இந்த கதையில் வரும் நரஹரி அப்படிப்பட்ட ஒரு வீர சைவர். தங்க நகைகள் செய்யும் விஸ்வகர்மா பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். நகை செய்வதில் அவருக்கு இணை அவரே தான். சிவனைத் தவிர வேறுதெய்வமில்லை என்ற அளவுக்குச் சிவனை மட்டுமே வழிபடும் வீர சைவ மரபில் வந்தவர். ஆனால், வாழ்வதோ பண்டரிபுரம். அங்கே கோயில் கொண்டிருப்பவன் விட்டலன். எனவே, விட்டலனுக்கு விசேஷமான நாள்களில், பக்தர்கள் கோஷமிடும் `விட்டல’ நாமத்தைக் கேட்க மறுத்து அவர் வெளியூர் போய் விடுவார் என்றால் அவர் எப்படிப்பட்ட சைவனாக இப்ருப்பார் பாருங்கள்! அப்படியே இருக்க நேர்ந்தாலும் காதுகளை மூடிக்கொள்வார். நரஹரி ரொம்ப கெட்டிக்கார பொற்கொல்லர். மிகச்சிறந்த நகைகளை தங்கத்தில் வடிப்பவர். நாணயமானவர் என்று பேர் பெற்றவர். பண்டரிபுரத்திலேயே இருந்தும் விட்டலன் கோவில் கோபுரத்தை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார். கழுத்தை ஒடித்து வேறு புறம் திரும்பிக் கொள்பவர். கோவிலுக்கு அருகே அவருக்கு ஏதாவது வேலை இருந்தாலும் கோவிலுக்கு பின் பக்கமாக சுற்றிக்கொண்டு தான் செல்வார்! விடியற்காலையில் பீமாரதி நதியில் குளித்துவிட்டு மல்லிகார்ஜுன சுவாமியை மனதார வழிபாட்டு 24 மணி நேரமும் சிவ சிவ என்று உச்சரித்தக். கொண்டே தன் காரியங்களைப் பார்ப்பார்
கண்ணைக் கட்டிக் கொண்டு அழைத்து வரப்பட்ட நரஹரியை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவன் லட்சியம் பண்ணவில்லை. உள்ளே சென்றான் விட்டலன் முன்னே நிற்க வைக்கப்பட்டான். அளவு நூலை கையில் எடுத்துக் கொண்டான் விட்டலன் உருவத்தை தடவிப்பார்த்தான். இடுப்பில் மெத்து மெத்தென்று தோல் ஸ்பரிசம் பட்டது. நன்றாக தடவினான். துணியில்லை. தோல் தான். இடுப்பை சுற்றி தடவும் போது நான்கு கைகள் இருப்பது உணர்ந்தான். கவனத்தோடு தடவி என்ன என்று சோதித்தான் ஒரு கையில் டமருகம் ஒரு கையில் அக்னி, ஒரு கையில் சூலம், இது என்ன அதிசயமாக இருக்கிறதே? மீண்டும் இடையில் கை வைத்தான். நிச்சயம் இது புலித்தோல் தான். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. “என் மல்லிகார்ஜுனனா இது. விட்டலனிடம் அல்லவோ அழைத்துப் போகப்பட்டேன்?”.