அப்பொழுது சுவாமிகள் வயது பதினான்கு ஆகும் அவர் தமது நித்திய அனுஷ்டானங்களை மிருகண்டு நதிக்கரையில் முடித்து சிவயோகத்தில் அமர்ந்து இருந்த வேலையில் இரண்டு புலிகள் அவர் இரு புறமும் நின்று காவல் இருந்தன இது கண்ட மடாதிபதிகள் நாம் வயதில் மூப்பு எய்தி பூரணத்துவ நிலைக்கு பக்குவப்பட்டு உள்ளோம். ஆனால் இவரோ சிறுவனாக உள்ளாரே, இவரால் எப்படி இச்சீரிய அருஞ்செயலை செய்ய முடியும் என மனதளவில் எண்ணினார்கள் இவ்வாறு இவர்கள் எண்ணியதும் புலிகள் கர்ஜிக்கத் துவங்கின. இறைவன் அருள் தூண்ட தியானம் கலைத்த சுவாமிகள் அப் புலிகளை சாந்தம் அடையச் செய்ய அவைகள் புலித் தோல்களாக மாறி விட்டன. பின் தங்களது தவறை உணர்ந்து தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை எடுத்துக் கூறினர்.