VISHWAKARMA
VISHWAKARMA

Uncategorized

விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் பொள்ளாச்சி சார்பாக 15.10.2023 அன்று  பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் விஸ்வாஸ் வித்யா 2023 மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பிரபல பின்னனிப்பாடகரும், இசையமைப்பாளருமான பிரம்மஸ்ரீ டி.எல்.மஹாராஜன் அவர்கள் முதண்மை விருந்தினராகக் கலந்து 2023 ஆம் ஆண்டிற்கான மஹாவிஸ்வகர்மா விருதினையும், மாணவச்செல்வங்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த விழாவில் விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு தி.விவேகானந்தன்  அவர்கள் வரவேற்புரை நல்கினார். விஸ்வாஸ் அமைப்பின் இருபதாண்டு கால செயல்பாடுகளையும், நோக்கங்களையும் தலைவர் பிரம்மஸ்ரீ திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
பெங்களூரு விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் பிரம்மஸ்ரீ கே.பி.நஞ்சுன்டி விஸ்வகர்மா அவர்கள் மஹா விஸ்வகர்மா விருதினை பெற்றுக்கொண்டு, நமது விஸ்வகர்ம சமுதாய மக்கள் கல்வி அறிவு சமூக முன்னேற்றத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் குலத்திற்கான அரசு சலுகைகள், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கவனமாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு சமூகத்தை முன்னேற்ற வேண்டும், என சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

Read more

பிரம்மஸ்ரீ டாக்டர் K. கனகராஜ் M.B.B.S., DNB., சக்தி மருத்துவமனை, பென்னாகரம், தர்மபுரி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மாங்குடி மீனாட்சிபுரம் கிராமம், பிரம்மஸ்ரீ மா. காமாட்சி ஆச்சாரி – லட்சுமி, அம்மாள் தம்பதியினருக்கு 1960ல் தவப்புதல்வராகப் பிறந்தவர். டாக்டர் தனது சிறுவயது முதற்கொண்டே பொது மக்களுக்கு மருத்துவ தொண்டாற்ற விரும்பி M.B.B.S., & DNB., பட்டம் பெற்று 1983 முதல் பென்னாகரம், நகரத்தில் சக்தி மருத்துவமனையை நிறுவி அதன் மூலம் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.

இதுகாறும் சுமார் 18000 அறுவை சிகிச்சைகள் செய்ககோடு பல்வகை மருத்துவ சிறப்பு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் பென்னாகரத்தில் சிவசக்தி ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற செவிலியர் பயிலகத்தை சிறப்பாக நடத்தியும்,ஆண்டுதோறும்..

Read more

பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 2 அக்டோபர் 2022 அன்று 19 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி  மகாலிங்கபுரத்தில்  உள்ள விஸ்வகர்மா கல்யாணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் திருநெல்வேலி பரசமய க்கோளரி நாதர் ஆதீனத்தின்  32ஆம் பீடாதிபதி  விஸ்வகர்மா ஜகத்குரு ஶ்ரீலஶ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் முதன்மை விருந்தினராக  கலந்து கொண்டு “மஹா விஸ்வகர்மா” விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகைகளும் அளித்து ஆசியுரை வழங்கினார்கள். முன்னதாக  விஸ்வாஸ்  மகளிர்  மங்கல விளக்கேற்றி வைக்க நிசாரி இசைப்பள்ளி ஆசிரியர் ஶ்ரீ சுரேன் அவர்களின்…

Read more

விஸ்வாஸ் வித்யா 2019 நிகழ்ச்சியின் இணை நிகழ்வாக பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் முற்றிலும் புதிதாக ரூ 25 லட்சம் சிலவில் நவீனப்படுத்தப்பட்ட உணவுக்கூடம், சமையல் அறை & உணவுக்கூட வளாக மேற்கூரை ஆகியவற்றை கர்னாடக நந்தி ஆஸ்ரமம் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்வாமி சிவாத்மானந்த சரஸ்வதி அவர்களும், பெண்ணாகரம் டாக்டர் கனகராஜ் அவர்களும் தங்களது திருக்கரங்களால் திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.

பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தின் பெருமை மிக்க இந்த கல்யாண மண்டபம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றை திறம்பட நிர்வகித்து வரும் பொள்ளாச்சி விஸ்வப்ரம்ம சமூக

Read more

விஸ்வாஸ் வித்யா – 2019

நம் விஸ்வகர்மா சமூக மாணவச்செல்வங்கள் பயனுறும் வகையில் 17 ஆவது ஆண்டு விஸ்வாஸ் வித்யா மற்றும் மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா கடந்த 22 செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி விஸ்வகர்மா மஹாலில் சிறப்பாகநடந்தேறியது.

விஸ்வாஸ் தலைவர் திரு.ஆறு.தர்மபூபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு கர்நாடகா நந்தி மலை ஶ்ரீ ஞானானந்த ஆஸ்ரமத்தின் ஸ்வாமிஜி பூஜ்யஶ்ரீ ஸ்வாமிசிவாத்மானந்ந சரஸ்வதி அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு அரக்கோணம் திரு.ஈ.மாணிக்கவேலு அவர்களுக்கு மஹா விஸ்வகர்மா விருதினை வழங்கி ஆசியுரை அளித்து சிறப்பித்தார்கள் .

Read more