விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்!

VISHWAKARMA

விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாளம்!

VISHWAKARMA

மஹா விஸ்வகர்மாக்கள்

பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 5 அக்டோபர் 2025 அன்று 22 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி மகாலிங்கபுரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் சென்னை இந்தியன் ஆர்த்தோகேர் சர்ஜிக்கல்ஸ் நிறுவனர் தலைவர் மற்றும் சிறந்த ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ ரெங்கநாதன் நடராஜன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “மஹா விஸ்வகர்மா” விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,கல்வி உதவித்தொகைகளும் அளித்து சிறப்புரை வழங்கினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் மங்கல விளக்கேற்றி வைக்க விஸ்வாஸ் ம.தொடர்பு அலுவலர் திரு. அன்பழகன் பாடிய இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நல்கிட சிறப்பு விருந்தினர்களுக்கு விஸ்வாஸ் உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டது.

விஸ்வாஸ் அமைப்பின் 22 ஆண்டுகால வளர்ச்சியையும், எதிர்வரும் செயல்பாடுகளை குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் முன்மாதிரி தலைவர் திரு. ஆறு. தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் அழகுற எடுத்துரைத்தார்………

Read more

ஶ்ரீஶ்ரீஶ்ரீ விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களின் பஞ்ச வேத சம்ஹிதா என்னும் வேத பகவான் நூலை 10.4.2022 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கனகபுரா வாழும் கலை மையத்தின் தலைமை பீடத்தில் வாழும் கலை மைய நிறுவனர் ஶ்ரீஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

ஸ்வாமிஜி அவர்கள் இந்த பூவுலகை துறக்கும் முன்னர் அவர் எழுதிய இந்த நூலை அவரது சீடர்கள் சிரமேற்கொண்டு இந்த பணியினை சிறப்பாக முடித்துள்ளது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் டாக்டர் திரு கனகராஜன் ஐயா அவர்களும் கோவை விஸ்வபிரம்ம மையத்தின் நிறுவனரும் ஸ்வாமி அவர்களின் சீடருமான ஶ்ரீ தயாதாசன் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த வெளியீடு ஸ்வாமிகளுக்கு மட்டுமல்ல விஸ்வகர்மா சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்

Read more