டது. விஸ்வாஸ் தனது 21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவ்வினிய வேளையில் மத்திய & செயற்குழ உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .மேலும் விழாவில் பழனி மாம்பழக்கவிச்சிங்க நாவலர் இயற்றிய பதிகம் கொண்ட பதாகையினை பிரம்மஸ்ரீ பழனி மாம்பழம் எம்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் சார்பாக சிறப்பு விருந்தினர் வெளியிட்டு சிறப்பு செய்தார். நிகழ்ச்சியினை பொதுச்செயலாளர் சி எஸ் திருனாவுக்கரசு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.இணைச்செயலர் திரு. மது ஜெகதீஷ் அவர்கள்  நன்றி நவில தேசிய கீதத்துடன் விஸ்வாஸ் வித்யா விழா இனிதே நிறைவுற்றது.
கோவை. ஈரோடு. திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல வெளியூர் மற்றும் உள்ளூர் சமூக அன்பர்கள், பத்திரிகை நண்பர்கள் என சுமார் 400 க்கும்  அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

3 thoughts on “விஸ்வாஸ் வித்யா 2023 & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா

  • B. MARISELVAM

    ஐயா வணக்கம். நான் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவன். எங்களது மாவட்டத்தில் எந்த ஒரு விஸ்வகர்மா அமைப்பும் சிறப்பாக செயல்படவில்லை என்று கருதுகிறேன். சிறிய ஊராட்சி பேரூராட்சி பகுதியில் உள்ள விஸ்வகர்மா மக்களை ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும். இதன் மூலம் தொழில் கல்வி உதவிகள் அவர்களுக்கு எக்கே கிடைக்க வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் எனக்கு உங்களது சரியான ஆலோசனை தேவைப்படுகிறது

    Reply
    • தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
      திருனாவுக்கரசு பொதுசெயலாளர் 9865208652

      Reply
    • please contact Our Secretary he will give advice

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *