அவருக்கு நெருங்கிய. நண்பர்களாய் இருந்தனர். சமபந்தி விருந்து ஆழியாற்றின் கரையில் அம்பராம் பாளையத்தில் நடைபெற்றது. இந்த விருந்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் செல்வந்தர் காங்கிரஸ் தலைவர் திரு.சென்னப்ப கவுடர். சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு பி எம் எஸ் வீட்டிற்கு வந்த போது ஒரு பிரளயம் காத்திருந்தது அவர் தந்தை கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். ”நில்லடா, வீட்டிற்குள் நுழைந்தால் கொலை விழும்! சக்கிலி பறையர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு வந்தவனுக்கு இந்த விட்டில் இடமில்லை. வெளியே போடா! என்று விரட்டினார். இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்ட பி எம் எஸ் சி நண்பர்கள் வீட்டிலும் ஒரிரு நாள் தங்கினார். நீண்ட நாட்கள் இப்படி நண்பர்கள் வீட்டில் தங்க்க முடியாது என்பதை உணர்ந்த பி எம் எஸ் பொள்ளாச்சியை விட்டு வெளியேறி நடந்தே போத்தனுர் வந்தடைந்தார். மூன்று நாட்களில் ரயில்வே நிலையத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தனது பரம்பரை தொழிலான ஆச்சாரி தொழில் அவருக்கு கைகொடுத்தது. அதனால் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. படிப்படியாக ரயில் பையர்மேன் ஆனார். இங்கு கம்யூ இயக்க தோழர்களோடு நட்பு ஏற்பட்டு, அதன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னை இடது சாரிஇயக்கத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் ரயில்வே தொழிலளார்களை ஒருங்கிணைத்து ரயில்வே தொழிலாளர் சங்கத்தினை தோற்றுவித்து தமிழகம் முழுக்க அதில் ரயில்வே தொழிலாளர்களை சேர்த்தார்.