விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்!

VISHWAKARMA

விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்!

VISHWAKARMA

விஸ்வாஸ் வித்யா 2026& மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது வழங்கும் விழா

விஸ்வாஸ் வித்யா 2026

மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது வழங்கும் விழா

பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 18 அக்டோபர் 2026 அன்று 28ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா மஹா விஸ்வகர்மா ஸ்ரீ விருது வழங்கும் விழா பொள்ளாச்சி படி காலனி மகாலிங்கபுரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் கோவை VSK ஹவுசிங் இந்தியா கட்டுமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிறந்த சமூக பற்றாளர் பிரம்மஸ்ரீ K. பேச்சியப்பன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மஹா விஸ்வகர்மா ஸ்ரீ விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,கல்வி உதவித்தொகைகளும் அளித்து சிறப்புரை வழங்கினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் மங்கல விளக்கேற்றி வைக்க விஸ்வாஸ் ம.தொடர்பு அலுவலர் திரு. அன்பழகன் பாடிய இறைவணக்கத்துடன் விழா துவங்கப் பட்டு விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நல்கிட சிறப்பு விருந்தினர்களுக்கு விஸ்வாஸ் உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டது.

சேவையை விஸ்வாஸ் அமைப்பின் 23 ஆண்டுகால வளர்ச்சியையும், எதிர்வரும் செயல்பாடுகளை குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் முன்மாதிரி தலைவர் திரு. ஆறு, தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் அழகுற எடுத்துரைத்தார். திருச்செங்கோடு PRP ரிக்ஸ் மேலாண் இயக்குனர் பிரம்மஸ்ரீ TT பரந்தாமன் அவர்கள் ஆற்றி வரும் சமூகசேவை பாராட்டி “மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த சமூக சேவை ஆற்றி வரும் விஸ்வகர்மா அமைப்பான சென்னை அகில இந்திய விஸ்வகர்ம பேரவைக்கு விஸ்வகர்ம சேவா பாரதி எனும் சிறப்பு மிகு விருது வழங்கப்பட்டது. விருதினை பொதுச்செயலாளர் மருது கணேஷ் மாணிக்கவேலு தலைவர் குமார் ஆச்சாரியார் பெற்றுக் கொண்டனர். தன்னலம் கருதாமல் கல்விச்சேவை ஆற்றும் கோவை சீராப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஆசிரியை திருமதி லட்சுமி பிரபா அவர்களுக்கு விஸ்வகர்ம உபாத்யாய பாரதி எனும் விருது, விஸ்வகர்மா இளம் தொழில்முனைவோர் விருது திரு. அருண் சீதாராமன் அவர்களுக்கு விழாவின் முதன்மை விருந்தினர் பிரம்மஸ்ரீ K.பேச்சியப்பன் அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது பெற்ற பிரம்மஸ்ரீ TT. பரந்தாமன் அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதின் சிறப்பையும், மாணவர்கள் பெற்றோர்களை எவ்வாறு போற்றி பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் இன்றைய சூழலில் கல்வி, தொழில், தேசபக்தி, அறம் ஆகியவற்றின் அவசியத்தை தனது ஏற்புரையில் தெளிவாகக் கூறியது மிகச்சிறப்பாகும். ரூ. ஒரு லட்சம் விஸ்வாஸ் கல்வி நிதியம் உருவாக்கிய பழனி மாம்பழம் M. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பாராட்டிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.தர்மபுரி அரூர் கீரைப்பட்டி பிரம்மஸ்ரீ கவிஞர் கீரை பிரபாகரன் அவர்கள் சுய ஒழுக்கம்,கல்வி மேம்பாடு, பெற்றோரை மதித்தல், கலாச்சாரம் & பண்பாடு ஆகியன பின்பற்றுதல் போன்ற கருத்துக்களையும் தனது திறனுரையில் வழங்கியது மாணவர்களுக்கு மிகவும் பயனாக அமைந்தது. விழாவில் சாதனை மாணவர்கள் என செல்வன். ராகவ பூபதி, செல்வன்.காஷ்யப் கண்ணா செல்வன் ஐகனாத் தயாதாசன் ஆகியோர் சிறப்பு விருதுகள் பெற்றனர். விருதாளர்கள், விருந்தினர்கள் பரிசு, உதவித்தொகை பெறும் மாணவச் செல்வங்களையும் விழாவின் சிறப்பையும் பற்றி பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு நிர்வாகஸ்தர் திரு. ஏ.டி. கபீர்தாஸ் அவர்கள் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்கள்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விஸ்வாஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்த அளவில் பத்தாம் வகுப்பு & +2 தேறியவர்களில் முதல் மூன்று இடத்திற்கான பரிசுகளும் சிறப்பு மதிப்பெண் பெற்றமைக்காக ஊக்கப்பரிசுகளும், தகுதி அடிப்படையில் மாணவர்கள் மேற்படிப்பு பயில உதவித்தொகைகளும் [சுமார் மூன்று லட்சம் ) வழங்கப்பட்டது. இவ்வாண்டு 99 மாணவ மாணவிகள் பயனடைந்தனர். நிறைவாக விஸ்வாஸ் செயலர் திரு.மதுராந்தகன் அவர்கள் நன்றி நவில பின் நாட்டுப்பண் இசைக்க விழா தேசிய உணர்வோடு இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் மதிய விருந்து அன்புடன் பரி மாறப்பட்டது.

விழாவில் உள்ளூர் மற்றும்  சென்னை, திருப்பூர் கரூர், திண்டுக்கல், திருச்சி, அரக்கோணம் பழனி உள்ளிட்ட பல வெளியூர் சமூக அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஸ்வாஸ் தலைவர், பொதுச்செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட செயற்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

தொகுப்பு:சி எஸ் திருநாவுக்கரசு,பொதுச்செயலாளர் விஸ்வாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *