முத்து வீரியம் என்பது ஐந்திலக்கணமும் கூறும் ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூலை திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரைச் சேர்ந்தவரான முத்துவீர உபாத்தியார் என்பவரால் கிபி 1840ல் இயற்றப்பட்டது. இவர் கம்மாளர் மரபில் உள்ள கொல்லர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் கம்மாள வாத்தியார் என்றும், முத்துவீர உபாத்தியாயர் எனவும் அழைக்கப்பட்டார்.
எந்தத் தமிழ் இலக்கணநூல் இந்தத் தொகையைச் சொல்கிறது, இப்படி நாம் கொள்ளும் வழக்கிற்கு மரபிலக்கணத்தில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கவலைப்படாமல், தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என இன்றும் இதனை நம் வகுப்பறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்லி வருகிறோம். இப்படி ஓர் இலக்கணநூல் இருக்கிறது என்பதையே அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார் இந்நூலில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன.