எளியவர்க்கும் செல்வருக்கும் வீடமைப்போமே எல்லவரும் வாழுகின்ற நாடமைப்போமே உளங்குவிந்து கடவுள் வழிபாடுகள் செய்ய ஓங்கிவளர் கோயில்களை ஒளிரச் செய்வோமே!
தச்சர் கொல்லர் தட்டா ரென்பர் தரணி மாந்தரே தளர்வரிய கரும வீரர் புலவர் நாங்களே உச்சமா மலைவிளக்கும் எங்கள் விளக்கே-இசை ஓங்கு நாட்டுக் கொடியும் நாங்கள் தாங்கும் வெற்றியே!
அறுசமயக் கோயி லெங்கே அறநிலை யெங்கே அறிவுடனே தொழில் வளர்க்கும் ஆலய மெங்கே விறுவிறுப்பாய் கலை வளரும் வித்து வானெங்கே வேகப் பொறிகள் எங்கே யெங்கள் வேலை யில்லையேல்!