மேலும் வேட்டைக்காரன் புதூரில் வசித்த 15 ஆண்டுகளில் இங்குள்ள சுற்றுப்புறக் கிராமங்களில், கஜாதி, விஜாதி, பிரமுகர்களின் பூரண அன்பையும், ஆதரவையும், தமது அரிய குணாதிசயத்தினாலும் ஆழ்ந்த கல்வியின் ஞானத்தாலும் பெற்று அவரவர்களுக்குத்தகுந்த முறையில், வேதாந்த சித்தாந்த ஹிதோபதேசங்களையும் குலாபிமான விஷயங்களையும், தமதினிய, பிரசங்கங்களினாலும், உபதேசங்களினாலும், அமிழ்தினுமினிய தமிழ்மொழியின் திறமையினாலும், யாவர்மனதையும் காந்த சக்திபோல் கவர்ந்து விட்டனரென்றும் சாந்தமூர்த்தியின் அரிய குணாதிசயங்களையும் சொற்பொழிவாற்றலின் திறனையும் அவர் சங்கீத ஞானத்தையும் வேதாந்த உபதேசங்களையும் கவி இயற்றும் கற்பனா சக்தியையும், நம் போலொத்த சாமான்யர்களால் பேச முடியாதென்றும அண்னாரின் குடும்ப உறவினரின் வரலாற்றையறிய இடங்கொடாத காரணத்தினால் அறிந்து கொள்ள இயலவில்லை என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்பேற்பட்ட மஹான் குறித்து அப்போது விஸ்வ பந்து இதழில் வெளிவந்த தகவல்களிலிருந்து மட்டுமே அறிகிறோம்.
மேலும் யாழ்ப்பாணம் முத்துக்குமார ஆச்சார்ய ஸ்வாமிகள் ஜீவிய சரித்திரம் என்ற நூலை மு நாகலிங்கம் என்பவர் எழுதி 03.04.1939ல் வெளியிட்டுள்ளார் என அறிகிறோம். ஆனால் அந்த புத்தகம் இப்போது யாரிடமாவது இருக்கிறதா எனவும் தெரியவில்லை சில பக்கங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்ற அந்த நூலின்வாயிலாக திரட்டிய செய்திகளேஇவை.
5-4-37 சோமவாரம் மாலை 3 மணிக்கு பொள்ளாச்சி தாலூகா வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச் சுவாமிகள் கோயில் மடாலயத்தில் இவ்வுலகவாழ்வை நீத்த ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் முத்துக்குமர ஆச்சாரிய ஸ்வாமிகளின் அரிய குணாதிசயங்களைப்பற்றி பேசிய பொழுது அன்னாரின் அந்தியகாலக் கடன்களில் ஈடுபடாமைக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும், அன்னவரின் பிரிவானது நம் சமுகத்திற்கு ஈடுபடுத்தொணாத பெரும் நஷ்டமென்றும், கடந்த 15 ஆண்டுகட்கு முன் ஸ்ரீ பழநியம்பதியில் ஸ்வாமிகளைச் சந்தித்து அழைத்ததற்கிணங்கவே இங்கு விஜயம் செய்தனரெனவும் இந்த 15 ஆண்டுகளில் இங்குள்ள சுற்றுப்புறக் கிராமங்களில், கஜாதி, விஜாதி, பிரமுகர்களின் பூரண அன்பையும், ஆதரவையும், தமது அரிய குணாதிசயத்தினாலும் ஆழ்ந்த கல்வியின் ஞானத்தாலும் பெற்று அவரவர்களுக்குத் தகுந்த முறையில், வேதாந்த சித்தாந்த ஹிதோபதேசங்களையும் குலாபிமான விஷயங்களையும், தமதினிய, பிரசங்கங்களினாலும், உபதேசங்களினாலும், அமிழ்தினுமினிய தமிழ்மொழியின் திறமையினாலும், யாவர் மனதையும் காந்த சக்தி போல் கவர்ந்து விட்டனரென்றும் சாந்தமூர்த்தியின் அரிய குணாதிசயங்களையும் சொற்பொழிவாற்றலின் திறனையும் அவர் சங்கீத ஞானத்தையும் வேதாந்த உபதேசங்களையும் கவி இயற்றும் கற்பனா சக்தியையும், நம் போலொத்த சாமான்யர்களால் பேசமுடியாதென்றும அண்னாரின் குடும்ப உறவினரின் வரலாற்றையறிய இடங்கொடாத காரணத்தினால் அறிந்து கொள்ள இயலவில்லையாதாலால், இன்னாரின் பிரிவிற்கு தாம் அதிகம் வருந்துவதாகவும் அண்ணாரின் குடும்பத்தாருக்கு தன் சொந்தச்சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் ஆழந்த அநுதாபத்தை நம் ‘விஸ்வபந்து‘ மூலம் அறிவித்துக்கொள்வதென்னும் தீர்மானத்தைப் பிரரேகிக்க மேற்படி தீர்மானத்தை ஆதரித்த கே. எஸ். கருப்புசாமி ஆச்சாரியர் அவர்களால் ஸ்வாமிகளின் சங்கீத ஞானத்தைப் பற்றியும் ஆங்கிலம் தமிழ்க்கல்வியின் அபார ஞானத்தையும் வெகுவாக புகழ்ந்து பேசி அன்னவர் துறவறத்தை மேற்கொண்டிருப்பினும் குலாபிமான விஷயத்தில் அதிகம் ஈடுபட்டதை உத்தேசிக்கும் பொழுது ஸ்வாமிகளின் குலாபிமாநத்தின் உணர்ச்சியை அளவிடமுடியாதென்றும், இன்னவரின் பிரிவானது விஸ்வகர்ம சமுகம் தனதருந்தவப் புதல்வனையும் சைவ உலகம் சைவத்தொண்டர் ஒருவரையுமிழந்ததென்று உறுதியாய்க் கூறலாமென வெகு உருக்கமாகப் பேசியதோடு தீர்மானத்தை ஆதரித்த, கனம் பிரஸிடெண்டு அவர்களால் ஸ்வாமிகளின் உயர் குண லக்ஷியங்களை, வெகுவாய்ப்புகழ்ந்தும், கடந்த 4, 5 ஆண்டுகளாய் அன்னாரின் தலைமையிலேயே சைவ சமயாச்சாரிகள் நால்வருள் ஒருவரான ஸ்ரீலஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் திருநட்சத்திர வைபவம் வெகு விமரிசையுமாய் நடைபெற்றதென்றும், இத்தீர்மானத்தை எல்லோரும் எழுந்து நின்று அன்னவரின் ஆத்மா சாந்தியடையுமாறு பிரார்த்தனைசெய்ய வேண்டுமெனவும், 5 நிமிஷ பிரார்த்தனையுடன் தீர்மானம் யாவராலும் ஏகமனதுடன் நிறைவேறியது. ஸ்வாமிகளுக்குத் தக்க இடத்தில் சமாதி ஏற்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் இனிது நிறைவெய்தியது.